organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண் நுட்பங்கள்

இயற்கைவழி வேளாண்மை முறையில் நிலக்கடலை உற்பத்தி

மண்

  • செம்மண் அல்லது மணல் கலந்த கருமை மண்

பரிந்துரைக்கப்பட்ட இரகங்கள்

  • கோ 3, கோ 4, டி எஸ் ஆர் 1, ஏ எல் ஆர் 2, ஏ  எல் ஆர் 3, வி ஆர் ஏ  2, டி எம் வி 2, டி எம் வி 7 (குத்து இரகம் 105-110 நாட்கள் வயது)

பருவங்கள்

  • ஏப்ரல் – மே, ஜீலை-ஆகஸ்டு, டிசம்பர்-ஜனவரி

விதை அளவு

  • விதையின் பரிமாணத்தையும் இடைவெளியையும் பொறுத்து 100 கிலோ/ எக்டர்

இடைவெளி

  • 30  ×  30 செ.மீ (15  ×  15 செ.மீ. மணபாங்கான நிலத்திற்கு)

விதை நேர்த்தி

  • 4 கிராம்/ கிலோ விதை என்ற அளவில் டிரைக்கோடெர்மா விரிடி (டிவி) அல்லது 10 கிராம்/கிலோ சூடோமோனாஸ் ஃப்ளோரஸ்ஸன்ஸ் என்ற பொருளுடன் விதை நேர்த்தி செய்யவும். (இது வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்தும்)
  • 2 பொட்டலங்கள் (400 கிராம்) ரைசோபியம் மற்றும் 400 கிராம் பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர்க் கலவையை வடிகஞ்சியுடன் கலந்து விதையில் சீராகப் பரவும்படி செய்து பின்னர் விதைக்கவும்.

உரமிடுதல்

  • தொடிப்புழுதி உண்டாகும் வரை நன்கு உழவு செய்யவும். இறுதி உழவிற்குப் பிறகு எக்டருக்கு 25 டன்கள் தொழுஉரம் அல்லது 10 டன் சாண எரு அல்லது 1 டன் வேப்பம் புண்ணாக்கு அல்லது 2.5 டன்கள் மண்புழு கழிவை உரமாக இடவும். பசுந்தளை உரமிடுவதாயின் குறைந்து 10 டன்கள் (உளர் நிலையில்) இட்டு உழ வேண்டும்.
  • விதைத்த பிறகு 45 நாட்கள் கழித்து 400 கிலோ ஜிப்சம் இடவும். அதற்குப் பிறகு மண் அணைக்கவும் (சுண்ணாம்புச்சத்தும் கந்தகச்சத்தும் குறைவாக இருக்கின்றபொழுது ஜிப்சம் இடுதல் மிக அவசியம்).

நீர்ப்பாசனம்

செடி வளர்ச்சிப் பருவம்

முதல் பாசனம் : விதைப்பிற்கு பிறகு உடனடியாக
இரண்டாவது  : விதைப்பிற்கு 5 நாட்கள் கழித்து

பூக்கும் பருவம்

மூன்றாகவது பாசனம : விதைப்பிற்கு 20 நாட்கள் கழித்து
நான்காவது பாசனம : விதைப்பிற்கு 30 நாட்கள் கழித்து
விழுது முளை விடும் பருவம்
ஐந்தாவது பாசனம்  : விதைப்பிற்கு 40 நாட்கள் கழித்து
ஆறாவது பாசனம : விதைப்பிற்கு 50 நாட்கள் கழித்து

காய் பிடிக்கும் பருவம்

ஏழாவது பாசனம் : விதைப்பிற்கு 60 நாட்கள் கழித்து
எட்டாவது பாசனம் : விதைப்பிற்கு 70 நாட்கள் கழித்து
ஒன்பதாவது பாசனம் : விதைப்பிற்கு 80 நாட்கள் கழித்து
பத்தாவது பாசனம : விதைப்பிற்கு 105 நாட்கள் கழித்து
பதினொன்றாவது பாசனம : விதைப்பிற்கு 110 நாட்கள் கழித்து அறுவடை

(மண்ணின் ஈரத்தன்மையையும் மழையையும் பொறுத்து நீர்ப்பாசனம் நெறிப்படுத்தப்பட வேண்டும். அதிக ஈரம் செடிகளின் அதிக வளர்ச்சிக்கு ஏதுவாகி காய்கள் நீரில் நனையும் நிலையை ஏற்படுத்தும்)
பூச்சி நிர்வாகம்
நிலக்கடலைியல் பூச்சிதாக்குதல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வயலைச் சுற்றி பொறிப்பயிர்களான ஆமணக்கு, அகத்தி ஆகியவற்றை உயர்வேலி போல் உருவாக்க வேண்டும். இவை இலைச்சுருட்டுப்புழு, சிவப்புக் கம்பளிப்புழு ஆகியவற்றிறன் வருகையை உடனடியாகக் கண்டுனர உதவும்.
சுருள் பூச்சி

