Agriculture
சாதகமற்ற சூழ்நிலை :: வறட்சி

வறட்சியினால் பயிர்களில் ஏற்படும் மாற்றங்கள்

சிலவகை தாவரங்கள் வறட்சியை  தாங்கும் திறனுடையவைகளாக் காணப்படுகிறது. அதற்கு சில வகை காரணிகள் சாதகமாக அமைகின்றது.

1. வறட்சியைத் தவிர்த்து வாழும் தாவரங்கள்

இவ்வகைத் தாவரங்கள் வறட்சியைத் தாங்கி, அதன் வாழ்க்கைச் சுழற்சியை சில வாரங்களிலேயே முடித்துக் கொள்கிறது

2. சாற்றுச் செறிவு கொண்ட தாவரங்கள்

இவ்வகைத் தாவரங்களில் இலைத்துளைகள் பகலில் மூடியும், இரவில் திறந்தும் காணப்படும். பகலில் கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் மாலிக் அமிலம் போன்றவற்றின் உதவியினால் கார்பனை கிரகித்துக் கொண்டு சுவாசித்திலின்போது உட்புறமாக வெளியிடுகிறது.

3. சாற்றுச் செறிவற்ற தாவரங்கள்

Succulents-Pineapple

இந்த வகைத் தாவரங்கள் கீழ்க்கண்ட சில பண்புகளைப் பெற்றுள்ளது

  • கடின கியூட்டிகளுடன் கூடிய சிறிய இலைகள்
  • உட்புறம் புதைந்த இலைத்துளைகள்
  • கோடைகாலங்களில் அதிகப்படியான நீராவிப்போக்கைத் தவிர்ப்பதற்காக இலைகளை உதிர்த்து விடுதல்
  • அப்சிஸிக் அமிலம் மற்றும் எத்திலீன் உற்பத்தியை ஏற்படுத்துதல்
  • நீர் இழப்பைத் தவிர்ப்பதற்காக இலைதுளைகளை மூடிக்கொள்ளுதல்

Nerium

இவ்வாறாக, சுற்றுச் செறிவு மற்றும் சாற்றுச் செறிவற்ற தாவரங்கள், தாங்கள் பெற்றுள்ள சில சிறப்புப்பண்புகளால் வறட்சியைத் தாங்கி வளருகின்றன.

4. வறட்சி தாங்கும் திறன் கொண்ட தாவரங்கள்

இவ்வகைத் தாவரங்கள் கீழ்க்கண்ட சில பண்புகளைப் பெற்றுள்ளது


அதிகப்படியான ஒளிச்சேர்க்கைத் திறன்
நீர்த்தன்மையுடன் கூடிய புரோட்டோபிளாசம்
சரியான முறையில் கார்பனை நிலைநிறுத்துதல்
‘அக்குவாபோரின’ என்ற சிறப்பு சவ்வு புரதத்தை பெற்றிருப்பதால் நீரோட்டத்தை பன்மடங்கு அதிகரிக்கிறது.

 
Fodder Cholam