முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை

நேரடி விதைத்தல் முறையில் முள்ளங்கி சாகுபடி

என்னுடைய பெயர் ஜேம்ஸ்முத்துராஜ். நான் திண்டுக்கல் மாவட்டம் பாப்பன்குளம் என்ற கிரமத்தில்  வசித்து வருகிறேன். 30 வருடமாக விவசயம் செய்துவருகிறேன். எங்களுக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது. 2 கிணறு இருக்கு. 20 வருடமாக முள்ளங்கி பயிரிட்டு வருகிறேன். அதில் 10 வருடமாக விதையை நடவு மூலமாகவும் 10 வருடமாக நேரடி விதைத்தல் முறையிலும் விவசாயம் செய்கிறேன்.

 

பயிரிடும் முறை:
5 கலப்பை டிராக்டர் கொண்டு 2 உழவு 10 நாள் இடைவெளி விட்டு உழவு செய்ய வேண்டும். பிறகு கொக்கி(12 கொக்கி) கலப்பை கொண்டு 2 உழவு ஓட்ட வேண்டும். பிறகு முள்ளங்கி விதையை நேரடி விதைத்தல் முறையில் விதைக்கவேண்டும்.  ஏக்கருக்கு 3 கிலோ தேவைப்படும். பிறகு 1 ஏக்கருக்கு 1 மூட்டை பாக்டோபஸ் அல்லது டி ஏ பி உரம் இடவேண்டும். மீண்டும் 5 கலப்பை டிராக்டர் கொண்டு உழ வேண்டும். இப்படி உழும் போதே பார் அமைந்து விடும். தண்ணீர் விடுவதற்காக நடுவில் வாய்க்கால் மற்றும் பாத்தி கட்ட வேண்டும். முள்ளங்கி கிழங்கு சாகுபடி முடியும் வரை 5 நாட்களுக்கு தண்ணீர் விட வேண்டும்(மழைக்கு ஏற்ப தண்ணீர் விட வேண்டும்). அதேப் போல் 15 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்கவும் வேண்டும். பின் உரம் போட வேண்டும். பயிரிட்டு 20 நாட்களுக்குள் உரம் போட வேண்டும். 1 ஏக்கருக்கு என்.பி.கே கலப்புரம்  5 மூட்டை(200 கிலோ) அல்லது பொட்டசியம் (50 கிலோ) + யூரியா (50 கிலோ) என உரம் போட வேண்டும். பிறகு அசுவினி பூச்சிக்கான அசிப்பேட் (20 கிராம்) + மோனோக்குரோட்டோபஸ் (40 மிலி) மருந்தடிக்க வேண்டும்.

பின் 15 நாட்கள் கழித்து அசுவினி பூச்சி இருந்தால் இதே மருந்தை மீண்டும் அடிக்க வேண்டும். 35 நாட்களில் முள்ளங்கி கிழங்கை எடுக்க ஆரம்பிக்க வேண்டும்.பெரிய கிழங்கை 35 முதல் 60 நாட்கள் வரை எடுக்கலாம். 60 நாட்களில் நிறைவு பெற்ருவிடும். 1 ஏக்கருக்கு 8 ஆயிரம் கிலோ (8 டன்) வரை முள்ளங்கியை சாகுபடி செய்யலாம். 

செலவு :
விதை, அதை விதைதல், மருந்தடிதல், களை எடுத்தல், உரம் போடுதல் என 20 ஆயிரம் வரை செலவகும். 

பின்
முள்ளங்கி 10 ரூபாய் க்கு விற்றால்

கமிசன் 8 ஆயிரம்
வண்டி வடைகை 5 ஆயிரம்
எடுப்பு கூலி 15 ஆயிரம்
இறக்கு கூலி 1 ஆயிரம்
சாக்கு 4 ஆயிரம்
பொய் வர செலவு 5 ஆயிரம்
  20 ஆயிரம்
மொத்தம் 58 ஆயிரம்
முள்ளங்கி விற்பனை 80 ஆயிரம்
மொத்தம் செலவு    58 ஆயிரம்
லாபம் 22 ஆயிரம்

                 
10 ரூபாய் க்கு மேல் விற்றால் கமிசன் மட்டுமே மாறுபடும். விற்பதில் 10% கமிசன் ஆகும்.
 

பயன்கள்:
நடவு முறை என்றால் நடுவதற்க்கு செலவு ஏக்கருக்கு 2 ஆயிரம் வரை ஆகும். நேரடி விதைத்தல் முறையில் முள்ளங்கி நெறுக்கமாக வருவதல் நடவு முறையை விட சிறிது அதிகமாக மகசூல் கிடைக்கும்.

Updated on March, 2015
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015