| உர மேலாண்மை 
        
          பொதுவான உர       அளவு 75 : 25 : 37.5 கிலோ தழை,மணி. சாம்பல் சத்து ஒரு எக்டருக்கு இடவேண்டும்.
 ஊட்டமேற்றிய       தொழுஉரம் 750 கிலோ 25 கிலோ மணிச்சத்தான சூப்பர் பாஸ்பேட் கலந்து அடியுரமாக       இடப்படவேண்டும்.
 தழைச்சத்து       25 கிலோ, சாம்பல்சத்து 12.5 கிலோ மூன்றுமுறை, பயிர் முளைத்த 20-25 நாட்களில்,       40-45 ஆம் நாட்களில் மீண்டும் 60-65 ஆம் நாட்களிலும் இப்படவேண்டும்.
 விதைத்தது முதலும்,       இடையேயும் நல்ல மழை பெய்து, பயிரின் வளர்ச்சி நன்கு அமைந்திருப்பின் இரண்டாம்       தருணமான 40 முதல் 45 நாட்களுக்குள் இடப்படும் தழைச்சத்து 40 கிலோவாக அதிகரிக்கப்படலாம்.       (சாம்பல் சத்து 12.5 கிலோவாகவே இருக்கட்டும்). அதன் பின்னர் குறைந்தது 10 தினங்களுக்காவது       தண்ணீர் தேங்கியிருத்தல் ஒரு கட்டாயத் தேவை எனலாம்.
 எக்டருக்கு 25 கிராம் துத்தநாக       சல்பேட் மற்றும் 50 கிலோ இரும்பு சல்பேட்டை துத்தநாகம் மற்றும் இரும்பு பற்றாக்குறை       அறியப்படும்பொழுது அடிஉரமாக அளிக்க வேண்டும் (அல்லது) எக்டருக்கு தமிழ்நாடு வேளாண்மை       பல்கலைக்கழகம் மானாவாரி நெல் நுண்ணூட்டக் கலவை 12.5 கிலோவை  ஊட்டமேற்றிய தொழுவுரமாக 1:10 என்ற விகிதத்தில்       தகுந்த ஈரப்பதத்தில் 30 நாட்களுக்கு நோய் பாதுகாப்பிற்காக அளிக்க வேண்டும்.
 0.5% துத்தநாக சல்பேட் மற்றும்       1% இரும்பு சல்பேட் இலைத் தெளிப்பாக குறுத்து விடும் மற்றும் கதிர் வரும் பருவத்தில்       தெளிக்க வேண்டும்.
 இலைவழி உரமான       யூரியா 1 சதம்  +  டிஏபி 2 சதம் கரைசல் இருமுறை, பூங்குருத்து உருவான தருணத்திலும்,       10 நாட்கள் கழித்து மீண்டும் தெளித்தல் நன்று |