வறட்சி மேலாண்மை
1. ஊட்டச்சத்து மேலாண்மை
- வறட்சி ஏற்படும் போது, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் பற்றாக்குறை அதிகம் காணப்படும். இது மட்டுமல்லாமல் கரும்பு, துத்தநாகம் மற்றும் போரான் போன்ற நுண்ணூட்டச் சத்துக்களின் பற்றாக்குறையும் ஏற்படும். எனவே கீழ்க்கண்ட சத்துக்களை பயிர்களுக்க இணங்க, குறைபாட்டிற்கு ஏற்ப தெளிக்கவேண்டும்.
- 20 சதவீதம் அம்மோனியம் பாஸ்பேட்
- 0.5-1 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு
- 0.5 சதவீதம் துத்தநாக சல்பேட்
- 0.5-1 சதவீதம் இரும்பு சல்பேட் + 1 சதவீதம் யூரியா
- 0.3 சதவீதம் போரிக் அமிலம்
ஆன்டிடிரான்ஸ்பிரன்ட்ஸ்
- பயிர்களின் நீராவிப் போக்கைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு ஆன்டிடிரான்ஸ்பரஸ் என்ற பெயர்.
இலைத்துளைகளை மூடுதல்
- 2,4 டி , பாஸ்பான் – டி, அட்ரசின்
- பினைல் மெர்க்குரி அசிட்டேட்
- ஹைட்ராக்ஸ் சல்போனேட்ஸ், பொட்டாசியம் மெட்டா பை சல்பேட்
- அப்சிலிக் அமிலம், எத்ரல், டிபா, சக்சினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், சைக்கோசெல்.
பிரதிபலிக்கும் தன்மையுள்ளவை
- கயோலின்
- சீனா களிமண்
- கால்சியம் பை கார்பனேட்
- சுண்ணாம்பு நீர்
- ஆல்கஹால் (ஹெக்சாடிகேனால், செட்டைல் ஆல்கஹால், மெத்தனால்)
- பேக்குலோபியூட்ரசால்
- பிராசினோலைடு
- ரிசார்சினால்
பாலித்தீன் பொருட்கள்
- மொபிலீஃப்
- ஃபோரிகாட்
- மெருகு
- எஸ் - 800
- ஹிகோ - 110 ஆர்
பயிர்களில் ஏற்படும் நன்மைகள்
- போதுமான அளவு மழை பெய்யாத போது பயிர்களில் மகசூலை அதிகரிக்க இந்த முறை உதவுகிறது.
- கடுமையான வறட்சி நிலவும் போது, ஒரு நிலையான மகசூலை எடுக்க வழிவகை செய்கிறது.
- தானியங்களின் அளவு பாதிக்கப்படுவதில்லை.
- விதைகளின் தரம் உயர்த்தப்படுகிறது.
- நீரைப் பயன்படுத்தும் திறன் குறைக்கப்பட்டு, நீர்ன் அளவு சேமிக்கப்படுகிறது.
- குறைந்த முதலீட்டில் பயிரின் சேதம தவிர்க்கப்படுகிறது.
- வறட்சியை சமன் செய்ய முடியும்.
- குறைந்த அளவு நீர்ப்பாசன வசதி உள்ள விவசாயிகளுக்க மிகவும் பயனளிக்கிறது.
- கோடைக் காலங்களில் நாற்றாங்கால் பயிரை சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது.
வளர்ச்சி ஊக்கிகளில் பயன்பாடு
- வறட்சிக் காலங்களில் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை நிலைநிறுத்த வளர்ச்சி ஊக்கிகள் பெரிதும் உதவுகின்றன.
சைக்கோசெல் மற்றும் மெபிகுவாட் குளோரைடு
- வேரின் வளர்ச்சியைத் தூண்டவும், நீராவிப் போக்கைத் தடுப்பதற்காகவும் உதவுகிறது.
சைட்டோகைனின் மற்றம் சாலிசிலிக் அமிலம்
- இலைகள் முதிர்ச்சியடையும் முன்னரே உதிர்வதைத் தடுக்கிறது. வறட்சிக் காலங்களில் தண்டில் சேமித்து வைக்கப்படும். உணவுப் பொருட்கள் பயிரின் வளர்ச்சிக்காகவம் பயன்படுத்தப்படுகிறது.
பிராசினோலைடுகள்
- பயிர்களின் ஒளிச்சேர்க்கைத் திறனை அதிகரிக்கிறது.
அஸ்கார்பிக் அமிலம்
- வறட்சிக் காலங்களில், செல் சவ்வுகளின் பாதிப்பைத்த தடுப்பதற்கு அஸ்கார்பிக் அமிலம் உதவுகிறது.
விதைகள் / தாவரங்களை கடினப்படுத்த
- 1 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு
- 1 சதவிகிதம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட்
- 100 பிபிஎம் சக்சினிக் அமிலம்
- 0.5 சதவிகிதம் சோடியம் குளோரைடு
- 100 பிபிஎம் சக்சினிக் அமிலம்
- 100 பிபிஎம் மாங்கனீசு சல்பேட்
- 100 பிபிஎம் அஸ்கார்பிக் அமிலம்
- 250 பிபிஎம் சைக்கோசெல்
- 0.5 சதவிகிதம் மெக்னீசியம் சல்பேட்
மேலும் சில வறட்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள்
- 2 சதவிகிதம் டீஏபி மற்றும் 1 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை பூக்கும் பருவம் மற்றும் தானியங்கள் உருவாகும் பருவத்தில் தெளித்தல்.
- 3 சதவிகிதம் கயோரின் கரைசலை வறட்சி காலங்களில் குறித்த பருவத்தில் தெளிக்கவேண்டும்.
- 500 பிபிஎம் சைக்செல்லை இலைவழியாகத் தெளித்தல்
- கரும்பு / சோளத்தின் சோகையை நிலப்போர்வையாக பயன்படுத்துவதன் மூலம் நிலத்தின் ஈரப்பதம் நிலைநிறுத்தப்படுகிறது.
- பருத்தியில் நைட்ரஜன் உரங்களை பிரித்து விதைத்த 45 மற்றும் 60 நாட்கள் கழித்து இடுதல்
- உயிர் உரங்களைப் பயன்படுத்துதல்
- விதைகளை கடினப்படுத்துதல்
- என்ஏஏ 40 பிபிஎம் ( 4 மில்லி பிளானோபின்ஸ் / 4.5 லிட்டர் தண்ணீர்)
- பருத்தியில் 15, 20வது கணுப்பகுதிக்கு மேலே உள்ள பகுதியை கிள்ளிவிடுவதன் மூலம் நீராவிப்போக்கைத் தவிர்க்கலாம்.
- 0.5 சதவிகிதம் துத்தநாக சல்பேட் + 0.3 சதவிகிதம் போரிக் அமிலம் + 0.5 சதவிகிதம் இரும்பு சல்பேட் + 1 சதவிகிதம் யூரியா போன்ற கரைசலை வறட்சிக் காலங்களில் பயன்
- படுத்துதல்.
|