விதை
organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண் நுட்பங்கள்

சாகுபடி முறைகள்

நாற்றங்கால் பாத்தி தயார் செய்தல்

ஒரு எக்டருக்கு தேவையான நாற்றுக்களை வளர்க்க 800 மீ2 நாற்றங்கால் பகுதி போதுமானது. நாற்றங்காலை நன்கு உழுத பிறகு, வேம்பு இலைகளை அந்த மண்ணின் மேல் பரப்பி விட வேண்டும்.

இந்த இலைகளை 6-7 நாட்கள் வரை தண்ணீரில் மட்க விட வேண்டும். இலைகள் நன்றாக மட்கிய பிறகு, அந்த நிலத்தை மறுபடியும் நான்கு முறை உழுது, சமன் செய்ய வேண்டும். வேம்பு இலைகள் கிடைக்காத பட்சத்தில் 8-10 கிலோ வேப்பம் பிண்ணாக்கு மற்றும் 10-15 கிலோ மண்புழு உரம் கடைசி உழவின் போது இட வேண்டும். பின் நிலத்தை சமன் செய்து, விதைகளை விதைக்க வேண்டும். பண்ணைக் குப்பைகள் மற்றும் சருகுகளை நாற்றங்கால் பாத்தியில் போட்டு எரிக்க வேண்டும். எரியும் பொழுது உண்டாகும் வெப்பத்தினால் மண்ணில் உள்ள கிருமிகள் அழிவதோடு, சாம்பல் சத்து மண்ணில் சேர்க்கலாம். நாற்றங்கால் தயார் செய்யும் பொழுது ஆடதோடா வேசிக்கா இலைகளை ஒருங்கு கூடி  மண்ணில் இட வேண்டும். இது மண்ணின் வளத்தை அதிகரிக்கும். இது பூச்சிக் கொல்லியாக செயல்படுவதோடு, நாற்றுக்களை எளிதாக பிடுங்குவதற்கும் வழி வகுக்கிறது.

குறிப்பு: நாற்றங்காலில் தொழு உரம் இட்ட பிறகு களைகள் அதிகமாக முளைத்தால், இதை தவிர்த்து விடலாம்.

நாற்றங்காலில் தீதை விளைவிக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களின் மேலாண்மை

பூச்சிகளான பச்சை தத்துப்பூச்சி, பச்சை கொம்பு புழு மற்றும் நோய்களான பழுப்பு இலைப்புள்ளி நோய், குலைநோய் போன்றவை நாற்றங்காலில் உள்ள நாற்றுக்களைத் தாக்குகின்றன. இதனால், பயிர் ஆரம்ப நிலையிலேயே தாக்கப்படுகின்றன. இதைத் தவிர்க்க 10 சதவிகிதம் மாட்டு கோமியத்தை ஏழு நாட்கள் இடைவெளியில் நோயின் ஆரம்ப காலத்திலேயே இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
நாற்றுக்களை பறிப்பதற்கு முன்னர், நாற்றங்காலில் நீர் பாய்ச்ச வேண்டும். மேலும் 15-20 கிலோ ஜிப்சம் இடுவதால் குருத்து வேர் சேதத்தைத் தடுக்கலாம்.

உயிர் உரங்கள் இடுதல்

நாற்றுக்களை பறிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர், 205 கிலோ/எக்டர் அசோஸ்பைரில்லத்தை 25 கிலோ தொழுஉரத்துடன் கலந்து நாற்றங்காலில் இட வேண்டும். நாற்றுக்களை 30 நிமிடங்கள் வரை நாற்றங்காலில் மூழ்கும் நிலையில் வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.

நடவு வயல் தயாரிப்பு

நடவு வயல் தண்ணிர் பாய்ச்சி பல முறை உழவு செய்ய வேண்டும். வரப்புகளின் வழியே நீர் கசிவதைத் தடுக்க, வரப்புகளை அழகாக வெட்டி, பூச வேண்டும். வயலில் உள்ள எலி ஓட்டைகளை அடைக்க வேண்டும். நிலக்கடலை (அல்லது) வேப்பம் பிண்ணாக்கு (15 குவிண்டால் /எக்டர்) கடைசி உழவின் போது அடியுரமாக இட்டு, நிலத்தை சமன் செய்து பின் விதைக்க வேண்டும். கடைசி உழவின் போது காய்ந்த சாண எரு மற்றும் சாம்பல் கலந்த கலவையை ஒரே சீராக நிலத்தில் பரப்பி விட வேண்டும். இது மண்ணில், காற்றோட்டம் மற்றும் நுண்ணுயிரிகளை அதிகரிக்க உதவும்.

நாற்றுக்கள் நேர்த்தி

நெல் நாற்றுக்களை, சாம்பல் மற்றும் வேம்பு வரை கலவையைக் கொண்டு நடுவதற்கு முன்னர் நேர்த்தி செய்ய வேண்டும். இதற்கு, நாற்று கட்டுகளை ஒரு சிறு பாத்தியில் உள்ள தண்ணீரில் சாம்பல் மற்றும் பொடி செய்த வேம்பு விதைகளை போட்டு அதில் 30 நிமிடங்கள் அரை மணி நேரம் வைத்திருக்க வேண்டும். 1 கிலோ சாம்பல் மற்றும் 500 கிராம் வேம்பு விதை 50 நெல் நாற்று கட்டுகளை நேர்த்தி செய்ய போதுமானது. இதன் மூலம் நோய் மற்றும் பூச்சிகளின் தாக்குதல் இல்லாத நாற்றுக்களை உற்பத்தி செய்ய முடியும்.

