organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக முறையில் நூற்புழு மேலாண்மை

நூற்புழு மேலாண்மை

ரைசோபாக்டீரியா

பயிர்களின் வேர்களால் சுரக்கப்படும் வேதியியல் பொருட்களினால் கவரப்பட்டு வேரினைச் சுற்றியுள்ள மண்ணில் குவிக்கப்படும் பாக்டீரியாக்களை ரைசோபாக்டீரியா என்று அழைப்பர்.

அவ்வாறான பாக்டீரியாக்களில் சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் ஒன்றாகும். இவை பெரும்பாலான பயிர்களில் காணப்படும் வேர் முடிச்சு மற்றும் முட்டைக்கூடு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த வல்லது. இதைப்போலவே, பேசில்லஸ் சப்டில்லிஸ் என்ற பாக்டீரியாவும் நூற்புழு கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

நூற்புழு மேலாண்மையில் உயிர்க்காரணிகள்

பயிர் நூற்புழுக்கள் பரிந்துரைக்கப்படும் உயிரியல் முறை
நெல் நெல் வேர் நூற்புழு, நெல் வெண் நுனி நூற்புழு, இலை நூற்புழு சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் விதை நேர்த்தி (10கி/ கிகி விதை) மற்றும் நட்ட 45, 55 மற்றும் 65ம் நாள் தெளிப்பு(1 கிகி/ ஹெ)
பருத்தி மொச்சை வடிவ நூற்புழு சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் விதை நேர்த்தி (20கி/கிகி விதை) மற்றும் விதைத்த 30ம் நாள் வயலில் 1 கி.கி./ ஹெ. என்ற அளவில் இடுதல்
பயறு வகைகள் முட்டைக்கூடு நூற்புழு விதை நேர்த்தி சூடோ மோனாஸ் ப்ளுரசன்ஸ் (10கி/கிகி விதை) அல்லது டிரைக்கோ டெர்மா விரிடி (4கி/கிகி விதை) அல்லது 2.5 கிகி/ஹெ வயலில் இடுதல்
காய்கறிகள் வேர் முடிச்சு நூற்புழு சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் –நாற்றங்கால் (10கி/கிகி விதை) மற்றும் நடவு வயலில் (2.5கிகி/ஹெ) இடுதல்
எலுமிச்சை எலுமிச்சை நூற்புழு சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் (20கி/மரம்) 4 மாதத்திற்கு ஒரு முறை இடவும்.
திராட்சை வேர் முடிச்சு நூற்புழு சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் (100கி/கொடி) கவாத்து செய்த பிறகு இடவும்.
வாழை வேர் துளைக்கும் நூற்புழு, சுருள்  நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழு சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் மரம் ஒன்றுக்கு 10 கிராம் வீதம் இட வேண்டும்.

இவ்வாறு ஒருங்கிணைந்த முறைகளைக் கடைப்பிடித்து நூற்புழுக்களின் தாக்கத்தைக் குறைத்து பயிர்களில் நூற்புழுக்களினால் ஏற்படும் மகசூல் இழப்பினைத் தவிர்த்திடலாம் என்பதில் ஐயமேதுமில்லை.

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016