Agriculture
சாதகமற்ற சூழ்நிலை :: வெள்ளம்

வெள்ளம் வரும் காலங்களில் விவசாயிகள் கலனிக்க வேண்டியவைகள்

1. காலங்கள்: பருவ மழைக் காலங்களில் (வடகிழக்குப் பருவ மழை மற்றும் தென் மேற்குப்பருவ மழை) அதிகபட்ச மழை பெய்யும்போது மண்ணின் தன்மைக் கேற்ப பயிர் வளர்ச்சிக்கு நன்மையோ, தீமையோ ஏற்படும். மண்ணின் நீர் கொள்ளும் திறன் அதிகமாக இருக்கும் இடங்களில் அதிக மழை பயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. மண்ணின் நீர் கொள்ளும் தன்மை குறைவாக இருக்கும் பகுதிகளில் அதிக மழை வெள்ளமாக மாறி பயிருக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

Flood'
  • பயிரின் வேர்ப்பகுதியில் அதிகமான நீர் தேங்கும் போது, வேர் பகுதியில் காற்றில்லா நிலையை ஏற்படுத்தி சுவாசத்தைத் தடுத்து அழுகலை ஏற்படுத்தி பயிர் வளர்ச்சியை பாதிக்கும்
  • வேரில் நீர்தேங்குதலை தாங்காத பயிர்களான தக்காளி, சோயாபீன்ஸ், சூரிய காந்தி போன்றவற்றில் பாதிப்பு அதிகமாக இருக்கும்
  • நீர்தேங்குமலை தாங்கக்கூடிய பயிர்களான நெல் போன்றவற்றில் கூட வெள்ளம் வரும் போது பாதிப்பு உண்டாகும்
  • பயிர் விளைகளான ஒளிச்சேர்க்கையை தடுத்து பயிரின் வளர்ச்சியையும் உற்பத்தியையும் பாதிக்கும்
flood

நீர் தேங்குதலைக் குறைப்பதற்கான வழிகள்:

  • சரியான வடிகாலுக்கு வகை செய்தல்
  • வளர்ச்சி (தாவரங்களின்) நிறுத்தியை தெளிப்பதன் மூலம்
  • 2 % டி. ஏ. பி + 1 % பொட்டாசியம் குளோரைடை (KCL) இலையின் மேற்பகுதியில் தெளிப்பதன் மூலம்
  • குருத்து நீக்குதல் முறையின் மூலம் தாவரங்களின் மேல் நோக்கிய வளர்ச்சியைத் தடுத்து சுற்று வளர்ச்சியை அதிகரிக்கச் செய்தல் மூலம்
  • 40 பிபிஎம் என். எ. எ தெளித்தல்
  • 0.5 பிபிஎம் தெளித்தல் மூலம் ஒளிச்சேர்க்கை அதிகரிக்கச் செய்தல்
  • 100 பிபஎம் சாலிசிலிக் அமிலத்தை இலையின் மேல் தெளிப்பதன் மூலம் தண்டின் நீர் உறிஞ்சும் தன்மையை மற்றும் சேகரிக்கும் தன்மையை அதிகரிக்கச் செய்தல்
  • 0.3 % போரிக் அமிலம் + 0.5% ஜிங்க் சல்பேட் + 0.5% ஃபெர்ரஸ் சல்பேட் + 1.0% யூரியா ஆகியவற்றை இலையின் மேற்பகுதியில் தெளிப்பதன் மூலம் பெரிய இழப்பினைத் தடுக்கலாம்

சார்புடைய இணையத் தளங்கள்:

http://www.plantstress.com

 
Fodder Cholam