விதை
organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண் நுட்பங்கள்

நீர் தேவை

நாற்று நடவின் போது குறைந்தபட்சம் 2 செ.மீ அளவு நீரானது வயலில் இருக்க வேண்டும். நெல் வயலில் எப்பொழுதும் தண்ணீர் தேங்கியிருக்க வேண்டும். நடவு செய்த 10 ஆம் நாளில் இருந்து, பயிர் பருவ நிறைவு அடையும் காலம் வரை குறைந்தபட்சம் 3 செ.மீ நீர் வயலில்  இருக்கச் செய்ய வேண்டும். சதுப்பு வயலில் மேலுரம் இடுவதைத் தவிர்க்கவும். உரமிடுவதற்கு முன் வயலில் அதிகமாக உள்ள நீரை வடித்து, நிலத்தை உலரச் செய்ய வேண்டும். உரமிட்ட பின் வயலை உடனடியாக நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

செம்மண் மற்றும் மணலில் அதிக நீரின் தேவை இருப்பதால் அடிக்கடி நீர்ப்பாசனம் செய்ய வேண்டி இருக்கும். இதை சரி செய்ய ஐபோமியா பிஸ்டுலா தாவரத்தை மண்ணில் உட்புகுத்த வேண்டும். இந்த தாவரங்கள் அழுகிய நிலைக்கு வரும் பொழுது மண்ணின் நீர்பிடிப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது.

நீர்ப்பாசனம்

நடவு செய்த 10 நாட்களில் மழை பெய்தால், நீர்பாசனம் செய்ய தேவையில்லை. வெள்ளப்பாசனம் களைகளை கட்டுப்படுத்தவும், பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் மற்றும் சிலிக்கா போன்ற ஊட்டச் சத்துகளின் நிலைப்புதன்மையை அதிகரிக்கவும் செய்யப்படுகிறது. முக்கியமான காலங்களில் நீர் பாய்ச்சுதல் அவசியம். அவை

  1. முதல்நிலை நாற்றுப்பருவம் (10 நாள்)
  2. தூர் விடும் பருவம் முதல் பூக்கும் பருவம் வரை
  3. பூட்டை வரு நிலைமுதல் பூக்கள் மலரும் காலம் வரை.

நடவு செய்யப்பட்ட நாற்றுகள் நன்றாக வளரும் வரை, வயலில் 2.5 செ.மீ உயரம் வரை நீர் பாய்ச்சுதல் அவசியம். அதற்கு பிறகு 5 செ.மீ நீர் வயலில் நிறுத்தி வைக்க வேண்டும்.

மண்வகைகளுக்கு ஏற்றவாறு அறுவடைக்கு 7-15 நாட்களுக்கு முன்னர் மண்வகைகளுக்கு ஏற்றவாறு, வயலில் இருந்து நீரை அப்புறப்படுத்த வேண்டும். இதனால் நெல் மணிகள் வேகமாக முதிர்தல் நிலையை அடையும்.

கவாத்து செய்தல்

நடவு செய்த இரண்டு மாதத்திற்கு பிறகு, நெல் நாற்றின் நுனிப்பகுதியை, அரிவாள் கொண்டு நறுக்கி விட வேண்டும். இது பயிரின் அதி வளர்ச்சியை குறைத்து, அடிப்பகுதியை வலிமை பெறச் செய்யும். இதனால் முதிர்ச்சியின் போது, நீர் தேக்கத்தினால், நெற்பயிர் சாய்வதைத் தவிர்க்கலாம்.

Updated on : March 2015

 

முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-16