Agriculture
சாதகமற்ற சூழ்நிலை :: வறட்சி

வறட்சியினால் தாவரங்களில் ஏற்படும் விளைவுகள்

புறத்தோற்ற பண்புகளில் ஏற்படும் மாற்றங்கள்

முளைப்புதிற் மற்றும் நாற்றுகளின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இலைதழைப்பருவம்: இப்பருவத்தில் இலைகளின் விரிவடையும்திறன் இலைகளி் வளர்ச்சி வெகுவாகக் குறைகிறது. இலைகள வாடிவிடுகின்றன. செல்களிலுள்ள நீர்த்திறன் குறைவதால், அப்சிஸிக் அமிலத்தின் உற்பத்திதிறன் அதிகரிப்பதுடன் இலைகள் உதிர்ந்துவிடுகின்றன.

இனப்பெருக்க பருவம்: இப்பருவத்தில் வறட்சி ஏற்படுமேயானால், தாவரத்தின் இழப்பை ஈடுசெய்வது மிகவும்கடினம்

அ).தானியங்களில் ஏற்படும் பாதிப்பு: பூக்கும் பருவத்தில் நெல், கோதுமை போன்ற தானிங்களில் வறட்சி ஏற்பட்டால் அவற்றின் மகசூல் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
ஆ).பயறுவகைப் பயிர்களில் ஏற்படும் பாதிப்பு: பூக்கும் பருவத்தில் வறட்சி ஏற்பட்டால், பூக்கும் தன்மை இழக்கப்படுகிறது. காய்பிடிக்கும் பருவத்தில் வறட்சி ஏற்படுமேயானால், காய்களின் எண்ணிக்கை குறைகிறது.
இ).பருத்தியில் ஏற்படும் பாதிப்பு: காய்களின் எண்ணிக்கை குறைவதால், மகசூல்பெரிதும் பாதிக்கப்படுகிறது
   
   

ஈ). ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்றவற்றில் பழங்கள் அதிகப்படியாக உதிர்ந்துவிடுகின்றது. சில வகை பழப்பயிர்களில் பூக்கும் பருவத்திற்கு முன்பு வறட்சி காணப்பட்டால், பழங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

பூக்கும் தன்மை: வறட்சியின தன்மை நீடிக்குமானால், பயிர்களில் பூக்கும் தன்மை வெகுமுன்னதாகவே ஆரம்பித்துவிடுவதால் விதை, பழங்களின் அளவு சிறுத்து, மகசூலின் அளவும் குறைந்துவிடும்

வறட்சியினால் ஏற்படும் நன்மைகள்

  • ரப்பர் மரத்தில் ரப்பரின் அளவு அதிகரித்தல்
  • சிலவகைப் பயிர்களில் அல்கலாய்டுகளின் அளவு அதிகரிக்க உதவுகிறது
  • புதினா, ஆலிவ் மற்றும் சோயாபீன்ஸில் எண்ணெயின் அளவு அதிகரிக்க வழிவகை செய்கிறது
  • மிதமான வறட்சியானது ஆப்பிள், ஜெரி, பீச் போன்றவற்றில் கரையும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்து, பழங்களின் நிறத்தையும் கூட்டுகிறது.
  • கோதுமையில் புரதத்தின் அளவு அதிகரிப்பதும் உணரப்பட்டுள்ளது
 
Fodder Cholam