  • இடைப்பயிராக 4:1 என்ற விகிதத்தில் வெள்ளரியைப் பயிரிடவும். நிலப்பாகத்தில் இரவு 8 முதல் 11 மணி வரை விளக்குப் பொறி அமைக்கவும்.
  • கடலைக்கு உள்ளே சந்து வெளிச்சாகுபடியாக கிழக்கு மேற்காக 15 முதல் 20 அடி இடைவெளியில் கம்பு விதையை சாலில் விதைக்கவும்.

வேர் அழுகல்  நோய்

  • டிரைக்கோடிடர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் ஃப்ளோரஸ்ஸன்ஸ் 10 கிராம் /1 கிலோ விதைக்கு என்ற விகிதத்திலும் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யலாம்.
  • 50 கிலோ தொழு உரம் அல்லது 50 கிலோ மணல் ஆகியவற்றுடன் 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி அல்லது சூடோமோனாஸ் ஃப்ளோரஸ்ஸன்ஸ் கலந்து விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு மண்ணில் இடவும்.

இலைப்புள்ளிநோய் (துருநோய்)

  • நோய் அறிகுறி தோன்றியவுடனே ஃபூசேரியம் க்ளேமிடோஸ் போரியம் என்ற நுண்ணுயிரிச் சாற்றை அல்லது அதன் விதை மிதப்பினைத் தெளிக்கவும்.

மொக்கு அழிவு வைரஸ் நோய்(பட் நெக்ரோசிஸ் வைரஸ்)

  • கீழ்க்கண்ட ஒருங்கிணைப்பு பாதுகாப்பு முறையைப் பின்பற்றவும்.
  • நோய் தாக்குதலுக்கு ஏதுவான பயிர்களாகிய சோயாபீன், தக்காளி, கத்தரி, மிளகாய் ஆகியவற்றை அருகில் பயிரிடக் கூடாது.
  • நெருக்கி விதைக்கவும் ( 15 ×15 செ.மீ.)
  • விதைப்பிற்குப் பிறகு 6 வாரங்குள்ககு நோய் தாக்கப்பட்ட செடிகளை அழிக்கவும்.
  • தென்னை அல்லது சோளம் இலைகளின் சாற்றை (10%) விதைப்பதற்குப் பிறகு 15 ம் நாள் மற்றும் 30ம் நாளில் தெளிக்கவும் (இவற்றிற்கு நச்சுயிரியைக் கட்டுப் படுத்தும் தன்மை உள்ளது)

அறுவடை

  • சரியான தருணத்தில் போதுமான ஈரம் மண்ணிலிருக்கும் பொழுது அறுவடை செய்யவும்.
  • அறுவடைக்குப் பிறகு கடலைக்கொடியை நீண்ட நாட்களுக்கு வயலில் விட வேண்டாம். (இது காளான், பூஞ்சாணம் தோன்றுவதையும், விதைமுளைப்பபைத் தடுக்கவும் பயன்படும்)
  • அதிகமான சூரிய வெளிச்சத்தில் நிலக்கடலைலையக் காய வைக்கவேண்டாம். (இது விதை முளைப்பதைக் குறைத்து விடும் என்பதற்காக)

சேமிப்பு

தரையிலிருக்கின்ற ஈரம் தாக்காதவாறு தரைக்குமேல் வறண்ட மணலைப் பரப்பி அதன் மீது நிலக்கடலை மூட்டைகளை அடுக்கவும். இது விதையின் முளைக்கும் திறனையும் கால அளவையும் அதிகரிக்கச் செய்யும்.

இலைப்பேன், அசுவினி, சுருள் பூச்சி, சிகப்புக் கம்பளிப் புழு போன்றவை தாக்குவதற்கு முன்பாகவே பூச்சிவிரட்டிக் கரைசல் தயாரித்துப் பயன்படுத்த வேண்டும். இது தவிர டிக்கா இலைப்புள்ளி நோய், துரு நோய் ஆகியவை கடலையில் தாக்கக் கூடும். இதற்கு பின்வரும் செடிகளின் கரைசல் தயாரித்துப் பயன்படுத்த வேண்டும்.

