திருந்திய நெல் சாகுபடி – சர்வதேச வலை அமைப்பு மற்றும் வளங்களின் வலை அமைப்பு
நாற்றங்கால் மேலாண்மை

மண் கலவை |
 மண் கலவை கலத்தல் |

மர அச்சு |

மர அச்சை நிரப்புதல் |

விதைகளை விதைத்தல் |

நாற்றுகளை எடுத்தல் |
 நாற்றுப்பாய்களை எடுத்தல் |
நடவு வயல்

சதுர நடவு |

நடப்பட்ட இளநாற்று |
களையெடுத்தல்

10 -15 நாட்களுக்கு மேல் களைக்கருவி கொண்டு களையெடுத்தல் |

களைக்கருவி செலுத்துதல் |

இரண்டு பக்கமும் களைக்கருவியை செலுத்துதல் |
ஊட்டச்சத்து மேலாண்மை:

இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து மேலாண்மை |
 வளர்ந்த திருந்திய நெல் சாகுபடி வயல் |
தமிழ்நாட்டில் திருந்திய நெல் சாகுபடி
1. பருவம்
:
- வறண்ட வானிலையில் உறுதியான நீர்ப்பாசனம் உகந்தது.
- அதிக மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் வளர்ந்து வரும் பயிரின் இடர்ப்பாடுகள் (தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையின் காலம்)
2. இரகங்கள்
:
- வீரிய ரகங்களின் அதிகமான தூர் வெடிக்கும் திறன்
3. நாற்றங்கால்:
விதையளவு
- 7- 8 கிலோ ஒரு குத்துக்கு ஒற்றை நாற்று
- 12 – 15 கிலோ /ஏக்கருக்கு ஒரு குத்துக்கு இரண்டு நாற்று நெல்பயிர் வளர்வதில் இடர்ப்பாடுகள் உள்ள இடத்திற்கு உகந்தது.
நாற்றங்கால் நிலத்தைத் தயார் செய்தல்: 1 ஏக்கரில் நடுவதற்கு 100 மீட்டர் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். சமமான நிலத்தை நீர் ஆதாரத்திற்குப் பக்கத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும். பிளாஸ்டிக் விரிப்பை விரித்து அல்லது பாலித்தீன் பைகளை உபயோகித்து மெல்லிய உயர்த்தப்பட்ட படுக்கையில் வைப்பதால், வேர்கள் வளர்ந்து மண்ணின் ஆழத்திற்குச் செல்லாமல் தடுக்கப்படுகிறது.
மண்கலவை தயார் செய்தல்: 4m3 மண் கலவை ஒவ்வொரு 100 மீட்டர் நாற்றங்காலுக்கும் தேவைப்படுகிறது. 70% மண்கலவை + 20% நன்கு மட்கிய அழுத்தப்பட்ட சேறு/ உயிர் எரிவாயு சாறு / makiya eru + 10 % நெல் உமி. 1.5 கிலோ மண்கலவையில் ஒருங்கிணைத்து டை அம்மோனியம் பாஸ்பேட் பொடியில் அல்லது 2 கிலோ 17-17-17 N.P.K. உரத்துடன் கலந்து இட வேண்டும்.

மண் கலவை |

|
மண்கலவையைக் கலத்தல் : மண்கலவையை நிரப்புதல்: 0.5 மீட்டர் நீளத்திற்கு மரச்சட்டத்தை வைக்க வேண்டும். பிளாஸ்டிக் இலையில் அல்லது வாழை இலையில் 1 மீட்டர் அகலத்திலும் மற்றும் 4 செ.மீ. ஆழத்திலும் 4 சம பாகங்களாகப் பிரித்தல். மரச்சட்டத்தை மண்கலவையுடன் மேல்பாகம் வரை மூடி விடவும்.
விதைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் முளை கட்டுதல்
24 மணி நேரம் விதைகளை ஊற வைத்தல். வடிகட்டி மற்றும் ஊறவைத்த விதைகளைக் காய வைத்தல் விதை முளைத்து வேர் பிரியும் போது (2-3 மீட்டர் நீளத்திற்கு) விதைக்க வேண்டும்.
உயிர் உரத்தின் பயன்பாடு: 100 மீ. நர்சரி நிலத்திற்கு 2 கிலோ அஸோஸ்பைரில்லம் மற்றும் 5 கிலோ மைக்கோரிஷால் பூஞ்சாணம் பயன்படுத்துதல்.
விதைத்தல்:
- முளைத்த விதைகளை 90 -100 கிராம்/m2 என்ற அளவில் சீராக விதைக்க (100 கிராம் உலர்ந்த விதை முளைத்தபின் அதன் எடை 130 கிராம் வரை இருக்க வேண்டும்.
- உலர்ந்த மண்ணை வைத்து 5 மில்லி மீட்டருக்கு விதையை மூடுதல்.
- ரோஸ் கேன் பயன்படுத்தி உடனடியாகத் தண்ணீரைத் தெளித்து படுக்கையை நனைத்து மரச்சட்டத்திலிருந்து நீக்குதல்
- தேவைப்படும் பகுதி முடிவடையும் வரை இந்த முறையைத் தொடர வேண்டும்.
|

