| 
                  நீர்மறைந்து  மண்வெடிப்பு தோன்ற தேவையான நாட்கள்
                    சேற்றுழவும்,       உழுது நிலத்தை சமன் செய்தலும், நீரின் தேவையைக் குறைக்கின்றன.இரும்புச் சக்கரக்       கலப்பை மூலம் சேற்றுழவு செய்யும்போது நீர் மண்ணினுள் ஊடுருவி வீணாவது 20%       வரை       தடுக்கப்படுகிறது.வயலில் மடக்கி       உழப்பட்ட பசுந்தாள் உரம் நல்ல முறையில் மக்குவதற்கு குறைந்தது ஒரு அங்குல நீர்       நிறுத்தப்படவேண்டும். குறைவான நார்த்தன்மையுடைய சணப்பை, தக்கைபபூண்டு போன்றவைகளுக்கு       7 நாட்களும் அதிகம் நார்த்தன்மையுடைய கொளுஞ்சி இனங்களுக்கு 15 நாட்களும் நீர்       நிறுத்தி, அதன்பின்னரே நடவு செய்யவேண்டும்.நடவு செய்யப்படும்பொழுது,       தண்ணீரின் அளவு, சேறும் சகதியுமாய் இருத்தல் நல்லது அவ்வாறு அமைந்தால் சரியான       ஆழத்தில் நடவும். அதிக தூர் பிடிப்பதற்கான சந்தர்ப்பமும் அதிகம்.நட்ட ஒரு வாரத்திற்கு       ஒரு அங்குல நீர் தேக்கி வைக்கவேண்டும். இக்காலம் தூர் பச்சை படிக்கும் காலமானதால்,       இந்த நீர் அளவு குறையாமல் நீர் பராமரிக்கவேண்டும். 
 
                  நீர்  பாய்ச்சுவதற்கான முன்னெச்சரிக்கைகள்
                    
                      | மண் வகை | கோடையில் | குளிர்காலத்தில் |  
                      | இருபாடு    மண் | 1 | 3 |  
                      | களிமண் | தண்ணீர்    மறைந்தவுடன் | 1-2 |  
                    கொண்டைக் கதிர்       பருவத்திற்கு பின்னர் 2 அங்குலத்திற்குமேல் ஆழமாக நீர் பாய்ச்சுவதோ தொடர்ந்து       அதே நிலையில் தண்ணீரின் அளவை நிலை நிறுத்துவதோ வேரின் திறனை வெகுவாக பாதிக்கவல்லது.       வேர் அழுகி திறனை இழப்பதும். கதிர் சரியாக வெளிவராததும், வந்த கதிர்களில் நெல்       மணிகள் சரிவர முதிர்ச்சியடையாததும்,  தவறான       நீர் மேலாண்மையினால் என்பது நன்கு உணரப்படுதல் வேண்டும்.அவ்வாறு அதிகமான       ஆழத்திற்கு நீர் தேங்க வேண்டிய நிர்பந்தத்தில் சரியான வடிகால் அமைக்கப்படுவது       அவசியம் ‘நீர் கட்டுவது கட்டிய நீர் முழுவதுமாய் மறைந்த பின்னர்’ என்ற மேலாண்மையைப்       பின்பற்றினால் நல்லது.பொதுவாக கடைசி       நீர் கட்டுவது அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்பாக அமைவது நல்லது. 
                  
                    ஒவ்வொரு வயலும்       25 முதல் 50 சென்ட் உள்ளதாக அமைத்துக் கொள்ளுதல்இவ்வாறு தேர்வு       செய்யப்பட்ட வயல்களின் நான்கு புறமும் வரப்பிற்கு உட்புறமாக 30-45 செ.மீ. இடைவெளியில்       கை வரப்பு அமைத்தல் தண்ணீர் துவையைக் குறைப்பதுடன் வரப்பின் மூலம் தண்ணீர் வீணாவதை       தடுக்கவும் முடியும். மண்ணின் நீர்க்கசிவு       பூமியின் அடியைநோக்கி சென்று வீணாகுவதைத் குறைக்க நீரின் மட்டம் 2 அங்குலத்திற்கும்       குறைவாக பராமரித்தல் அவசியம்.நீர்பிடிப்பு       உள்ள நிலப் பகுதிகளுக்கு வடிகால் அமைக்கப்படுவது மிகமிக அவசியம். வடிகால் வயலின்       மத்தியிலும், குறுக்காகவும் 2 அடி ஆழத்திற்கு 11/2 அடி அகலத்திற்கு       அமைக்கப்படலாம்.நீர் மேலாண்மையின்       சிறப்பு, எந்த நிலையிலும் மண்ணில் வெடிப்புகள் தோன்றும் வரை நீர் மீண்டும் பாய்ச்சுவது       தாமதப்படுத்தப்படலாகாது.ஆற்றுப்பாசனம்       உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மிகவும் முறைப்படி, மிகையாமல் பயன்படுத்துதல் அவசியம்.இருபோக  நெல் பயிரிடும் ஆற்றுப்பாசனப் பகுதிகளில் நீர்       பற்றாக்குறை அல்லது தட்டுப்பாடு எதிர்பார்க்கப்படும் காலங்களில் குறுவை நெல்லிற்குப்       பதிலாக பயறுவகைப் பயிர்களைப் பயிரிட்டு நீரின் தேவையைக் குறைக்க வேண்டும் அல்லது       நஞ்சையில் புழுதி விதைத்த இறவை நெல் முறையைப் பின்பற்றலாம். |