விதை
organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண் நுட்பங்கள்

அறுவடை

தானியற்கள் முழுமையான முதிர்ச்சி அடைந்த பிறகு அல்லது இலைகள் மஞ்சள் நிறமாக மறரி வைக்கோலாக மாறும் பொழுது அறுவடை செய்ய வேண்டும். உரிய காலத்தில் அறுவடை செய்தால் நல்ல தரமான நெல் தானியம், நுகர்வோர்கள் எளிதாக ஏற்றுக் கொள்ளும் விதமாகவும், அரைவையின் போது குறைவாக உடையும் வாய்ப்பு உள்ளது. நெல் தானிய ஈரப்பதம் 20-22% மற்றும் 80% கதிர்கள், 80% பழுத்த தானியங்களைக் கொண்டிருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும். இதற்கு மேல் தாமதமானால், எலிகள், பறவைகளின் மூலம் தானியங்கள் சேதமைடயும். மேலும் நெல் மணிகள் பயிரிலிருந்து சிதறும் மற்றும் நெற்கதிர்கள் சாய்ந்து விடும். நெற்பயிர், ரம்பம் பல் கொண்ட அரிவாள் பயன்படுத்தி அறுவடை செய்யப்படுகிறது. நெற்கதிர்களை தரைக்கு நெருங்கிய அளவில் விட்டு அறுவடை செய்து பின் ஓரிரு நாட்கள் காய விட வேண்டும். பின் நெற்கதிர்களை கட்டுகளாக கட்டி கதிர் அடிக்கும் களத்தில் அடுக்கி வைக்க வேண்டும்.

அறுவடை பின்சார் மேலாண்மை உத்திகள்

உலர்த்துதல்

நெல் தானியங்களை சூரிய ஒளியில் நேராக உலர்த்தினால், அறுவடையின் போது தானியங்கள் உடைய நேரிடும். நிழலில் படிப்படியாக உலர்த்தும் முறை இன்றியமையாததாக கருதப்படுகிறத. அரைப்பதற்கு முன்னர் ஈரப்பதத்தை 13-14%க்கு கொண்டு வர வேண்டும்.

கதிரடித்தல்

எருதுகளைக் கொண்டு மிதித்தல், மனித கால்களை வைத்து தேய்த்தல் அல்லது நெற்கதிர்களை ஒரு மரப்பலையின் மேல் வைத்து அடித்தல் போன்ற முறைகளில் நெற்கதிர்கள் பொதுவாக கதிரப்பப்படுகின்றன.

பெரிய பண்ணைகளில் மிதி கதிர் அடிக்கும் இயந்திரம் அல்லது மின்சாரம் கொண்டு இயங்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிறிய பண்ணைகளில் நெற் கதிர் அடித்தல், இன்றும் ஒரு பெரும் பிரச்சனையாகவே உள்ளது.

அரைத்தல்

அறுவடைக்குப் பின் உள்ள பொருள், நெல் / தானியம் என்றழைக்கப்படும். இந்த கடின நெல் சாப்பிட பயன்படுத்தும் முன் அரைக்க வேண்டும். அரைத்த நெல்லில் இருந்து உமியை நீக்கிவிட்டால் அது வெள்ளை நிறமாகவும், ஒளி ஊருவிச் செல்லும் வகையில், கண்ணாடி போன்று பளபளப்பாகவும் இருக்கும். அரிசிபின் அளவைப் பொறுத்து பெரிய அரிசி, உடைந்த அரிசி, வெற்று அரிசி என்று பிரிக்கப்படுகின்றது.

சேமித்து வைத்தல்

அரிசி மூட்டைகளை சரியாக சேமித்து வைக்காவிட்டால், அறையில் உள்ள ஈரப்பதத்தினால் அரிசயை பூஞ்சாணம் தாக்கிவிடும் அதன் நிறத்தை மாற்றி இதனால் துர்நாற்றம் கசப்பான சுவை  உருவாகும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க, இயந்திர முறையில் அரிசியை உலர்த்த வேண்டும். வளர்ந்த நாடுகளில், இயந்திர கலன்கள் மற்றும் பெரிய அளவில் சேமிப்பு அறைகள் உள்ளதால் விவசாயிகள் இந்த வசதியை வாடகைக்க எடுத்து கொண்டு பயன் பெறுகின்றனர். இந்த முறை நம் நாட்டிலும் பயன்படுத்தப்பட வேண்டும். இதற்குப் பதிலாக, ஒவ்வொரு மாவட்டங்கள் (அ) வட்டங்களில் பொருளாதார மற்றும் திறன் வாய்ந்த சேமிப்பு அறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பாரம்பரிய முறை சேமிப்பு தொழில்நுட்பங்கள்

“ஆம்பரம்” என்ற பாரம்பரிய முறை நெல் சேமிப்பு கலன் தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களில் கடந்த நூறு வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கட்டமைப்பு திறந்த வெளியில் கட்டி, நெல் தானியங்களை இதில் ஒரு வருடத்திற்கும் மேலாக சேமித்து வைக்கலாம். பாரம்பரிய நெட்டை ரகங்களான சம்பா மொசானம், காப்பகார், குள்ளக்கார் மற்றும் வைகுண்டா போன்றவற்றின் வைக்கோலைக் கொண்டு ஆம்பரம் தயாரிக்கப்படுகிறது. ஆம்பரம்  8 டன் கொள்ளளவில் கட்டுவதற்கு, முதலில் மண்ணை 1 அடி உயரம் மற்றும் 6 அடி அகலத்திற்கு குவிக்க வேண்டும். தேவைக்கேற்ற அளவுகளில் இதனை கட்டிக் கொள்ளலாம். இரண்டு அங்குல உயரத்திற்கு வைக்கோலை பரப்பி அதன் மேல் பழைய சாக்குப் பைகளை பரப்ப வேண்டும்.

 

Updated on : March 2015

 

முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-16