Agriculture
நீர் நிர்வாகம்

சோயா மொச்சை

soya

நீர் நிர்வாகம்:

விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும் விதைத்த மூன்று நாட்கள் கழித்து உயிர் தண்ணீர் கட்ட வேண்டும். பின்னர் மண் மறறும் காலநிலைகளுக்குத் தகுந்தவாறு குளிர்காலத்தில் 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் கோடை காலத்தில் 7 முதல் 70 நாட்கள் இடைவெளியிலும் நீர் பாய்ச்ச வேண்டும். சோயா மொச்சை அதிகமாக ஈரம் இருக்குமாயின் பாதிக்கப்படும். வயலில் நீர்தேங்கி இருப்பதை தவிர்க்கவேண்டும். பூக்கும் பருவத்திலிருந்து முதிர்ச்சிப் பருவம் வரை நீர் பற்றாக்குறை பாதிப்பதில்லை. வறட்சியின் தாக்கத்தை சரிக்கட்ட கயோலின் 3 சதவிகிதக் கரைசல் அல்லது பாரபின் 1 சதவிகித கரைசலை இலையின் மீது தெளிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் சோயாமொச்சசை மற்றும் ஆமணக்கு விதைப்பில் 0.60 பாசன கூட்டு விகிதத்தில் பாசனம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. அதிகபட்ச பயன் கிடைப்பதற்கு 10 முதல் 12 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்வது சிறந்ததாகும்.

இறவைப் பயிருக்கு எக்டருக்கு பெண்மித்திலின் 3.3 லிட்டர் அல்லது ஆலகுளோர் 4.0 லிட்டர் விதைத்தவுடன் தெளித்து உடன் நீர் பாய்ச்ச வேண்டும். இதன் மூலம் விதைத்தலில் இருந்து 30 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்தலாம். விதைத்த 30 நாட்களுக்குப் பின்னர் களைகளை ஒரு முறை எடுத்து நீர் பாய்ச்ச வேண்டும். களைக்கொல்லி தெளிக்கவில்லையெனில் விதைத்த 20 மற்றும் 35 நாட்களுக்குப் பின்னர் கைக்களை எடுக்க வேண்டும்.

 
Fodder Cholam