காப்புரிமை :: வணிகக் குறியீடு / வியாபாரக் குறியீட்டுச் சின்னம்

இந்த வியாபாரக் குறியீட்டுப் பதிவுகள் யாவும் வணிகக் குறியீட்டுச் சட்டம் 1999 – ன் கீழ் பதிவு செய்யப்படுகிறது. இக்குறியீடு என்பது ஒரு வார்த்தை, கருவி, கையொப்பம், எழுத்து, நம்பர், ஒரு குறிப்பிட்ட நடையில் எழுதப்பட்ட பெயர், பொருட்களின் வடிவம் அல்லது சில நிறங்களின் கலவை போன்ற ஏதாவது ஒன்றாக இருக்கலாம். சில விதிகளுக்குட்பட்டு, வியாபாரக் குறியீடு உயிருடன் அல்லது இறந்த ஒரு நபரின் பெயராகவும் இருக்கலாம்.

இந்த வியாபாரக் குறியீடு ஒருவரின் பொருட்களை மற்றவரின் பொருட்களிலிருந்து பிரித்து காட்டுகிறது. இக்குறியீடு ஏற்கனவே உரிமை பெற்ற மற்றொருவரின் குறியீட்டுடன் ஒத்துப்போகக் கூடாது. அது சட்டப்படி தவறாகும்.

 

ஒரு குறிப்பிட்ட பகுதியின் பிரபலமான விளைபொருட்களின் வகை, தரம், அளவு, நோக்கம், மதிப்பு, தோன்றிய (உற்பத்தி செய்த) இடம் போன்றவை பதிவு செய்யப்பட்டு அதற்கென தனி வியாபாரக் குறியீடு வழங்கப்படும்.

இக்குறியீடு மூலம் மக்கள் அப்பொருள் யாரிடமிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.

எ.கா: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வியாபாரக் குறியீடு.

இது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருட்களை அதன் போட்டியாளரிடமிருந்து பிரித்தறிய உதவுகிறது.

வியாபாரக் குறியீடு பெற பதிவு செய்தல்

தேசிய வியாபாரக் குறியீடு அலுவலகத்திற்கு சென்று முறையாகப் பதிவு செய்ய வேண்டும். அதில் விண்ணப்பத்துடன் பதிவு செய்ததற்கான கையொப்பம், ஏதேனும் நிறம், வடிவம் அல்லது முக்கோண வடிவத்தில் குறியீடு இடம்பெற்றிருக்க வேண்டும். அதோடு என்னென்ன பொருட்கள் அந்தக் குறியீட்டின் கீழ் விற்கப்படும் என்ற பட்டியலையும் இணைத்துக் கொடுக்க வேண்டும்.

வியாபாரக் குறியீட்டு எண் கீழ்கண்டவற்றிற்கு செய்யப்படுகிறது.

  1. பெயர், கையொப்பம், எழுத்து, வடிவம், குறிப்பு, விவரச் சீட்டு அல்லது இவற்றின் கலவைகள்.
  2. ஏதேனும் வாசகம், அடிப்படை வரிகள் போன்ற பொருட்களை நன்கு விவரிக்கக் கூடியவை. ~
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014