Agriculture
நீர் மேலாண்மை

கரும்பு

பாசன மேலாண்மை

பயிரின் ஒவ்வொரு வளர்ச்சி நிலைக்கும் ஏற்றவாறு பாசனம் செய்தல் சிறந்தது.

முளைப்புப்பருவம் (0-35 நாட்கள்)

  • 2 – 3 செ.மீ ஆழத்திற்கு நீர் நிற்குமாறு குறைந்த கால இடைவெளியில் மேலோட்டமான நீர்ப்பாய்ச்சல் செய்வது நன்மை பயக்கும். அதுவும் மணற்பாங்கான நிலப்பரப்பில் பயிர் முளைப்புத்திறன் அதிகரிக்க அடிக்கடி பாசனம் செய்தல் நல்லது
  • கரும்பின் ஆரம்பக்கால வளர்ச்சிக்குத் தெளிப்பு நீர்ப்பாசனம் உகந்ததாகும்பின்பு வளர்ச்சி நிலைகளிலும், தூர்பிடிக்கும் சமயங்களிலும் 0.75, 0.75 மற்றும் 0.80 1W / CPE விகித அடிப்படையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது

ஒவ்வொரு நிலைக்கும் செய்ய வேண்டிய நீர்ப்பாய்ச்சல் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி நிலைகள்   தண்ணீர் பாய்ச்சும் இடைவெளிகள்
மணல் களிமண்
தூர்விடும் பருவம் (36 – 100 நாட்கள்) 8 10
வேகமாக வளரும் பருவம் (101 – 270 நாட்கள்) 8 10
முதிர்ச்சி நிலை (271 – லிருந்து அறுவடை வரை) 10 14

சொட்டுநீர்ப்பாசனம்

  • நோய் தாக்காத 6 முதல் 7 மாத வயதுடைய விதை நாற்றங்காலிலிருந்து விதைக்கரணை எடுத்து, இருபார் அமைப்புடைய வயலில் 30 x 30 x 30 / 150 செ.மீ இடைவெளியில் நடவேண்டும்
  • நான்கு வரிசை நடவு முறையில் ஒரு மீட்டருக்கு ஒரு வரிசையில் 9 விதைக்கரணைகள் என்றவாறு இருபுறமும் நட வேண்டும்
  • 12 மி.மீ அளவுடைய சொட்டு நீர்ப்பாசன பக்கக் குழாய்களை பாரின் மீது வைக்க வேண்டும். ஒவ்வொரு பாத்தியும் 240 செ.மீ இடைவெளியும் மணிக்கு 8 லிட்டர் நீர் சொட்டும், அடைப்பற்ற சொட்டு நீர்க்குழாயையும் கொண்டிருக்க வேண்டும். பக்க நீள அளவு 30 முதல் 40 மீட்டருக்கு மேல் இருத்தல் கூடாது
  • விதைக் கரணை ஊன்றும்போது எக்டருக்கு 62.5 கி.கி பாஸ்பரஸை அடியுரமாக இடுதல் வேண்டும்
  • நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் உரங்கள் முறையே 275 : 112.5 கி.கி / ஹெ என்ற அளவிலும், யூரியா மற்றும் மியூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை விதைத்த 15 லிருந்து 150 – 180 நாட்கள் வரை 10 முதல் 12 தடவைகளாகப் பிரித்துக் கொடுக்கலாம்
  • குறைந்த ஊட்டச்சத்துக் கொண்ட மண்ணிற்கு 50 சதம் அதிக நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் தேவைப்படுகிறது
  • பயிரின் சுவாசித்தல் நீராவியாக்கலைப் பொறுத்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சலாம்

Sugarcane

ஆதாரம்: http://www.tnau.ac.in/tech/swc/fertigation.pdf

உரப்பாசனம்

  • உரப்பாசனம் என்பது தேவையான அளவு உரத்தை, நீருடன் கலந்து அளிப்பதாகும்
  • உரப்பாசனம் அளிக்க உரத்தொட்டி, வெஞ்சுரி (முறை) அமைப்பு, பிரதானக் குழாய், கிளைக்குழாய்கள், மேற்பரப்பு பக்கவாட்டுக் கருங்குழாய்கள், வடிகட்டி போன்ற உபகரணங்கள் அவசியம்.
  • விதைக்கரணை ஊன்றிய 15 நாட்களுக்குப் பின்பு நைட்ரஜன் மற்றும் பொட்டாஷ் உரங்களை 275 கி.கி / எக்டர் மற்றும் 112.5 கி.கி என்ற அளவில் 15 இடைவெளியில் 14 முறை அளித்தல் வேண்டும்
  • ஒரு எக்டருக்கு ஒவ்வொரு முறையும் யூரியா 25 கி.கிராமும், பொட்டாஷ் 8 கி.கிராமும் அளித்தல் அவசியம்
  • நைட்ரஜன், பொட்டாசியம் சத்துகளுக்கு யூரியா மற்றும் வெள்ளை பொட்டாஷை பயன்படுத்தலாம்
  • விதைத்த 210 நாட்களுக்குப் பிறகும் கரையும் உரப்பாசனம் அளிக்கலாம்

