சொட்டு நீர் பாசனம்
அ. செயல்கள்:
பயிர்களுக்கு நீரை அழுத்தத்துடன் வலைப்பின்னல் குழாய் வழியாக வழங்குகின்ற முறையாகும்.
ஆ. உபகரணங்கள்:
முக்கிய பகுதியில் மேல் நிலைத் தொட்டி இருக்கும்.
முக்கிய குழாய் பகுதியில் 50 மி.மீ, 75 மி.மீ, எச். டி. பி. இ அல்லது பி.வி.சி குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
துணை குழாய் பகுதியில் 45 மி.மீ, 50 மி.மீ எச்.டி.பி.இ. குழாய்கள் பயன்படுத்தப் படுகின்றன.
பக்கவாட்டில், 12 மி.மீ, 16 மி.மீ, எல்.எல்.டி.பி.இ பயன்படுத்தப்படுகின்றன.
சொட்டு குழாய்கள் – 2 எல்.பி.எச், 4 எல்.பி.எச், 8 எல்.பி.எச் அழுத்தமுடைய வகைகள் மிகவும் ஏற்றது.
வடிக்கும் பகுதி: பெரிய மண் துகள்களை வடிக்க மணல் வடிப்பான் பயன்படுத்தப்படுகிறது. சல்லடை வடிப்பான் (120 மைக்ரான் அளவு) நுண்ணிய துகள்களை வடிக்க பயன்படுகிறது.
உர பகுதி: கரைத்த உரங்கள் அல்லது நீர்ம உரங்களை அளிப்பதற்கு உரத் தொட்டி பயன்படுகிறது. அழுத்தமானி 0.5 முதல் 2.5 கே.எஸ்.சி மற்றும் குழாயின் அளவைப் பொறுத்து கதவுத் தடுப்பு பயன்படுகிறது. இதனால் நீரின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கலனிக்காகவும் முடிகிறது.
இ.கவனிக்க வேண்டியவை
- சாதாரண முறையைக் காட்டிலும் 50-65 சதம் வரை நீர் சேமிக்கப்படுகிறது
- பயிர் எளிதில் வளர்ச்சி அடைகிறது
- அதிக உற்பத்தி மற்றும் உயர்ந்த தரம்
- நிலத்தை ஒரளவு சமப்படுத்தினாலலே போதுமானது நடை முறை நீர்ப்பாசனம் போன்று சரிசமமாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை
- சாதாரண, தண்ணீரையே பயன்படுத்தலாம். நல்ல தண்ணீரை மட்டுமே உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை
ஈ.விலை
நீர்த் தேவை (லி எக்டர்), உற்பத்தி அதிகரிப்பு, நீர் சேமிப்பு (சதவீதம்) பக்க இடைவெளி மற்றும் செலவீனங்களை ஆகியவை கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
அட்டவணை : 1
பயிர்கள் |
நீர்த் தேவை (லிட்) |
சதவீதம் |
பக்கக்குழாய் (மீ) |
செலவு ரூ/எக்டர் |
சொட்டுநீர் |
பழைய முறை |
உற்பத்தி அதிகரிப்பு |
நீர் சேமிப்பு |
தென்னை |
75-100 |
200-300 |
30 |
45 |
7.50 |
30,000 |
கொய்யா |
25-45 |
90-100 |
23 |
48 |
3.0 |
50,000 |
மா |
30-50 |
90-150 |
23 |
40 |
10.0 |
28,000 |
சப்போட்டா |
20-30 |
70-100 |
40 |
50 |
10.0 |
28,000 |
மாதுளை |
20-40 |
60-130 |
48 |
45 |
5.0 |
34,000 |
வாழை |
8-12 |
30-40 |
52 |
45 |
2.0 |
56,000 |
எலுமிச்சை |
10-20 |
25-65 |
40 |
60 |
3.0 |
50,000 |
பப்பாளி |
5-8 |
18-26 |
75 |
68 |
2.0 |
56,000 |
கத்திரி |
1-2 |
4-8 |
14 |
53 |
1.20 |
75,000 |
வெண்டை |
1-2 |
4-6 |
16 |
40 |
1.20 |
75,000 |
தக்காளி |
1-2 |
4-6 |
80 |
39 |
1.20 |
75,000 |
மிளகாய் |
1-2 |
3-6 |
44 |
62 |
1.20 |
75,000 |
பூசணி வகைகள் |
1-2 |
3-6 |
15 |
54 |
1.20 |
75,000 |
|