Agriculture
கேள்வி பதில்

கேள்வி – பதில்

1. நெல்லில் இலையின் விளிம்பு பகுதி காய்வதற்கான காரணம் என்ன?

சாம்பல் சத்து குறைபாட்டினால், இலையின் விளிம்புப் பகுதி முழுவதும் காய்கிறது.

2. நெல்லில் இலைகள் மஞ்சள் நிறமாவது ஏன்?

 தழைச்சத்து குறைபாட்டினால், முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக மாறுகின்றன. இரும்புச் சத்துக் குறைபாட்டினால், இளம் இலைகள் மஞ்சள் நிறமாகின்றன.

3.பயிர்களில் தழைச் சத்துக் குறைபாட்டின் அறிகுறிகள் என்னென்ன?
  • மஞ்சள் நிறமாகுதல்
  • பயிர் வளர்ச்சி குன்றுதல் / மிகக் குறைவான வளர்ச்சி
  • மிகக் குறைவான தூர்கள் / கிளைகள்
4.மணிச்சத்து குறைபாட்டினை எவ்வாறு கண்டறியலாம்?
  • குறைவான வேர் வளர்ச்சி
  • முதிர்நத இலைகள் மற்றும் கிளையின் அடிப்பகுதிகளில் இளஞ்சிவப்பு நிறம் தோன்றுதல்
  • வளர்ச்சி குன்றுதல்
5.‘தேயிலை மஞ்சளாதல்’ என்றால் என்ன?

கந்தகச் சத்து குறைபாட்டினால் தேயிலைச் செடிகளின் இலைகள் மஞ்சள் நிறமாகின்றன.

6.பயிர்களில் இரும்பு சத்து சோகை ஏற்படும் இரண்டு பயிர்களைக் குறிப்பிடுக.
  • கரும்பு
  • சோளம்
7.‘கெய்ரா’ என்றால் என்ன?

நெற்பயிர்களில் துத்தநாகக் குறைபாட்டில் ‘கெய்ரா’ நோய் தோன்றுகிறது.

7.இலைகளை சமைக்கும் போது எந்த சத்து குறைபாடு ஏற்படுகிறது?

கால்சியம்

8.எந்த சத்துக் குறைபாட்டினால் பழ ஏற்படுகிறது?

போரான்

9.கரும்பில் பகாலா இலைக் கருகல் எந்த சத்துக் குறைபாட்டினால் ஏற்படுகிறது?

மாங்கனீசு சத்துக் குறைபாட்டால்

10.கரும்பில் பகாலா இலைக் கருகல் எந்த சத்துக் குறைபாட்டினால் ஏற்படுகிறது?

மாங்கனீசு சத்துக் குறைபாட்டால்

11.பயிர்களில் இரும்பு பச்சை சோகையை எப்படிக் கட்டு்ப்படுத்தலாம்?

250-500 கிராம் இரும்பு சல்பேட்டை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

12.பயிர்களில் போரான் சத்துக் குறைப்பாட்டினால் ஏற்படும் பொதுவான அறிகுறிகள் என்ன?
  • நுனி வளர்ச்சி தடைபடும். அதைத் தொடர்ந்து பக்கவாட்டில் உள்ள மொட்டுகள் துளிர்விடுவதும் தடைபடும்.
  • இலைகள், காம்புகள்,  தண்டுகள் தடித்து, சுருக்கத்துடன், சுருண்டு, சோகையுடன் காட்சியளிக்கும்.
  • சதைப்பகுதிகள் காய்ந்து, அடிபட்டுக் காணப்படும்.
  • குறைந்த அளவில் பூ பூத்தல் மற்றும் காய் காய்த்தல்
13.பயிர்களில் சர்க்கரை பரிமாற்றத்திற்கு எந்த சத்து மிக அவசியமாகிறது?

போரான்

14.கொய்யா மற்றும் எலுமிச்சையில் சொரசொரப்பான தோல் பகுதி எந்த சத்தக் குறைபாட்டினால் ஏற்படுகிறது?  

போரான்

15.திராட்சையில் போரான் சத்துக் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?

‘கோழிக் குஞ்சு’ அளவிலான பழங்கள் தோன்றும்.

16.வாழை மற்றும் மாவில் துத்தநாக குறைபாட்டை எப்படி கட்டுப்படுத்தலாம்?

வாழை : துத்தநாக சல்பேட் 0.5% (5 கிராம் அளவை 1 லிட்டர் நீரில் கரைத்தல்) தழைத் தெளிப்பாகத் தெளித்தல் அல்லது ஒரு பயிருக்கு 30 கிராம் துத்தநாக சல்பேட்டை மண்ணில் அளிக்க வேண்டும்.

17.தென்னையின் குரும்பை உதிருதல் எந்த சத்துக் குறைபாட்டால் ஏற்படுகிறது?

போரான்

18.காலிபிளவரில் ‘சாட்டை வால்’ போன்று தோன்றுவது எந்த சத்து குறைபாட்டினால்?

மாலிப்புனம் சத்துக் குறைபாட்டினால்.

19.எலுமிச்சை இலைகள் கொத்தாக தோன்றுவதை எப்படிக் கட்டுப்படுத்தலாம்?

தாமிர சல்பேட் 5-10 கிராம் என்ற அளவில் 10 லிட்டர் நீரில் கரைத்து தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

20.வெங்காயத்தில் துத்தநாக குறைபாட்டை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம்?

துத்தநாக சல்பேட் 0.01% உடன் (10 லிட்டர் நீரில் 1 கிராம் துத்தநாக சல்பேட்டைக் கரைத்தல்) விதை நேர்த்தி செய்தல் அல்லது 0.1% துத்தநாக சல்பேட்டை (1 லிட்டர் நீரில் 1 கிராம் துத்தநாக சல்போட்டைக் கரைத்தல்) தழைத் தெளிப்பாக தெளித்தல்.

21.முட்டைக்கோஸ், காலிபிளவர், தக்காளி மற்றும் மிளகாயில் போரான் குறைபாட்டை எவ்வாறு களையலாம்?

நாற்றங்கால் : 40 கிராம் போராக்ஸ் மண்ணுடன் கலந்து அளிக்க வேண்டு்ம்.
நடவு செயல் : ஒரு  ஹெக்டருக்கு 0.6 கிலோ முதல் 1.2 கிலோ என்ற அளவில் போராக்ஸை அளிக்க வேண்டும்.

22.பயிர்களில் ‘குட்டை இலை’ எந்தக் குறைபாட்டினால் ஏற்படுகிறது?

துத்தநாக குறைபாடு

23.மாவில் ஏற்படும் குறைபாடுகள் என்னென்ன?
  • மென்மையான சதைப் பகுதி
  • மா உருக்குலைவு
  • இரட்டைக் குலை தோன்றுதல்
  • பழங்கள் உதிர்தல்
24.மாவில் மென்மையான சதைப்பகுதி ஏன் தோன்றுகிறது?

அதிக வெப்பநிலை மற்றும் அறுவடைக்குப் பின் வெயிலில் படுவதாலும்,  முதிர்ச்சியடையச் செய்யும் நொதிகளின் செயலால் மென்மையான சதைப்பகுதி தோன்றுகிறது.

 

 
Fodder Cholam