முளை கட்டிய விதைகள் |
நீர் பாய்ச்சுதல்:
- நாற்றங்காலுக்கு ரோஸ் கேன் பயன்படுத்தி தேவைப்படும் போது (இரண்டு அல்லது மூன்று முறை / நாளைக்கு) நீர் விட்டு மண்ணை ஈரப்பதமாக வைக்க வேண்டும்.
- விதைத்த 5 நாட்கள் வரை கன மழையிலிருந்து நாற்றங்காலைப்பாதுகாக்க வேண்டும். 6 நாட்களுக்குப்பிறகு, லேசாக நீரை நாற்றுப் பாயைச் சுற்றிலும் பராமரிக்க வேண்டும்.
- நாற்றுப் பாயிலிருந்து நீக்கி நடுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு தண்ணீரை வடிக்க வேண்டும்.
|

ரோஸ் கேனில் தண்ணீர் விடுதல் |
உரக்கரைசலைத் தெளித்தல்: நாற்றுகளின் வளர்ச்சி மெதுவாக இருந்தால், 0.5% யூரியா + 0.5 % துத்தநாக சல்பேட் கரைசலை விதைத்த பிறகு 8- 10 நாட்களில் தெளிக்க வேண்டும்.
 |
பாய் நாற்றங்கால் |
நாற்றுப்பாய்களை எடுத்தல்: நடுவதற்கு நாற்றுகள் குறிப்பிட்ட அளவு உயரத்தை அடைந்தவுடன் 15 வது நாளில் நட வேண்டும். நாற்றுப் பாய்களை எடுத்து வயலுக்கு மாற்ற வேண்டும்.

நாற்றுகளை எடுத்தல் |
 நாற்றங்கால் பாய்களை எடுத்தல் |

|
மாற்றியமைக்கப்பட்ட உயர் திருந்திய பாய் நாற்றங்கால் முறையில் நாற்று உற்பத்தி: 1.0% பொட்டாசியம் குளோரைடு + பொடி டிஏபி உடன் விதை மண்ணை சேர்த்து விதை வலுவூட்டல் (2 கிலோ விதை) 9 வது நாள் விதை விதைத்த பிறகு சூடோமோனஸ் 240 கிராம் உடன் 0.5 சதவீதம் யூரியா கரைசலைத் தெளித்தல்
4. நடவு வயல்:
இறவை நிலத்தை நடவு நெல்லுக்கு போன்று தயார் செய்ய வேண்டும்.
சரியான அளவில் நிலத்தை சமன் செய்வதால் சீரான நீர்ப்பாசன மேலாண்மைக்கு உகந்தது.
5. நடவு:
• 14-15 தினங்கள் ஆன 1 அல்லது 2 நாற்றுகள்
• 25 x 25 செ.மீ (10 x 10 அங்குலம்) சதுர நடவு
• நடப்பட்ட 7 மற்றும் 10 வது நாட்களுக்குப் பிறகு இடையில் இடைவெளியை நிரப்ப வேண்டும்.
• நாற்றுகளை நாற்றங்காலிலிருந்து எடுத்த 30 நிமிடங்களுக்குள் நடவு வயலில் நடவு செய்திடல் வேண்டும்.
• கன மழை பெய்து கொண்டிருக்கும் பகுதிகளில் பயிர் உருவாக்கம் சற்று கடினமாக இருக்கலாம் (தமிழ்நாடு வடகிழக்கு பருவ மழை காலங்களில்)
சதுர நடவு
|