நிலக்கடலை மற்றும் வேப்பம் பிண்ணாக்குகளை தண்ணீரில் முழு இரவு ஊற வைத்து பின் வடிகட்ட வேண்டும். நாற்றுக்களை இந்த கரைசலில் நனைத்து பின் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு பின் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் இந்த நாற்றுக்களை பூச்சிகளின் தாக்குதல் இருந்து பாதுகாக்கலாம்.

நெல் நாற்றுக்களை அமிர்த சரைசல் / பஞ்ச காவ்யா / ஜீவாமிர்தக் கரைசலில் நனைத்தும் நடவு செய்யலாம்.

நடவு முறை

நெல் நாற்றுக்களை, 3 செ.மீ ஆழத்தில் ஒரு குத்துக்கு 2-3 நாற்றுகள் வீதம் நட வேண்டும். நெல் இரகங்களுக்கு ஏற்றவாறு நாற்றுகளின் நடவு இடைவெளி வேறுபடும். நடவுக்கு முன்னர், நாற்றுகளின்  நுனிகளை கிள்ளி விட்டு நட வேண்டும். இந்த முறை சீரான வளர்ச்சியை துரிதப்படுத்துவதோடு, இலையின் நுனியில் உள்ள பூச்சி மற்றும் முட்டை  கூடுகளை அழிக்க உதவும்.

குறிப்பு

வயது முதிர்ந்த நாற்றுகள், குறைந்த தூர்கள் விடும் நெல் இரகங்கள், அதிக அமில காரத்தன்மை உள்ள மண் ஆகியவற்றில் நடவின் போது நாற்றுக்களின் இடைவெளியை குறைத்து நட வேண்டும். மேலும் ஒரு குதுதுக்கு 5-7 நாற்றுக்களை நட வேண்டும்.

இடைவெளி

குறைந்த கால நெல் இரகம் - 15×10 செ.மீ
மத்திய கால நெல் இரகம் - 20×10 செ.மீ
நீண்ட கால நெல் இரகம் 20×15 செ.மீ

களைகள்

களைகள், நெற்பயிருடன் போட்டியிட்டு அதிக ஆற்றல், தண்ணீர் மற்றும் தாவரத்தின் ஊட்டச்சத்துக்களை எடுத்து விடும். பொதுவாக, களைகள் நன்செய் நிலத்தைக் காட்டிலும் மேட்டு நில நெல் சாகுபடியில் அதிகம் காணப்படுகின்றன. கைமுறையாக களையெடுக்க வேண்டும். மேலும் எடுக்கப்பட்ட களைகளை வயலில் போட்டு மிதிக்க வேண்டும். நடவு செய்த 15-20 ஆம் நாளில் முதல் களையெடுக்க வேண்டும். வேப்பம் பிண்ணாக்கு 50 கிலோ வயலில் இட வேண்டும். களைகள் முளைத்து, பயிர்களுக்கு சேதாரம் அளிக்கும் நிலையில் தொடர்களையெடுக்க வேண்டும். ஆரம்ப தழைப் பருவ காலத்தில் களைகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வயலில் 5-8 செ.மீ உயரத்திற்கு தண்ணீர் நிறுத்தி வைக்க வேண்டும். நடவு முறை நெல் வயலில் பொதுவாக காணப்படும் களைகள் கீழே கொடுக்கப்ட்டு உள்ளன.

எக்கினோகுளோவ கொலேனம், எக்கினோகுளோவ கிரஸ்கள்ளி, சைப்ரஸ் கிரியா, எக்லிப்டா ஆல்பா, செலோஸ்சியா அர்ஜென்டினா, டேக்டிலாக்டாமியம், செட்டேரியா கிளாக்கா, மேனோகாரியா, சைப்ரஸ், டியார்மிஸ், ஸ்கிர்ப்பஸ், ஃபிம்ரிஸ்டைலிஸ் லிப்டோராலிஸ், மார்சிலியா குவாடிரியோளியா முதலியன.

எருக்கு இலையை பசுந்தாள் உரமாக இட மார்சிலியா குவார்டிபோலியா களைகளைக் கட்டுப்படுத்தலாம். மேலும் தென்னை நார் (25 கூடைகள் /எக்டர்) இடுவதாலும் இந்த களையைக் கட்டப்படுத்த முடியும்.

நிலத்தை தயார்படுத்தும் பொழுது, ஸ்ட்ரிச்னஸ் நகஸ் – வாமிகா (வசக் கொடடை) இலைகள் மற்றும் கிளைகளை மண்ணில் போட்டு மடக்கி விட வேண்டும். இதுவும் களைகளை கட்டுப்படுத்த உதவுகிறது.

Updated on : March 2015

 

முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-16