  • சோற்றுக் கற்றாழை இலை : 5 கிலோ
  • எருக்கு அல்லது ஊமத்தை இலை : 3கிலோ
  • சீதா அல்லது உன்னிமுள் இலை : 3 கிலோ
  • நொச்சி அல்லது பீச்சங்கு இலை : 3 கிலோ
  • வேம்பு அல்லது ஆடுதொடா இலை : 3 கிலோ
  • மஞ்சள் தூள : 500 கிராம்
  • வேப்பம் விதை : 500 கிராம்

ஊமத்தங்காய் 20 எண்ணம் அல்லது தங்க அரளிக்காய் 40 எண்ணம் அல்லது லில்வக்காய் 15 எண்ணம் ஆகியவற்றை நன்க இடித்து 15 லிட்டர் மாட்டுச் சிறுநீருடன் கலக்க வேண்டும். இத்துடன் 3 கிலோ சாணத்தைக் கலந்து கரைசலில் ஊறவிட வேண்டும். ஏழு நாட்கள் கழித்து எடுத்து 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் கரைசல் என்ற அளவில் கலந்து பயன்படுத்த வேண்டும்.

இத்துடன் பத்து லிட்டர் நீரில் ஆவட்டம் 200 மிலி அல்லது தேமோர் அல்லது அரப்பு மோர் கரைசல் 600 மிலி வரைக் கலந்து பயன்படுத்தலாம்.
பூக்கும் சமயத்தில் 10 லிட்டர் நீரில் மீன் அமினோ அமிலம் 10 மிலி என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.
நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டை நீக்க பின்வரும் திகளை சாறமாக்கிக் கொடுக்கலாம்.

  • சீமைக்கொன்றை (கிளைரிசீடியா) : 1 கிலோ
  • எருக்கு (அ) ஊமத்தை : 1 கிலோ
  • ஆவாரை : 1கிலோ
  • சோற்றுக் கற்றாழை : 1 கிலோ
  • உன்னிச்செடி : 1 கிலோ

இவற்றைச் சிறு துண்டுகளாக்கி இடித்துக் கொள்ள வேண்டும். இத்துடன் நாட்டு வெல்லம் 4500 கிராம் மற்றும் பெருக்கப்பட்ட திறமி 500 மிலி சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் 10 லிட்டர் நீரில் ஊறவைக்க வேண்டும். ஏழு நாட்கள் கழித்து 10 லிட்டருக்கு 100 மிலி வரை கலந்து தெளிக்க வேண்டும். அல்லது பாசன நீரில் கொடுக்க வேண்டும்.

மற்றொரு முறையில் 50 லிட்டர் நீரில் 5 கிலோ கெட்டுப்போன பழங்களைச் சேர்த்து அத்துடன் பெருக்கமடையப் பெற்ற திறமி 300 மிலி சேர்த்து 7 நாட்கள் ஊற விட வேண்டும். 7 ஆம் நாள் இரவு சூடோடோனஸ் புாளரசன்ஸ் 200 கிராம் சேர்த்து மேலும் ஒரு நாள் ஊறவிட வேண்டும். பின்னர் வடிகட்டி 10 லிட்டர் நீரில் 5 லிட்டர் கலந்து தெளிக்கலாம்.
சிவப்புக் கம்பளிப் புழுத் தாக்குதல் அதிகம் இருந்தால் மேலே சொன்ன கரைசலுடன் என்.பி.வைரஸ் என்ற நச்சுயிரியைக் கலந்து (ஏக்கருக்கு 500 மிலி) தெளிக்க வேண்டும்.

மேலும் பூச்சிகள் இருந்தால் ஜப்பானிகம் அல்லது சைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணி ஏக்கருக்கு இரண்டு சி.சி. என்ற அளவு கட்டிவிட வேண்டும். புழு ஒட்டுண்ணியான பிரக்கானிட் குளவியை விதைத்த 30 நாள் இடைவெளியில் இரண்டு முறை கட்ட வேண்டும்.
ஓட்டுண்ணி கட்டும்போது 2 அடி உயரத்தில் ஆங்காங்கே படத்தில் உள்ளவாறு குச்சிகள் நட்டு பிளாஸ்டிக் குவளைகளை தலை கீழாக கட்டித் தொங்கவிட்டு ஒட்டுண்ணி அட்டைகளைக் கட்ட வேண்டும்.

இவ்வாறு இயற்கை முறையில் நிலக்கடலைச் சாகுபடிச் சிறப்பாக செய்யலாம்.

Updated on Nov 2014