| தெளிப்பு  நீர்ப் பாசனம்
 
 
 
 செயல்கள் : நிலப்பரப்பிற்கு    மேலே நீரை மழைபெய்வது போல் பம்ப் உதவியுடன் தெளிக்க செய்கிறது தனிக்குறிப்பீடு 
         குறைவான அழுத்தம் (1.0 கிலோ    / செ.மீ2 ) ஒரு தெளிப்பானை செயல்படுத்த தேவைப்படுகிறது. ஒரு தெளிப்பான்    மூலம் 12 மீ சுற்று வட்டாரம் வரை தெளிக்கலாம்  4 – 5 கிலோ / செ.மீ2 அழுத்தம்,    4 தெளிப்பானை ஒரே நேரத்தில் பயன்படுத்த தேவைப்படுகிறது  காற்றின் வேகம் 15 கிலோ மீட்டர்    / மணி குறைவாக இருக்கும்போது செயல்படுத்துவது எளிதாகிறது. இதனால் நீர் இழப்பைத்    தடுக்கலாம்  அதிகாலை மற்றும் மாலை வேளைகளில்    தெளிப்பானைப் பயன்படுத்துவதால் ஆவியாகுதல் இழப்பைத் தடுக்கலாம்  விலை : தோராயமாக    ரூ. 3000 – 4000 / ஹெக்டேர் சிறப்பியல்புகள் 
         மலைப்பகுதிகளில் மேடு பள்ளம்    இல்லாத பகுதிகளுக்கு ஏற்றது  மலைத் தோட்டப் பயிர்களான தேயிலை,    காபி மற்றும் இதரப் பயிர்களுக்கு ஏற்றது  நிலக்கடலை, பருத்தி, முன்பே பூ    உதிராத பயிர்களுக்கு ஏற்றது  பாரம்பரிய பாசனத்தை விட 30 –    40 % செலவு குறைகிறது  
 தெளிப்பு நீர்ப் பாசனத்தில் பயிர்களுக்கான  நீர் தேவை 
        
          | பயிர் | நீர் உபயோகம் (மி.மீ) | நீர் சேமிப்பு | நீர் பயன்பாடு கி.எக்.மி.மீ |  
          | நிலக்கடலை | 390 | 24.7 | 5.13 |  
          | பருத்தி | 308 | 505 | 9.8 |  
          | சோயா | 380 | 50.5 | 4.77 |  
          | உளுந்து | 140 | 50.0 | 8.82 |  5.  பொதுவான பிரச்சனைகள் மற்றும் வழிமுறைகள்
 
 
          தெளிப்பு நீர்ப்பசானம் அமைக்க ஆரம்ப செலவுகள் அதிகம்,  எனினும் இந்த அமைப்பு குறைந்தது 10 ஆண்டுகள் வரை நன்கு பயன்படக் கூடியவை
            
          நம்  நாட்டில் பெரும்பான்மையான  விவசாயிகள் சிறு மற்றும் குறுநிலங்களையே  கொண்டுள்ளனர். இதற்கு பல விவசாயிகள் ஒரு குழுவாக இணைந்து அமைத்தால் செலவை  குறைக்கலாம்
         
          தெளிப்பான் ஒன்று 12 மீ வரை நீர் தெளிக்கக் கூடியது.  இதற்கு 1 கி.கி /ஒரு சதுர செ.மீ. அழுத்தம் தேவைப்படுகிறது.
            
          காற்று  அதிகமாக வீசும்போது தெளிப்பானின் திசை மற்றும் வேகம் மாற வாய்ப்புள்ளது.  காற்று வீசும் சமயங்களில் அடிக்கடி மேற்பார்வையிடும்போது இதனைச் சரி  செய்து கொள்ளலாம்.
           
          விவசாயிகளுக்கு தெளிப்பான மற்றும் அதன் உபயோக முறைகளைப்  பற்றி சரியான பயிற்சி அளிக்க வேண்டும் |