நடப்பட்ட இளநாற்று |
6. பாசன மேலாண்மை:
-
ஆரம்ப கால 10 நாட்களில் மண் நனைப்பதற்கு மட்டுமே பாசனம் செய்தல்.
-
பூங்கொத்து உருவாக்கம் வரை மண்ணில் மயிர்கோடு விரிசல் ஏற்பட்டால் 2.5 செ.மீ அதிகபட்ச ஆழத்திற்கு நீர்ப் பாசனம் செய்தல்.
-
கட்டிய நீர் மறைந்த பின்னர், நட்ட பிறகு 5 செ.மீ. ஆழம் வரை நீர் பாசனத்தை அதிகரித்தல்
|
 |
 |
|
மாற்று முறை நனைந்த மற்றும் உலர்ந்த நீர் பாய்ச்சல் (மயிர்க்கோடு விரிசல் வரும் வரை நீர்ப் பாசனம் செய்தல்) |
7. களை மேலாண்மை:
• சுழற்களைப்பான் / கோனோ களை எடுக்கும் கருவி / இரண்டு வரிசை களையெடுக்கும் மின்கருவி பயன்படுத்துதல்
• முன்னோக்கி மற்றும் பின் நோக்கி நகரும் களைக் கருவி மூலம் களையெடுத்தல் மற்றும் நட்ட 10-15 நாட்களுக்குப் பிறகு வரிசைகள் மற்றும் திசையில் 7-10 நாட்கள் இடைவெளியில் மண்ணுக்குக் காற்றோட்டம் அளித்தல் வேண்டும்.
• வேர்களுக்கு அருகில் கைக்களை மூலம் களைகளை அகற்ற வேண்டும்.
c் |

|

இரண்டு பக்கமும் களைக்கருவியை செலுத்துதல் |
8. ஊட்டச்சத்து மேலாண்மை:
• நடவு நெல்லுக்குரிய முறை
• தழைச்சத்து மேலாண்மையில் இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தல் மிகவும் நன்மை தரும்.
• பசுந்தாள் உரம் மற்றும் தொழு உரம் பயன்பாடு வளர்ச்சி மற்றும் நெல் மகசூலை அதிகரிக்கும்.
• களர் மண்ணுக்கு, களைக்கருவியின் உபயோகத்தின் போது அஸோபாஸ்மேட் இடுதல், 2.2 கிலோ அஸோபாஸ்மேட் மற்றும் பி.பி.எப்.எம்., சேர்த்து எக்டருக்கு 500 மிலி தெளிப்பு முறையில் இட வேண்டும்.
இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து மேலாண்மை:
- இலை வண்ண அட்டையின் அளவீடுகள் மூலம் தழைச்சத்து இடும் நேரம் அறிவிக்கப்படுகிறது.
- விதைத்த 14 நாட்களுக்குப் பிறகு நடப்பட்ட நெல்லில் அளவீடுகள் எடுக்க வேண்டும் அல்லது நேரடி நெல் விதைத்த 21 நாட்களுக்குப் பிறகு அளவீடுகள் எடுக்க வேண்டும்.
- பூப்பூக்கும் பருவத்திற்கு முன் வரை வார இடைவெளியில் திரும்பத் திரும்ப அளவீடுகள் எடுக்க வேண்டும்.
- இலையின் நிறத்தை அளவெடுத்து, மேலிருந்து மூன்றாவது இலை தான் குறியீட்டு இலை.
- இலை வண்ண அட்டையின் மூலம் காலையில் 8லிருந்து 10 மணிக்குள் இலையின் நிறத்தைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.
- அளவீடுகளைப் பத்து இடத்தில் எடுக்க வேண்டும்.
- வெள்ளைப் பொன்னியில் இலை வண்ண அட்டையின் குறிப்பிட்ட மதிப்பு 3க்கும் குறைவாக இருந்தால் தழைச்சத்து குறைவு மற்றும் மற்ற ரகங்கள் மற்றும் வீரிய ரகங்களில் 4 க்குக் குறைவாக இருந்தால் தழைச்சத்து குறைவு என அறியப்படுகிறது.
- 10 க்கு 6 அளவீடுகள் குறிப்பிட்ட வண்ண மதிப்பிற்குக் குறைவான மதிப்பீட்டைக் காட்டுவதினால் தழைச்சத்து இட வேண்டும். வறண்ட பருவத்தில் ஒரு எக்டருக்கு 35 கிலோ தழைச்சத்து மற்றும் 30 கிலோ தழைச்சத்து இறவைப் பருவத்தில் இட வேண்டும்.
- இந்த அணுகுமுறையில் இலை உரம் மற்றும் மண்புழு உரம் இடுவதால் நெல்லின் வளர்ச்சியையும் மகசூலையும் உயர்த்தும்.
|

|
Source: http://www.pustaka-deptan.go.id/rkb/knowledgeBank
Updated on :Feb 2015 |