- ஆற்றில் தண்ணீர் வருவது பின்தங்கும் தருணத்தில் புழுதி       நாற்றங்கால் வரப்பிரசாதமாக அமையலாம்  
- நாற்றங்காலின் பரப்பு,       விதை அளவு மற்றும் விதை நேர்த்தி சேற்று நாற்றங்காலுக்குக்       குறிப்பிடப்பட்டவை போன்றதே 
- நாற்றங்கால் நன்கு உழப்பட்டு 1 முதல் 1.5 மீ       அகலமுள்ள பாத்திகளாக அமைத்தல் வேண்டும். பாத்தியினைச் சுற்றிலும் ஒரு அடி       அகலமுள்ள வாய்க்கால் அமைப்பது நல்லது  
- களிப்பு அதிகமுள்ள மண் வகைகளில் மேட்டுபாத்திகள்       அமைக்கலாம், மணற்பாங்கான பகுதிகளில் படுக்கைப்       பாத்திகள் போதுமானது. 
- நேர்த்தி செய்யப்பட்ட உலர்ந்த விதைக் தூவப்பட்டு, நன்கு மக்கிய மாட்டு அல்லது தொழு       உரத்தினால் விதைகள் மூடப்பட வேண்டும் 
- நீர் நிர்வாகம் மண்நனையும் அளவு நீர் பாய்ச்சுவதோ, தெளிப்பதோ வேண்டும் 
- நான்கு இலைப் பருவம் நடவிற்கு ஏற்றது.