Agriculture
தட்பவெப்பநிலை

பயிர்களின் வளர்ச்சியில் தட்பவெப்பநிலையின் பங்கு:

ஒரு குறிப்பிட்ட இடத்தில் வளரும் பயிர்களை நிர்ணயிக்கும் முக்கியமான காரணி வெப்பநிலையே. பயிரின் உற்பத்தித் திறன் தட்ப வெப்பநிலையைப் பொறுத்தே அமையும். 50 விழுக்காட்டிற்கு மேல் உற்பத்தி அளவை நிர்ணயிக்கும் திறன் தட்ப வெப்பநிலைக்கே உண்டு. முக்கியமான தட்ப வெப்பநிலைக் காரணிகள் சூரிய ஒளி, வெப்பநிலை, மழை.

பயிர் பெருக்கத்தில்வெப்பநிலையின் பங்கு:

  1. பயிரின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு மிக முக்கியம்.
  2. நல்ல உற்பத்திக்கு சராசரி வெப்பநிலை அவசியம்.
  3. தண்டின் வளர்ச்சிக்கு இரவில் நல்ல வெப்பநிலை இருத்தல் நலம்.

முக்கிய வெப்பநிலைப் புள்ளிகள்:

ஒவ்வொரு பயிருக்கும் குறைந்த, அதிக மற்றும் சராசரி வெப்பநிலை அளவுகள் உள்ளன. இவற்றையே முக்கிய வெப்பநிலைப் புள்ளிகள் என்கிறோம். இதில் சராசரி வெப்பநிலை அளவு மிக முக்கியம்.

கோதுமை

3 – 4 o செல்சியஸ்

குறைந்த அளவு

 

25 o செல்சியஸ்

சராசரி

 

30 – 32 o செல்சியஸ்

அதிக அளவு

நெல்

10 – 12 o செல்சியஸ்

குறைந்த அளவு

 

30 – 32 o செல்சியஸ்

சராசரி

 

36 – 38 o செல்சியஸ்

அதிக அளவு

1. குறைந்த வெப்பநிலை பாதிப்புகள்:
குறைந்த அளவு வெப்பநிலையானது, பயிரின் வளர்ச்சி, செல் விரிதல் , ஒளிச் சேர்க்கை, நீர்ப் பரிமாற்றம் , உற்பத்தி மற்றும் உயிர் வாழ்தலைக் கூட பாதிக்கும்.

1.

கடும் குளிர் பாதிப்பு

அதிக அளவு வெப்பநிலையில் வளரும் தாவரங்கள் வெப்பநிலை குறையும் போது அதிக பாதிபடைகிறது. சில சமயம் பயிர் வளராமல் பட்டுப் போய்விடுவதும் நிகழும். இரவு வெப்பநிலை 15 o செல்சியஸைவிடக் குறையும்போது, தானியப் பயிர்களின் இலைகள் மஞ்கள் நிறமாக மாறுகின்றன.
எ. கா : ஓராண்டு வெப்பநிலைத் தாவரங்கள்

2.

உறைநிலை பாதிப்பு

பயிர்கள் மிகக் குறைந்த வெப்பநிலையைத் தாங்க நேரிடும் போது, செல் இடைவெளியினுள் நீர் உறைந்து பனிக்கட்டியாகின்றது.
எ. கா : உருளைக் கிழங்கு, தேயிலை

3.

மூச்சுத் திணறல்

நிலத்தின் மீது பனிப்போர்வை மூடிவிடும்போது பயிர்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை மண்ணினால் எடுக்க முடியாது. இதனால் பயிரின் சுவாசம் தடைபட்டு பாதிப்படைகிறது.

4.

மேலே தூக்குதல்

பனிக்கட்டிகளிடையே பயிரினை மண்ணுடன் சேர்த்து பெயர்த்து எடுத்தல்.

பனி பாதிப்பு:

பயிர்களில் வெப்பநிலை மிகக் குறையும் போது பாதிப்பு ஏற்படுகிறது. செல் அளவு அதிகம் உள்ள பயிர்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்கும்.

 

 
Fodder Cholam