organic farming
அங்கக வேளாண்மை :: தோட்டப் பயிர்கள்

வனிலாவின் அங்கக சாகுபடி

கடந்த சி வருடங்களாகத்தான் வனிலா ஒரு புதிய நறுமண மலராகக் கண்டறியப்பட்டுள்ளது.வனிலா ஒரு வெப்ப மண்டல ஆர்கிட் வகையாகும்.அதனுடைய வாசனைக்காக சாகுபடி செய்யப்படுகிறது.சுத்தம் செய்யாத வனப்பகுதி வனிலா சாகுபடிக்கு ஏற்றது.இந்த மாதிரி இடங்களில் இயற்கையாக உள்ள மரங்களின் நிழலை அப்படியே பாதுகாக்க வேண்டும்.வனிலா பலதரப்பட்ட மண் வகைகளான மணல் கலந்து இரும்பொறை முதல் சலவைக் கற்கள் உள்ள மண்களில் சாகுபடி செய்யலாம்.வனிலா தனிப்பயிராகவோ ஊடுபயிராவோ காபி, தென்னை, பாக்கு, மிளகு மற்றும் பலவற்றுடன் சேர்த்து சாகுபடி செய்யப்படுகிறது. 25 மீட்டர் இடைவெளிவிட்டு தனித்து பயிரிட வேண்டும்.முழுமையான அங்ககப் பயிராக மாற்றுவதற்கு மூன்று வருட காலமாகும்.புதிதாகப் பயிரிடப்படும் வனிலாவுக்காகஎந்தவிதமான இரசாயன இடு பொருளையுமட பயனடபடுத்தக்கூடாது.

பயிரிடத் தேவையான மூலங்கள்

நோயற்ற மற்றும் ஆரோக்கியமான வனிலாத் துண்டுகளை சாகுபடி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.திசு வளர்ப்புச் செடிகளை பயிரிட பயன்படுத்தக் கூடாது. 

நிலத்தை தயார் செய்தல் மற்றும் பயிரிடுவதற்கான அடிப்படைத் தேவைகள்

பயிரிடுவதற்கு கொடியோ நிலையான அமைப்போ பயன்படுத்தலாம்.

வனிலாத் துண்டுகள்

அடியில் 3-4 இலைகளுடன் கூடிய வனிலாத் துண்டுகளை எடுத்து,நிழலினல் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். கொடியிலிருந்து உதிர்ந்த இலைகளை மண்ணின் மீது பரப்பிவிட வேண்டும்.வனிலாத் துண்டின் அடி நுனி மண்ணிற்கு மேலே இருக்குமாறு வைப்பதால் அழுகுவதைத் தடுக்கலாம்.மறுமுனை மெதுவாக கட்டப்பட வேண்டும்.செடியின் அடிப்பாகத்தில் முடாக்கு செய்து, நிழல் படுத்த வேண்டும்.

உழவியல் முறைகள்

வனிலாத் தோட்டத்தை முறையாக பார்வையிட்டு,கொடிகளை ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு வந்தபின் படரவேண்டும்.எப்பொழுதும் இலை மூடாக்கல் செய்ய வேண்டும். எந்த உழவியல் முறைகள் மேற்கொண்டாலும் வேற்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாதவாறு செய்ய வேண்டும்.தேவைப்படும் பொழுது களையெடுக்க வேண்டும். 125 முதல் 150 செ.மீ உயரத்திற்கு துணை நிற்கும் மரங்கள் வளர்ந்தவுடன் கவாத்து செய்து,குடை போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.அதிக மழையின் போது கவாத்து செய்ய வேண்டும்.வனிலாக் கொடிகளை 1.2 முதல் 1.5 மீட்டர் உயரத்திற்கு வளர விட வேண்டும்.

