நீர் நிர்வாகம்
|
|
நிலக்கடலை நீர்நிர்வாகம் கால நிலையைப் பொறுத்து, வளர்ச்சி நிலையின் போது 0.4 ஆவியாதல் வீதமும், பெருக்க நிலையின் போது 0.6 ஆவியாதல் வீதமும் உள்ளவாறு நிர்ணயிக்கப்படுகிறது. கீழ்க்கண்ட பயிரின் வளர்ச்சி நிலைக்கேற்ப நீர்ப்பாசனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். முளைப்பு, பூத்தல, காய் உருவாதல் ஆகிய பருவங்களில் நீர்ப்பாசனம் இன்றியமையாததாகிறது. ஏனெனில் இந்நிலையில் மண்ணின் ஈரப்பததம் அவசியமானது. நிலக்கடலைக்கு கீழ்க்கண்டவாறு நீர்ப்பாசனம் அளிக்கவேண்டும். விதைத்தல் அல்லது விதைப்பதற்கு முன் மண் கடின அடுக்கை உடைக்க விதைத்த 4 அல்லது 5 நாட்களில் நீர்ப்பாய்ச்சவேண்டும். விதைத்த 20 நாட்களுக்குப் பிறகு பூப்பிற்கு பின் 2 முறை நீர்ப்பாய்ச்சவேண்டும். முளைப்புப் பருவத்தின்போது 1 அல்லது 2 முறை நீர்ப்பாய்ச்சவேண்டும். பூப்பின் போதும், பாய் உருவாதலின் போதும் 0.5 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு தெளிப்பது நீர்த்தட்டுப்பாட்டைக் குறைக்கும். தெளிப்பு நீர்ப்பாசனம் 30 சதவிகிதம் வரை நீரைச் சேமிக்க உதவுகிறது. இலேசான மண் நயமுடைய நிலங்களுக்கு பாத்தியோரப் பாசனம் பரிந்துரை செய்யப்படுகிறது. |
|
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013 | |