- தழைச்சத்து இடும்       தருணம் இலை வண்ண அட்டையின் மூலம் முடிவு செய்யப்பட்டு அளவிடப்பட்ட எண்ணை வைத்து       முடிவுசெய்யப்படுகிறது.
- இலையின் பச்சைய       அளவை மிதிப்பழவிடுவது நடவு நட்ட 14ஆம் நாளிலிருந்து அல்லது விதைத்த 21 ஆம் நாளிலிருந்து       பின்னபற்றவேண்டும்.
- அளவீடு ஒவ்வொரு       வாரமும் செய்யப்படவேண்டும்.
- மதிப்பீடு செய்ய       ஏற்ற இலை முழுதாய் வெளிவந்துள்ள இலைகளில் மேலிருந்து மூன்றாவது ஆகும்
- மதிப்பீடு செய்ய       குறைந்த பட்சம் 10 இலைகள் இங்கும் அங்குமாக தேர்வு  செய்யப்படவேண்டும்.
- வண்ண அட்டையைக்       கொண்டு இலையின் வண்ணத்தை ஒப்பிடும்போது சூரியவெளிச்சம் இலையில் நேரடியாகப்படாதவாறு       அளவிடுபவர் நிற்கவேண்டும்
- அளவிடும் காலம்       பொதுவாக ஒருகுறிப்பிட்ட நேரமாக இருத்தல் நல்லது. அது காலை 8-10 மணிக்குள் என்றால்       நல்லது.
- அளவிடுபவரும்       தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நபரே என்றால் அளவீடு சரியாக அமையவாய்ப்புள்ளது.
- அளவீடு எண் ரகத்திற்கு       ஏற்றவாறு வேறுபடுகின்றது. அதிக தழைச்சத்தை தாங்க முடியாத இரகங்கள் எனில்3.0 என்றும்       மற்ற ரகங்களுக்கும், 4.0 என்பதை மறக்கலாகாது
- அவ்வாறு முடிவு செய்யப்பட்ட அளவீடு பத்திற்கு ஆறு அல்லது அதற்கு மேல் குறிப்பிட்ட அளவைவிட கீழ் இருக்குமெனில் உடனே தழைச்சத்து இடப்பட வேண்டும் என்று பொருள். நட்ட ஏழு நாட்களில் 25 கிலோ / எக்டர் தழைச்சத்து (ஒரு பை யூரியா) அளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து ஒவ்வொரு முறையும் 40 கிலோ / எக்டர் தழைச்சத்தை குருவை அல்லது குறுகிய கால இரகங்களுக்கு அளிகக் வேண்டும் அல்லது ஒவ்வொரு முறையும் 30 கிலோ / எக்டர் தழைச்சத்தினை மத்திய மற்றும் நீண்ட கால இரகங்களுக்கு அளிக்க வேண்டும். இரகங்கள் மற்றும் கலப்பினங்களின் அளவீட்டு எண் 4கிற்கு கீழ் குறைந்தும் மற்றும் வெள்ளை பொன்னி இரகத்திற்கு 3 என்ற அளவீட்டு எண்ணாக இருப்பினும் நட்ட 14ம் நாளிலிருந்து கண்காணிக்க வேண்டும்.
- வயதான நாற்றுகள் : 35 முதல் 45 நாள் வயதுள்ள நாற்றுகளை நடவிற்கு பயன்படுத்தினால் அதன் மகசூலை அதிகரிக்க 35 கிலோ / எக்டா தழைச்சத்தினை அடியுரமாக அளிக்க வேண்டும். மேலும் நட்ட 14-ம் நாளிலிருந்து இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
** பகுதிக்கு குறிப்பிட்ட ஊட்டச்சத்து மேலாண்மை அணுகு முறை மூலம் நெல் பயிரிடும் பகுதிகளுக்காக விவசாயிகள் மேற்கொள்ளும் வகையில் பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உர அளவுகள் (காவேரி டெல்டா பகுதிகளை தவிர)
                  
                    
                      | வ.எண் | பகுதி | பரிந்துரைக்கப்பட்ட    உர அளவு (கிலோ/எக்டர்)* | 
                    
                      | மணிச்சத்து | சாம்பல்சத்து | 
                    
                      | 1 | காவேரி டெல்டா பகுதி | 
                    
                      | (i) பழைய டெல்டா | 35 | 50 | 
                    
                      | (ii) புதிய டெல்டா | 35 | 80 | 
                    
                      | 2 | கோயமுத்தூர் மாவட்டம் | 
                    
                      | (i) பொதுவாக | 30 | 40 | 
                    
                      | (ii)    ஆனைமலை மண்டலம் | 30 | 80 | 
                    
                      | 3 | கிள்ளிகுளம் | 30 | 50 | 
                    
                      | 4 | திருச்சி | 35 | 50 | 
                    
                      | 5 | அம்பாசமுத்திரம் | 40 | 50 | 
                    
                      | 6 | பவானி சாகர் | 20 | 25 | 
                    
                      | 7 | பையூர் | 25 | 45 | 
                    
                      | 8 | ஏத்தாப்பூர் | 30 | 45 | 
                    
                      | 9 | அருப்புக்கோட்டை | 20 | 30 | 
                    
                      | 10 | கடலூர் | 30 | 50 | 
                  
                  ** குறிப்பிட்ட மண் வகைகளிலிருந்து கிடைக்கும் மகசூலை பொருத்து எஸ்.எஸ்.என்.எம் அடிப்படையில் மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து பல்வேறு நெல் பயிரிடும் பகுதிகளுக்காக விவசாயிகள் மேற்கொள்ளும் வகையில் பரிந்துரைக்கப்பட்டது.