உரப்பாசனத்தின் பயன்கள்

  • முறையான நீர் மற்றும் உரச்சத்துக்களின் அளிப்பு வளர்ச்சியை அதிகரித்து உற்பத்தியை ஊக்குவிக்கிறது
  • பயிருக்கேற்ற அளவு குறிப்பிட்ட காலத்தில் உரங்களை அளிக்க முடியும்
  • கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை பயிர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்
  • அதிக உரமிட்டு, அதனால் பயிர்களின் வேர்பாதிக்கப்படுவது இம்முறையில் இல்லை

பாத்திகளை அகலப்படுத்தல்

கரணைகளை விதைக்கும்போது 30 செ.மீ உள்ள பாத்தி  அளவுகளை 45ம் நாள் மண் அணைக்கும்போது 45 செ.மீ ஆக அகலப்படுத்த வேண்டும். இதை 90ம் நாள் மேலும் ஆழப்படுத்துவதால் 35 சதம் நீர் சேமிக்கப்படுகிறது.

SugarCane Sugarcane

குழி நடவு முறையில் சொட்டு நீர்ப்பாசனம்:

  • குழி இடைவெளி – 1.5 x 1.5 மீ
  • குழிகள் எண்ணிக்கை / எக்டர் – 4,444 குழிகள்
  • குழி அகலம் – 0.9மீ
  • குழி ஆழம் – 0.38 மீ
  • ஒரு குழியில் இடும் முளையிட்ட விதைக் கரணைகள் – 32 (ஒரு முளை கொண்ட கரணைகள்)
  • 15 செ.மீ ஆழத்திற்கு நல்ல வளமான மண் மற்றும் மட்கிய உரம் இட்டு நிரப்ப வேண்டும். நோய் தாக்காத விதைக் கரணைகளை ஓரத்திலிருந்து முறையே 10 செ.மீ உள்ளே தள்ளி இருக்குமாறு ஊன்ற வேண்டும். ஒவ்வொரு கரணைக்கும் இடையே சரியான இடைவெளி விட்டு ஊன்றி மண்ணினால் மூடவேண்டும். ஊன்றிய 50 லிருந்து 60 நாட்களுக்குள் ஓரத்திலுள்ள மண்ணை இலேசாக அணைத்து விட வேண்டும். பின்பு 90 லிருந்து 100ம் நாள் 2.5 செ.மீ மண் வைத்து நன்கு அணைத்து விடுதல் வேண்டும்
  • உர அளவு – 275 : 62.5 : 112.5 கி.கி முறையே யூரியா : பாஸ்பரஸ் : பொட்டாஷ் / எக்டர்
  • முழு பாஸ்பரஸையும் விதைக்கும் போதே அடியுரமாக இட்டுவிடலாம்
  • நைட்ரஜன் & பொட்டாசியம் சத்துக்கள் உரப்பாசனம் மூலம் அளிக்கப்படுகிறது
  • சொட்டுநீர் அமைப்பு: பிரதான குழாயில் பக்கவாட்டுக்குழாய் இடைவெளி 3 – 0 மீ (ஒன்றுவிட்ட ஒன்று வரிசையில்)
  • பக்கக் குழாயிலிருந்து 1 மீ நீளம், 8 மி.மீ அளவு கொண்ட நுண் குழாய்கள் 8 LPH சொட்டு நீர் அளிக்கும் குழாய்கள் ஒவ்வொரு குழிக்கும் அமைத்தல் வேண்டும்
  • நீர்பாய்ச்சுதல் – நாள்தோறும் அல்லது ஒன்றுவிட்ட நாட்களில்

பயன்கள்

  • அதிக கரும்பு உற்பத்தி
  • அதிக வரிசைகளும் அமைக்க முடியும்
  • சிக்கலான (எல்லா வகை) மண்ணிற்கும் ஏற்றது
  • அதிக நீர்சிக்கனம்
  • கையாள்வது எளிது
  • அமைத்த பின்பு ஆள் செலவு குறைவு
  • அதிக இலாபம்
  • மூன்றில் ஒரு பங்கு பாசன நீர் போதுமானது
  • பாசன நீர் ஒரு துளியும் வீணாவதில்லை
  • பாசனம் செய்ய தனியாக வேலையாட்கள் தேவையில்லை
  • மேற்பரப்பு வறண்டிருப்பதால் களைகள் மிகக் குறைவு
  • வாய்க்கால் வரப்பு சீரமைக்கும் பணி அறவே இல்லை
  • நன்றாக வடிகட்டப்படுவதால் களை விதைகள் பாசனம் மூலம் பரவாது
  • நாள் ஒன்றுக்கு எக்டருக்கு 1 மணி நேரம் மின்சார / எரிபொருள் செலவு மட்டுமே
  • கோடையிலும் பயிர் செய்ய இயலும்
  • பூச்சி பூஞ்சானத் தாக்குதல் குறைவு

செலவீனங்கள்

குழி நடவு 1.5 மீ x 1.5 மீ குழி அளவுகளில் செய்வதே எக்டருக்கு ரூ. 1,19,649 இலாபம் ஈட்டித்தருகிறது மேலும் ரூ.1,55,982 ம் அதாவது 2.26 மற்றும் 3.31 வரவு செலவு விகிதம் மறுதாம்புப் பயிரிலிருந்து கிடைக்கிறது

Sugarcane

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை 2006.

 
Fodder Cholam