குறுந்தானியங்களில் பனிவரகு, திணை, சாமை, சன்வா, வரகு ஆகியன அடங்கும். குறுந்தானியங்கள் அதிக ஆற்றல் நிறைந்தது. தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்கள் கொண்டதாகும். இது பைட்டிக் அமிலம் குறைந்தும் நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் கொண்டதாகவும் உள்ளது. தானிய வகை உணவுகளில் அதற்கு பதிலாக குறுந்தானியங்கள் அதிலுள்ள அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளதால் மாற்ற தானியமாக பயன்படுத்தப்படுகிறது. பனி வரகு மாவிற்குப் பதிலாக அடுமனைப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. |