முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை

ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.1.65லட்சம் : அதிக வருவாய் தரும் நாட்டு வாழை

திருவேங்கட ராமானுஜம்
திருத்தங்கல்
தொடர்புக்கு : 98655 83986

ரசாயன நச்சு உரங்கள் கலக்காமல் இயற்கை உரங்கள் கொண்டு வாழை சாகுபடி செய்கிறார் திருத்தங்கல் விவசாயி திருவேங்கட ராமானுஜம். அவர் கூறியதாவது: 3 ஏக்கர் பரப்பளவில் 1 ஏக்கருக்கு 1100 வீதம் 3,300 வாழை கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறேன். பாரம்பரிய வாழையான நாட்டு வாழைக்கு தமிழகத்தில் என்றுமே மவுசு உண்டு. ஜீரணதி, வைட்டமின்கள் நிறைந்த நாட்டு வாழையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த வாழையின் நுணுக்கங்கள் அறிந்தால் பராமரிப்பது எளிது. இதன் இலைகள் தடித்து இருப்பதால் மார்க்கெட்டில் தனி "டிமான்ட்' இருக்கிறது. இலை ஒன்று ரூ. 2 முதல் 3 வரை விற்பனை ஆகிறது. வாழைத்தார் வரும் வரை கிட்டத்தட்ட இதிலே ஒரு வாழை மரத்திற்கு 100 ரூபாய் வரை பார்த்து விடலாம். வாழை தார் ஒன்று 150 முதல் 200 வரை விற்பனை ஆகின்றன. ஏக்கருக்கு குறைந்தது 1லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டமுடியும்.

பயிர் செலவினங்களும் குறைவு தான். தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை மூலமாக மானிய விலையில் விவசாயிகள் களை வெட்டும் இயந்திரங்கள் கிடைக்கிறது. 
இதில் ஊற்றப்படும் டீசல் ஒரு நாளைக்கு 5 லிட்டர் என பார்த்தால் ரூ. 200, இயந்திரத்தை இயக்க கூலி ரூ. 500 என களை வெட்ட ரூ. 700 தான் வருகிறது. இதனால் களை வெட்ட மாற்று ஆட்களை தேடவேண்டியதில்லை.
நாட்டு வாழைக்கு இயற்கை சார்ந்த குப்பை, மாடு, ஆட்டு சாணி, எரிக்கிலை, பசுமை தாழ் உரங்கள் நேரம் அறிந்து போடப்பட்டு பயிரிடப்படுகிறது. வாழை மிகவும் கால் ஊன்றி மழை காலங்களில் சாயும் தன்மை குறைகிறது. இந்த ரக நாட்டு வாழைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். மருந்து செலவுகள் குறைவு, செயற்கையாக ஏதும் சேர்ப்பது இல்லை.
மண்புழு உரம், அசோஸ்பைரில்லம், பாஸ்டோ பாக்டீரியா திரவ வடிவில் குப்பையுடன் சேர்த்து போடும் போது, நோய் தன்மை குறைந்து வாழைக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது என்றார்.

Updated on August, 2015
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015