organic farming
அங்கக வேளாண்மை :: மண்புழு உரத் தொழில்நுட்பம்

முள் இல்லா மூங்கில் வனங்களின் இலைக் கழிவுகளில் இருந்து மண்புழு உரம் தயாரித்தல்

முள் இல்லா மூங்கில் வனங்களின் இலைக் கழிவுகளில் இருந்து மண்புழு உரம் தயாரித்தல்

ஒரு ஹெக்டேர் மூங்கில் வனங்களிலிருந்து சுமார் 11.25 டன் இலைக் கழிவுகள் கிடைப்பதாக அறியப்பட்டது. மூங்கில் இலைக் கழிவுகளில் 19.5 -26.3 சதவிகித அளவில் செல்லுலோசும் 11.30-13.50 சதவிகித அளவில் ஹேமி செல்லுலோசும் மற்றும் 8.7-11.60 சதவிகித அளவில் லிக்னினும் உள்ளது. மேலும் இது 34.6 -37.5 சதவிகித அளவில் அங்கக கரிம பொருளைக் கொண்டுள்ளது.

தயாரித்தல்

  • மூங்கில் இலைக் கழிவுகளையும் சாணத்தையும் 5:1 என்ற சதவிகித அளவில் கலந்தும் அதோடு நுண்ணுயிர் கூட்டுக் கலவையை டன்னுக்கு 2 கிலோ என்ற அளவில் இட்ட வேண்டும்
  •  கழிவுகளை பாதி மக்க வைத்த பின் அதோடு மண் புழுக்களை (யூடிரில்வஸ் யூஜினியே) டன்னுக்கு 3 கிலோ அளவிலும் இட்ட வேண்டும்
  • 75 நாட்களுக்கு மக்க வைத்து மண்புழு உரம் தயாரிக்கவும்

இந்த மண்புழு உரமானது 1.14 இ ௦.65 இ ௦. 88 என்ற அளவில் தழைமணி மற்றும் சாம்பல் சத்துக்களையும் 16.54 சதவிகித அங்கக கரிமப் பொருளையும் கொண்டுள்ளது.

bamboo
bamboo

ஆதாரம்

முனைவர். M. மகேஷ்வரி
பேராசிரியர்
சுற்றுப்புறச்சூழல் அறிவியல் துறை, 
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், 
கோவை – 641003
தொலைபேசி: 0422 6611252
தொலைநகலி: 0422 6611242
மின்னஞ்சல்: environment@tnau.ac.in

Updated on March 2015

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-16