| வேளாண்மை :: தானியங்கள் :: திருந்திய நெல் சாகுபடி | 
          
            | ஊட்டச்சத்து மேலாண்மை | 
          
            | 
            நடவு நெல்லுக்குரிய முறை.
தழைச்சத்து மேலாண்மையில் இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தல் மிகவும் நன்மை தரும். பசுந்தாள் உரம் மற்றும் தொழு உரம் பயன்பாடு வளர்ச்சி மற்றும் நெல் மகசூலை அதிகரிக்கும்.களர் மண்ணுக்கு, களைக்கருவியின் உபயோகத்தின் போது அஸோபாஸ்மேட் இடுதல், 2.2 கிலோ அஸோபாஸ்மேட் மற்றும் பி.பி.எப்.எம்., சேர்த்து எக்டருக்கு 500 மிலி தெளிப்பு முறையில்  இட வேண்டும். | 
          
            | இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து மேலாண்மை | 
          
            | 
          
            | 
              இலை வண்ண அட்டையின் அளவீடுகள் மூலம்  தழைச்சத்து இடும் நேரம் அறிவிக்கப்படுகிறது. விதைத்த 14 நாட்களுக்குப் பிறகு  நடப்பட்ட நெல்லில் அளவீடுகள் எடுக்க வேண்டும் அல்லது நேரடி நெல் விதைத்த 21 நாட்களுக்குப் பிறகு அளவீடுகள் எடுக்க வேண்டும். பூப்பூக்கும் பருவத்திற்கு முன் வரை வார இடைவெளியில் திரும்பத் திரும்ப அளவீடுகள் எடுக்க வேண்டும்.  இலையின் நிறத்தை அளவெடுத்து, மேலிருந்து மூன்றாவது இலை தான் குறியீட்டு இலை. இலை வண்ண அட்டையின் மூலம் காலையில் 8லிருந்து 10 மணிக்குள் இலையின் நிறத்தைப் பொருத்திப் பார்க்க வேண்டும். அளவீடுகளைப் பத்து இடத்தில் எடுக்க வேண்டும். வெள்ளைப் பொன்னியில் இலை வண்ண அட்டையின் குறிப்பிட்ட மதிப்பு 3க்கும் குறைவாக இருந்தால் தழைச்சத்து குறைவு மற்றும் மற்ற ரகங்கள் மற்றும் வீரிய ரகங்களில் 4 க்குக் குறைவாக இருந்தால்  தழைச்சத்து குறைவு என அறியப்படுகிறது.10 க்கு 6 அளவீடுகள் குறிப்பிட்ட வண்ண மதிப்பிற்குக் குறைவான மதிப்பீட்டைக் காட்டுவதினால் தழைச்சத்து இட வேண்டும். வறண்ட பருவத்தில் ஒரு எக்டருக்கு 35 கிலோ தழைச்சத்து மற்றும் 30 கிலோ தழைச்சத்து இறவைப் பருவத்தில் இட வேண்டும்.இந்த அணுகுமுறையில் இலை உரம் மற்றும் மண்புழு உரம் இடுவதால் நெல்லின் வளர்ச்சியையும் மகசூலையும் உயர்த்தும். |  
 |  |