Agriculture
நீர் நிர்வாகம்

சூரியகாந்தி

பாத்தி அமைத்தல்

  1. 6 மீ நீளமுடைய பார் அமைக்க வேண்டும்.
  2. பார் பிடிக்கும் இயந்திரம் மூலம் பிடித்தல் நலம்
  3. நில அமைப்பைப் பொருத்து, பார்களின் வழியே தண்ணீர் பாய வாய்க்கால் அமைக்க வேண்டும்.
  4. பல்வேறு வளர்ச்சி நிலைகளைப் பொருத்து நீர் பாய்ச்சல் செய்யலாம்.

கீழ்கண்ட வளர்ச்சி நிலைகளைப் பொருத்து நீர் பாய்ச்சலாம்.

  1. விதைக்கும் முன்னர் நீர் பாய்ச்சுதல்
  2. உயிர்த் தண்ணீர்
  3. விதைத்த 20 ஆம் நாள்
  4. மொட்டு அரும்பும் பருவம்
  5. பூக்கும் பருவம் (2 தண்ணீர் பாய்ச்சுதல் அவசியம்)
  6. விதை உருவாதல் (2 தண்ணீர்)

நீர் மேலாண்மை

விதைத்த உடன் ஒருமுறையும், 3 ம் நாள் உயிர்த் தண்ணீரும் அவசியம். 7லிருந்து 8 நாட்கள் இடைவெளியிலும் பூ பூக்கும் முன்னர், பூத்தலின் போது மற்றும் பூத்தபின் 2 வாரத்தில் நீர் பாய்ச்சுதல் வேண்டும். அதோடு விதை உருவாதல், முதிர்தல் போன்ற பருவங்களில் நீர்த் தேவையை சரியாகப் பூர்த்தி செய்தல் வேண்டும்.

 
Fodder Cholam