Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: திருந்திய நெல் சாகுபடி
விதைத்தல் & நீர் பாய்ச்சுதல்

விதைத்தல்:

  • முளைத்த விதைகளை 90 -100 கிராம்/m2 என்ற அளவில் சீராக விதைக்க  (100 கிராம் உலர்ந்த விதை முளைத்தபின் அதன் எடை 130 கிராம் வரை இருக்க வேண்டும்.
  • உலர்ந்த மண்ணை வைத்து 5 மில்லி மீட்டருக்கு விதையை மூடுதல்.
  • ரோஸ் கேன் பயன்படுத்தி உடனடியாகத் தண்ணீரைத் தெளித்து படுக்கையை நனைத்து மரச்சட்டத்திலிருந்து நீக்குதல்
  • தேவைப்படும் பகுதி முடிவடையும் வரை இந்த முறையைத் தொடர வேண்டும்.

முளை கட்டிய விதைகள்

நீர் பாய்ச்சுதல் :

  • நாற்றங்காலுக்கு ரோஸ் கேன் பயன்படுத்தி தேவைப்படும் போது (இரண்டு அல்லது  மூன்று முறை / நாளைக்கு) நீர் விட்டு  மண்ணை ஈரப்பதமாக வைக்க வேண்டும்.
  • விதைத்த 5 நாட்கள் வரை கன மழையிலிருந்து நாற்றங்காலைப்பாதுகாக்க வேண்டும்.  6 நாட்களுக்குப்பிறகு, லேசாக நீரை நாற்றுப் பாயைச் சுற்றிலும் பராமரிக்க  வேண்டும்.
  • நாற்றுப் பாயிலிருந்து நீக்கி நடுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு தண்ணீரை வடிக்க வேண்டும்.  

ரோஸ் கேனில் தண்ணீர் விடுதல்