அறுவடை பின்சார் தொழில் நுட்பம் - பொதியலுக்கு பயன்படும் பொருட்கள்
உணவு பொருட்களை பொதியிட பொதுவாக கண்ணாடி, உலோகங்கள், காகிதம் மற்றும் காகித அட்டை மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் பல அடுக்கு கொண்ட பொதியில் செய்ய பல விதமான பிளாஸ்டிக் அல்லது பல்வேறு பிளாஸ்டிக் கலவையுடன் காகிதம் / அட்டை, உலோகம் அல்லது கண்ணாடி போன்றவை சேர்த்து செய்யப்படுகிறது.

பொதியலுக்கு பயன்படும் பொருட்கள்:

  • காகிதம்: காகிதம் மற்றும் காகித அட்டைகள் சல்போட் மற்றும் சல்பைட் கொண்டு பின்னப்பட்ட இழைகளாகும். பின்னர் இழைக்கப்பட்ட நார்கள் கூழாக்கி, வெளுக்கப்பட்ட , இரசாயனங்கள் மற்றும் வலுவூட்டும் பொருட்களைஸ் சேர்த்து காகித பொதியக் செய்யப்படுகிரது.

  • காகித அட்டை: காகித அட்டை காகிதத்தை விட தடிமனானது கனமானது பல அடுக்குகளை கொண்டது. இது பொதுவாக பொட்டிகள், அட்டை பெட்டிகள், தட்டுகள் போன்ற உணவுப் பொருட்கள் போக்குவரத்துக்கு பயன்படுகிறது. மிகச்சில உனவுகளே நேரடியாக பொதிக்கப்படுகின்றது.

  • கண்ணாடி: கண்ணாடி கொள்கலங்கள் சிலிக்கா, சோடியன் கார்பனேட் கால்சியம் கார்பனேட் மற்றும் அலுமினாவை அதிக வெப்பத்திற்கு உட்படுத்து அடர்த்தியான திரவமாக மாற்றி பின் அச்சுக்களில் வார்க்கப்படுகின்றன.

    நன்மைகள்: கண்ணாடி புறக்காரணி தடை பண்புகளைக் கொண்டுள்ளது, எனவே இது உற்பத்தி செய்யப்பட்ட உணவு பொருட்களின் புத்துணர்ச்சி, சுவை, வாசனை மற்றும் பதப்படுத்துதலின் போது ஏற்படும் உயர் வெப்பத்தை தாங்க கூடியது.

    குறைபாடுகள்:எளிதில் உடையக்கூடியது, கனமானது மற்றும் மக்காதவை.

  • நெகிழி : நெகிழி தனிமூலக்கூறுகள் சுருக்குதல், சேர்ப்பு அல்லது குறுக்கு சேர்ப்பு மூலம் தொகுக்கப்படுகிறது. வெப்பம் மற்றும் இயந்திர பண்புகளில் சிலவற்றை மாற்றி அதிக வெப்பத்தில் உருகக்கூடிய வெப்பப்பத பொதிகள், குறைந்த வெப்பத்தில் உருகக்கூடிய வெப்பத்தால் அடைக்கப்பட்ட பொதியல், வளையக்கூடிய பொதியல்கள், குறைந்த உறுதித்தன்மை மற்றும் உறுதியான பொதிகளையும் உருவாக்கலாம்.

  • உலோகம் :உலோக பொதிகலங்கல் வெற்றிட அடைத்தல் செய்து குறைந்த ஆக்சிஜன் அழுத்தத்தில் நுண்ணுயிரி நீக்கம் செய்யப்படுகிறது. உலோகம் ஆக்சிஜன், வெளிச்சம், ஈரத்திலிருந்து உணவுப்பொருட்களை காப்பதால் அழுகுதல் குறைவாக உள்ளது அலுமினியம் அல்லது இருமௌ உலோகப் பொதியலுக்கு பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது.
1
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015