|| | | ||||
காப்புரிமை :: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக காப்புரிமை

Patents at TNAU

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் மேம்பாட்டுக் கல்வி மையம், பல்கலைக்கழகத்தால் கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுத் தருகிறது. (தொழில்நுட்பங்களுக்கு). இதுவரை 6 கண்டுபிடிப்புகள் (தொழில்நுட்பங்கள்) காப்புரிமை பெற்றுள்ளன. அவை

வ.எண் கண்டுபிடிப்பாளரின் பெயர் கண்டுபிடிப்பு (தொழில்நுட்பம்)
1 * Dr. S. மோகன்,
பேராசிரியர்,
வேளான் பூச்சியியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
கோவை – 641 003.
சேமிப்பு கிடங்கு தானியங்களிலிருந்து பூச்சி முட்டைகளை அகற்றும் சாதனம்.
2 Dr. P.M.M. டேவிட்,
பேராசிரியர்,
வேளான் பூச்சியியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
கோவை – 641 003.
பூச்சிகள் மற்றும் எலிகளை அழிக்கும் பல்பயன்பாட்டுக் கருவி
3 திரு. K.செந்திராயன்,
இணை பேராசிரியர்,
வேளான் நுண்ணுயிரியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
கோவை – 641 003.
காற்றில்லா நுண்ணுயிரி முறையில் ஈயம் கரைத்தல் மற்றும் அங்கக அமிலம் தயாரித்தல்
4 Dr.K.அங்கப்பன்,
இணை பேராசிரியர்,
பயிர் நோயியல் துறை,
பயிர் மூலக்கூறு உயிரியல் மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
கோவை – 641 003.
உயிர் – உரம் கலந்த உயிர் பூஞ்சாணக் கொல்லி தயாரிக்கும் முறை
5 Dr. G. கதிரேசன்,
பேராசிரியர்,
உழவியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
கோவை – 641 003.
கரும்பு சோகை உரிக்கும் இயந்திரம்
6 Dr. R. ஜெகன்னாதன்,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளான் வானிலையியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
கோவை – 641 003.
தென்னை மரங்களுக்கு உரக்கட்டி தயாரிக்கும் முறை

* வணிகமயமாக்கல்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்கல்:

            தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பல்வேறு வேளாண் சார்ந்த கண்டுபிடிப்புகளை கண்டறிந்து அறிமுகப்படுத்தி உள்ளது. சில தொழில் நுட்பங்கள் வெளியிடப்பட இருக்கின்றன. வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநரகம், பல்கலைக் கழக கண்டுபிடிப்புகளை வணிகமயமாக்கும் பணியைச் செய்து வருகின்றது. இதன் முதல் நிலையாக 5 கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர திட்டமிட்டுள்ளது. இதன்படி தொழில்நுட்பங்களை வெளிப்படுத்த ஆர்வமுள்ளவர்களை வரவேற்று அவர்களின் கண்டுபிடிப்புகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும். எந்த நிறுவனம் அதிக மதிப்பீடு கொடுக்கின்றதோ அந்நிறுவனத்திற்கு அத்திட்டம் மற்றும் தொழில்நுட்பங்கள் அளிக்கப்படும். இவ்வாறு காப்புரிமை பெற்ற ஒரு கண்டுபிடிப்புடன் சில தொழில்நுட்பங்கள் இவ்வாறு அளிக்கப்பட்டுள்ளன.

வ.எண் புதிய தொழில்நுட்பம் / பொருளின் பெயர் தொழில்நுட்பத்திற்கு அளிக்கப்பட்ட தொகை
(எண் & எழுத்தால்)
நிறுவனத்தின் பெயர்
1 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் காப்புரிமை எண்: 19834,
பயறு வகை தானியங்களிலிருந்து பூச்சி முட்டைகளை அகற்றும் சாதனம்.
ரூ. 10,000/-
(ரூபாய் பத்தாயிரம் மட்டும்)
M/s  KSNM சந்தையாளர்கள்,
ஆசிரியர் குடியிருப்பு,
குரும்பபாளையம்,
வேடப்பட்டி போஸ்ட்,
கோவை – 641 007.
2 கம்பு உடனடி மாவு மற்றும் கம்பு உணவு தயாரிக்கும் முறை ரூ. 5,000/-
(ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்)
M/s   தானிய லட்சுமி அக்ரோ புராடக்ட்ஸ்,
ரங்கை கெளடர் வீதி,
கோவை – 641 001.

முக்கியமான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள்

  1. காப்புரிமை என்பது ஒரு தொழில்நுட்பம் அல்லது கண்டுபிடிப்பை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வழியே சந்தைப்படுத்தவே. இது ஒன்றும் தனிப்பட்ட உரிமை இல்லை.
  2. வணிக நோக்கத்தில் அக்கண்டுபிடிப்பை பிற நிறுவனங்களுக்கு வழங்க பல்கலைக்கழகத்திற்கு உரிமை உண்டு.
  3. அப்பொருள் அல்லது தொழில்நுட்பத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கலன் அல்லது பொட்டலங்களாக வெளியிடலாம்.
  4. நிறுவனங்கள் தயாரித்து அளிக்கும் பொருட்களை சரிபார்க்கும் உரிமை பல்கலைக்கழகத்திற்கு உண்டு.
  5. காப்புரிமை சம்மந்தப்பட்ட அனைத்து உரிமைகளும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு உண்டு.
  6. காப்புரிமை பெறுவதில் பல தனியார் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் உதவி புரிகின்றன. அவைகளின் உதவியால் பல கண்டுபிடிப்புகள் காப்புரிமை பெற்றுள்ளன
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015