முருங்கைக் கீரையின் மருத்துவகுணமும் பயன்பாடும்
காய்கறிகளை நீரகற்றம் செய்வதற்கான வரைபடம்
வெள்ளரிக்காய் ஊறுகாய்
வெள்ளரி – 1 கிலோ
உப்பு – 200 கிராம்
மிளகாய்த் தூள் – 15 கிராம்
ஏலக்காய் (பெரியது)
சீரகம், மிளகு பொடி – 10 கிராம்
இலவங்கம் – 6
வினிகர் – 750 மில்லி
காளிபிளவர் ஊறுகாய்
காளிஃபளவர் (துண்டுகள்) – 1 கிலோ
உப்பு – 150 கிராம்
இஞ்சி நறுக்கியது – 25 கிராம்
வெங்காயம் நறுக்கியது - 50 கிராம்
பூண்டு (நறுக்கியது) – 10 கிராம்
சிவப்பு மிளகாய், மஞ்சள் தூள், இலவங்கப்பட்டை, கருமிளகு, ஏலக்காய் (பெரியது), சீரகம், சோம்பு (பொடி) – 15 கிராம், லவங்கம் – 6, புளி – 50 கி, கடுகு (பொடி) – 50 கிராம், வினிகர் – 150 மிலி, கடுகு எண்ணெய் 400 மிலி.
பச்சை மிளகாய் ஊறுகாய்
பச்சை மிளகாய் – 1 கிலோ
உப்பு – 150 கிராம்
கடுகு (பொடி) – 100 கிராம்
எலுமிச்சை சாறு – 200மிலி (அ) அம்சூர் – 200 கிராம்
வெந்தயம், ஏலக்காய் (பெரியது), மஞ்சள், சிரகம் (பொடி) – 15 கிராம்
கடுகு எண்ணெய் – 400 மிலி
பூண்டு ஊறுகாய்
- தோலை உரித்த பின் 5 நிமிடங்கள் பூண்டை வேக வைத்து, கூழாக அரைக்கவும்.
- சிறிய வெப்பத்தில் எண்ணெய் மற்றும் கடுகை வறுக்கவும்.
- அரைத்த பூண்டை சிறிது நேரம் அதில் வதக்கவும்.
- அதோடு எலுமிச்சை சாற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
- அதன்பின் வெல்லம் மற்றும் வாசனை பொருட்களை சேர்க்கவும்.
- பாட்டில்களில் அடைக்கவும்.
காய்கறி சூப் மிக்ஸ்
தேவையான பொருட்கள் : வெங்காயம், கேரட், பீன்ஸ், காளிஃப்ளவர், முட்டைக்கோஸ், தக்காளி மற்றும் பசலை கீரை.
காய்கறிப் பொடிகள் தயாரிப்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து காய்கறிகளையும் நன்கு கழுவ வேண்டும். அதனை சிறு துண்டுகளாக நறுக்கி வெங்காயம் மற்றும் தக்காளியைத் தவிர மற்றதை 3 – 5 நிமிடங்கள் உப்பு நீரில் வேக வைக்கவும். வெங்காயம் (6 – 7 மணிநேரம்) தவிர அனைத்து காய்கறிகளையும் உலர்த்தியில் 800 யில் 10 மணிநேரம் தனியாக உலர்த்தவும். உலர்ந்த துண்டுகனை மிக்சியில் பொடியாக்கவும்.
காய்கறி சூப் மிக்ஸ் செய்முறை
காய்கறி பொடிகள் – 50 கிராம் (கேரட் : பீன்ஸ் : காளிஃப்ளவர் :முட்டைக்கோஸ் : தக்காளி : பசலைக் கீரை (1:1:1:1:1:1)
வெங்காயப் பொடி – 5 கிராம்
சோள மாவு – 20 கிராம்
சீரகம் - 5 கிராம்
மிளகு – 3 கிராம்
உப்பு – 15 கிராம்
அஜினமோட்டோ – 5 கிராம்
செய்முறை
அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து பாலித்தீன் பைகளில் அடைக்கவும். கொதித்த தண்ணீருடன் (150 மில்லி) 10 கிராம் கலந்த காய்கறி சூப் மிக்சை சேர்த்து நன்றாக கிளறவும்.
மக்காச் சோள சூப் மிக்ஸ்
தேவையான பொருட்கள் : இளஞ்சோளக் கதிர், வெங்காயம் மற்றும் தக்காளி
தேவையான அனைத்து காய்கறிகளையும் நன்றாக கழுவ வேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளியைத் தவிர அனைத்து காய்கறிகளையும் சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு நீரில் 3 – 5 நிமிடங்கள் வேக வைக்கவும். அதன் பின், வெங்காயத்தை தவிர (600C மற்றும் 7 மணி நேரம்)
அனைத்தையும் உலர்த்திக் கொண்டு 800 வெப்பநிலையில் 10 மணிநேரம் உலர்த்த வேண்டும். உலர்ந்த துண்டுகளைப் பொடியாக்கிக் கொள்ளவும்.
மக்காச் சோள சூப் மிக்ஸ் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
இளஞ்சோளத்தின் பொடி – 25 கிராம்
தக்காளிப் பொடி – 25 கிராம்
வெங்காயப் பொடி – 5 கிராம்
சோள மாவு – 20 கிராம்
சீரகப் பொடி – 5 கிராம்
மிளகுப் பொடி – 3 கிராம்
உப்பு – 1.5 கிராம்
அஜினாமோட்டோ – 0.5 கிராம்
தொழில்நுட்ப தகவலுக்கு
- அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்
- மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மதுரை
|