உரமிடுதல்

அங்கக உரங்களை மட்டுமே இட வேண்டும். மட்கி சிதைந்த அங்கக பொருட்களை வருடத்திற்கு 2 முதல் 3 முறை இட வேண்டும். எலும்புத்தூள், நன்கு சிதைந்த எரு, கம்போஸ்ட் (அ) மண்புழு உரம் ஒரு வருடத்திற்கு ஒரு ஹெக்டருக்கு 4-5 கிலோ என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

நோய்கள்

வனிலாவைத் தாக்கும் நோய்களாவன: இலை அழுகல்,தண்டு அழுகல்,வேர் அழுகல்,தண்டு முனை,காய்கள் அழுகல்,ப்யூசேரியம் ஆக்ஸிஸ்போரம் என்ற நோய் காரணிகளால் கருகல் நோயும்,அகால்லட்டோடிரைக்கிம் கிளியோஸ்போரியாஸ் என்ற நோய் காரணியால் ஏற்படும் ஆந்திராக்நோஸ் (அ)பழுப்பு நிற புள்ளி போன்றவையாகும்.சீரான ஆய்வு மற்றும் பயிர் சுகாதாரம் செய்வதால் நோய்களைக் கட்டுப்படுத்தலாம். நோயுற்ற செடிப் பகுதிகளை அகற்றி,எரிக்க வேண்டும்.வேர்கள் மற்றும் இதர செடிப்பகுதிகளில் ஏதேனும் காயம் இருந்தால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.போர்டாக்ஸ் கலவை (1%) தேவைப்படும் போது மிகக் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்.

பூச்சிகள்

வனிலாவை எந்த விதமான பூச்சியும் அதிகளவு தாக்குவதில்லை.சில புழுக்கள், நத்தைகள், பூச்சிகள் செடியின் இளம் பகுதியை சேதம் செய்கின்றன.அவற்றை கையாலேயே கட்டுப்படுத்திவிடலாம்.

அறுவடை மற்றும் அறுவடையின் சார் முறைகள்

முத்தாத கொட்டை அடர் பச்சைநிறத்தில் இருக்கும். முதிரும் போது,கொட்டையின் நுனியிலிருந்து மஞ்சள் நிறமாக மாறும்.இந்த நிலைதான் அறுவடை செய்ய ஏற்றது.மஞ்சள் நிறமாக மாறும் கொட்டையை கொடியிலேயே விட்டு வைத்திருந்தால் பிளவு ஏற்பட ஆரம்பிக்கும்.இதை தவிர்ப்பதற்கு,தோட்டத்தை அடிக்கடி பார்வையிட்டு,தகுந்த சமயத்தில் அறுவடை செய்ய வேண்டும்.இந்த நிலையில் கொட்டையிலிருந்து ஒரு நல்ல வாசனை வரும். 

பதப்படுத்தலில் நான்கு நிலைகள் உள்ளன

  1. கொட்டையின் தழை வளர்ச்சியை தடுக்க வேண்டும்.
  2. வெப்பநிலையை அதிகப்படுத்துவதால், விரைவில் காய்ந்து விடும்.
  3. மெதுமெதுவாக உலர்த்த வேண்டும்.
  4. ஒரு சில மாதங்களுக்காக சேமிப்பதற்கு நேர்த்தி செய்ய வேண்டும்.

பதப்படுத்திய போர்பன் வனிலா (மடகாஸ்கர்,கோமரோ, ரீயூனியன்)  உலக உற்பத்தியில் 70 சதவிகித பங்களிப்பு இருக்கிறது.கொட்டைகளை 63-65 செ.மீ சூடான நீரில் முழ்க வைக்க வேண்டும்.விரைவான உலர்தலுக்குப் பிறகு, கொட்டைகள் சூடாக இருக்கும் போது மரக்கட்டை கொண்டு உருட்ட வேண்டும்.கொட்டைகள் சாக்லேட் ப்ரெலின் நிறத்திற்கு மாறும்.பின் அவை சூரிய ஒளியில் பரப்பி 3 முதல் 4 மணி நேரத்திற்கு வைத்திருக்க வேண்டும்.இதன்மீது கருப்பு நிற வலையை பரப்பிவிட வேண்டும்.சூரிய ஒளியில் 6 முதல் 8 நாட்களுக்கு கொட்டைகளை உலர்த்த வேண்டும்.பின் அவை திட்டுகளில் பரப்பி நிழலில் உலர்த்த வேண்டும். கொட்டைகளைப் பொறுத்து,உலர்த்தும் காலம் 2 மாதம் வரை கூட இருக்கலாம். சரியான முறையில் உலர்த்தப்பட்ட கொட்டைகளை அடைத்து வைக்க வேண்டும்.முடிவில் அளவு கட்டப்பட்டு,பெட்டிகளில் அடைக்கப்படுகின்றன.அப்பொழுது வனிலாவின் அளவு 2.5 சதவிகித அளவுக்குக் குறையாமல் இருக்கும்.