பப்பாளி
-
பப்பாளி டூட்டி ஃப்ரூட்டி
-
பப்பாளி உடனடியாகப் பரிமாறும் பானம்
-
பப்பாளி – அன்னாசிப்பழம் உடனடியாகப் பரிமாறும் பானம்
-
பப்பாளி ஊறுகாய்
-
பப்பாளி பழக்கூழ்
-
பப்பாளி பழக்குழம்பு
பப்பாளி டூட்டி ஃப்ரூட்டி
தேவையான பொருட்கள்:
முதிர்ந்த கனியாத பப்பாளி |
1 கிலோ |
சர்க்கரை |
3/4 கிலோ |
சிட்ரிக் அமிலம் |
10 கிராம் |
சாறு நிறம் |
தேவையான அளவு |
செய்முறை:
- முதிர்ந்த பச்சையான பப்பாளியை அறுவடை செய்யவும், பின் அதை வெட்ட வேண்டும் மற்றும் பப்பாளிப் பாலை வடிகட்டவும்.
- பழத்தை நன்றாக கழுவவும், தோலை உரிக்கவும், விதைகளை அகற்றவும், அகற்றிய பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
- 2 % உப்பு நீரில் 1 % கால்சியம் குளோரைடு உள்ளது. இதில் 30 நிமிடங்கள் மூழ்க வைக்க வேண்டும்.
- வடிகட்டிய பின் பப்பாளித் துண்டுகளை கழுவ வேண்டும். அதில் பப்பாளி துண்டுகள் உள்ள அதே அளவில் சர்க்கரையைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
- அறை வெப்ப நிலையில் 4 மணி நேரம் மூழ்க வைக்கவும். அதில் தேவையான அளவு சாறு, நிறம் மற்றும் சிட்ரிக் அமிலத்தை சேர்க்க வேண்டும்.
- மேலே குறிப்பிட்டுள்ள கலவையில் அதிக சர்க்கரையை சேர்க்க வேண்டும். பின் அந்த சர்க்கரை கெட்டியாகும் வரை 70 0 பிரிக்ஸ் வரை கொதிக்க வைக்கவும்.
- கெட்டியான பழக்கற்கண்டு பப்பாளித் துண்டுகளை வடிகட்டி, ஒரு தட்டில் பரப்பி நிழலில் உலர வைக்க வேண்டும்.
- பாலித்தீன் பைகளில் கட்டி, முத்திரையிட்டு சேமித்து வைக்கவும்.
பப்பாளி உடனடியாக பரிமாறும் பானம்
தேவையான பொருட்கள்:
பப்பாளி |
1 கிலோ |
சர்க்கரை |
500 கிராம் |
சிட்ரிக் அமிலம் |
10 கிராம் |
தண்ணீர் |
2 லிட்டர் |
பதனச் சரக்கு |
1/4 தேக்கரண்டி |
செய்முறை:
- பப்பாளிப் பழங்களை நன்றாக கழுவவும், தோலை உரிக்கவும், விதைகளை அகற்றவும், பின் சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். அதனை கூலாக தயாரிக்கவும்.
- தண்ணீரில் சர்க்கரையையும், சிட்ரிக் அமிலத்தையும் சேர்க்கவும், நன்றாக கலக்கி சிறிது நிமிடங்கள் கொதிக்க வைத்து பின் குளிர வைக்கவும்.
- சர்க்கரையை வடிகட்டி, பப்பாளிக் கூழுடன் கலக்கி பின் அந்த பழச்சாற்றை 80 0 செல்சியஸில் கொதிக்க வைக்கவும்.
- சாறையும், பதனச்சரக்கையும் பழச்சாறுடன் கலந்து, தொற்று நீக்கம் செய்யப்பட்ட புட்டியில் அடைத்து முத்திரையிட வேண்டும்.
- புட்டியை நுண்ணயிரி வளர்ச்சித் தடை செய்ய 80 0 செல்சியஸில் வைக்கவும்.
பப்பாளி – அன்னாசிப்பழம் உடனடியாக பரிமாறும் பானம்
தேவையான பொருட்கள்:
பழக்கூழ் |
1 கிலோ |
சர்க்கரை |
475 கிராம் |
சிட்ரிக் அமிலம் |
10 கிராம் |
தண்ணீர் |
2.8 லிட்டர் |
கே. எம். எஸ் / எஸ். பி |
200 மி. கி |
செய்முறை:
- பப்பாளிப் பழங்களை நன்றாக கழுவவும், தோலை உரிக்க வேண்டும்.
