| 
                20 சென்டிற்கு 1 டன்       தொழு உரம்/ மாட்டு       எரு தேவை கடைசி உழவின் போது 20       சென்ட் நாற்றங்காலிற்கு 40 கிலோ டிஏபி       உரமோ அல்லது 16 கிலோ யூரியாவும்       120 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் கலந்தோ       இடப்படவேண்டும்.அடியுரமாக டிஏபி இடுவது குறைவான மண் சத்துள்ள நாற்றங்கால்களுக்கு       மட்டுமே மண் சத்துக்கள் குறைவாக உள்ள நாற்றங்காலுக்கு, நாற்றுக்கள் 25 நாட்களுக்குப்       பின்னர் எடுத்து நடவு செய்ய வேண்டிய தருணங்களில், 25 நாட்களுக்கு       பின் இரசாயன       உரங்களை இட்டு, அதிகபட்சம் அன்றிலிருந்து 10 நாட்களுக்குள் நாற்றுக்கள் எடுத்து நடவு செய்யப்படுதல் அவசியம்மிக அதிகமான களிமண் பூமிகளில் நாற்றுக்கள் எடுக்கும் தருணத்தில் வேர்கள்       அழுகுகின்ற நிலை ஏற்படின், விதைத்த       10 ம் நாள் ஒரு சென்டிற்கு 4 கிலோ       ஜிப்சம் மற்றும் 1 கிலோ டிஏபி கலந்து இட வேண்டும். |