Agriculture
பசுந்தாள் எருயிடுதல்

பசுந்தழை உரபயிர் சாகுபடி

leaf manures

கிளைரிசிடியா

  • இந்தியாவில் 1950 ஆம் ஆண்டுகளில் கிளைரிசிடியா செடி அறிமுகப்படுத்தப்பட்டு பரவலாக பயிரிடப்பட்டது
  • இந்த செடி சாதகமான மண் வளம் மற்றும் பருவநிலை அமையும் போது மரமாக வளரும் தன்மை கொண்டது
  • விரைவாக வளரும் தன்மை கொண்ட இச்செடி சூழல் தாவரமாக பயன்படுகிறது. மேலும் தேயிலை, காஃபி, கொக்கோ பயிர் தோட்டங்களில் கிளைரிசிடியா பசுந்தழை உரமாக பயன்படுகிறது
  • நன்செய் நிலங்களில் வரப்புகளில் 1 முதல் 2 மீ இடைவெளிகளில் அல்லது 0.5 மீ இடைவெளியில் நெருங்கிய அடர்வில் மூன்று அல்லது நான்கு வரிசைகளில் நடப்படுகின்றன. மேலும் வயல் எல்லை ஓரப்பகுதி சாலையின் இரண்டு பக்கங்களிலும் பசுந்தாள் பயிர்களாக நடப்படுகின்றன
  • பசுந்தாள் பயிராக கிளைரிசிடியா வளர்க்கப்படும் போது குறிப்பிட்ட உயரத்திற்கு கவாத்து அல்லது வெட்டி விடப்படுகிறது
  • கிளைரிசிடியா செடிகளுக்கு ஓராண்டில் 2 முதல் மூன்று கவாத்துகள் செய்யப்படுகின்றன. இவை மீண்டும் துளிர்த்து 2.3 மீ உயரம் வரை வளரும்
  • கிளைரிசிடியா செடி நிழல் முதன்மை பயிரின் வளர்ச்சியை பாதிப்பது இல்லை
  • தண்டுக்கட்டைகள் அல்லது நாற்றுகள் மூலம் கிளைரிசிடியா பயிர்பெருக்கம் செய்யப்படுகிறது
  • ஒவ்வொரு செடியும் வருடத்திற்கு 5 முதல் 10 கிலோ பசுந்தழைகளை தருகின்றன

green leat manures

புங்கம்

  • பயிறு வகை, ஓரளவு உயரம் வரை வளரக்கூடிய பசுமைமாறா மரம் ஆகும்
  • இவ்வகை மரம், சதுப்பு நிலப்பகுதிகள் அல்லது ஆற்று ஓரப்பகுதிகள், நீர்தேக்கங்களின் ஓரப்பகுதிகள் வெற்று நிலங்கள் மற்றும் சாலைகளின் ஓரப்பகுதிகளில் வளரும் தன்மை கொண்டுள்ளன
  • இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆன நாற்றுகள் (இம்மரங்களின் பயிர்பெருக்கத்திற்கு) நடப்படுகின்றன. இதன்மூலம் மரம் 4 முதல் 5 மீ உயரம் வரை வளரும்
  • ஒரு வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை சிறுகிளைகள் வெட்டப்படுகின்றன
  • ஒரு மரம் ஏற்ககுறைய 100 முதல் 150 கிலோ பசுந்தழை உரங்களை தருகின்றன.
  • பயறு வகைகள்
  • நடுத்தர உயரமுடைய பசுந்தாள் மரம்.இவை பெரும்பாலும் காடுகளில் , ஆற்று ஓரங்களில் பயன்பாடாநிலம் மற்றும் சாலையோரங்களில் வளரக்கூடியவையாகும்
  • ஒரு மரமானது 100 முதல் 150 கிலோ பசுந்தாள் இலைகளை தரக்கூடியவையாகும்

manures

கொடிப்பூவரசு

  • மிகவிரைவில் வளரக்கூடிய, அதிக கிளைகளுடைய மற்றும் அதிக வறட்சியை தாங்ககூடியவையாகும்.
  • குறைந்த காலநிலையில் அதிக இலைகளை தரக்கூடியவை
  • ஒரு வருடத்தில் 2 முதல் 3 கிளைகளை வெட்டலாம்
  • ஒவ்வொர கிளையானது 5 முதல் 7 கிலோ இலைகளை தரக்கூடியவையாகும்

manures

வேம்பு

  • வேம்பு அனைத்து மண்ணிற்கு ஏற்றது
  • இவை நிலத்தின் ஒரங்களில, ஆற்றங்கரையில், சாலையோரங்களில், பயன்படா நிலங்களில:. வீடுத்தோட்டங்களில், தோட்டங்களில் வளரக்கூடியவையாகும்.
  • ஒவ்வொரு கிளையானது 150 முதல் 200 கிலோ இலைகளை தரக்கூடியவையாகும்

 

manures

Updated on : 07.12.2013

 
Fodder Cholam