- குடைவு அறுவைக் கருவியில் சதைப்பகுதியை எடுத்து அதைப் பழக்கூலாக தயாரிக்கவும்.
- தண்ணீரில் சர்க்கரையையும், சிட்ரிக் அமிலத்தையும் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டவும்.
- பழக்கூழை நன்றாகக் கலந்து 80 0 செல்சியஸிற்கு சூடாக்கவும்.
- புட்டியில் அடைத்தல் மற்றும் Crown Cork
- தண்ணீர் தொட்டியில் 30 நிமிடங்கள் நுண்ணூட்ட வளர்ச்சியை தடை செய்ய வைக்க வேண்டும்.
- குளிர வைக்கவும், அடையாள அட்டை வைத்து உபயோகிக்கும் வரை சேமிக்கவும்.
குறிப்பு
- 200 பிபிஎம் சோடியம் பென்சோயேட் அல்லது கே.எம்.எஸ் – ஐ சேர்க்கவும். அது தற்பொழுது மற்றும் நீண்ட நாள் சேமிக்கவும் உதவும்.
- தொற்று நீக்கம் செய்யப்பட்ட புட்டியில் மட்டுமே பழச்சாற்றை நிரப்ப வேண்டும்.
- நுண்ணூட்ட வளர்ச்சியைத் தடைசெய்யும் பொழுது புட்டிகள் பாத்திரங்கள் பட்டு உடையாமல் பாதுகாக்க போதுமான அளவு துணிகளை இடையில் வைக்க வேண்டும்.
- ஒரு மாற்றத்திற்காக உடனடியாக பரிமாறும் பானத்தை தயார் செய்ய பப்பாளிப் பழத்தை மற்ற பழங்களுடன் சேர்த்து தயாரிக்கலாம். பப்பாளியுடன் கலக்க ஏற்ற பழங்கள் மாம்பழம் மற்றும் அன்னாசிப்பழம் ஆகும்.
பப்பாளி ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
தோல் நீக்கிய பப்பாளித் துண்டுகள் |
1 கிலோ |
உப்பு |
100 கிராம் |
சிவப்பு மிளகாய்த் தூள் |
10 கிராம் |
ஏலக்காய் (பெரியது), சீரகம், கருப்பு மிளகுப் பொடி – அனைத்திலும் |
10 கிராம் |
காடி |
750 மிலி |
பப்பாளி ஊறுகாய் பதப்படுத்துதல் அட்டவனை
பப்பாளி பழக்கூழ்
தேவையான பொருட்கள்:
பப்பாளிக் கூழ் |
100 கிராம் |
சர்க்கரை |
75 கிராம் |
சிட்ரிக் அமிலம் |
சிறிதளவு |
செய்முறை:
- பழுத்த பழங்களை தேர்வு செய்து நன்றாக கழுவவும் பின் தோலை உரிக்கவும், கூழை எடுக்க மின் அம்மியில் போட்டு அரைக்கவும்.
- சர்க்கரையையும், சிட்ரிக் அமிலத்தையும் கூழுடன் சேர்த்து பழக்கூழ் பக்குவம் வரும் வரை சமைக்கவும்.
- தொற்று நீக்கம் செய்யப்பட்ட புட்டியில் அடைக்கவும்.
5.பப்பாளி பழக்குழம்பு
தேவையான பொருட்கள்:
பப்பாளி பழக்கூழ் |
1 கிலோ |
சர்க்கரை |
1.80 கிலோ |
சிட்ரிக் அமிலம் |
25 கிராம் |
தண்ணீர் |
1 லிட்டர் |
பப்பாளி பழக்குழம்பு செய்முறை அட்டவனை
தொழில் நுட்பங்கள்
* - அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக் கழகம், கோவை.
** - ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், மதுரை.
ஆதாரம்:
http://jimnote.blogspot.com/2008/03/
http://skytoseapetshop.com/images/dicedpapaya.jpg
http://www.sachikocooking.com/images/mp0885000.jpg
|