Agriculture
இயற்கை சீற்ற மேலாண்மை

பூகம்பங்கள் / நிலநடுக்கங்கள்

பூகம்பம் என்பது மிகவும் மோசமான ஒரு இயற்கை சீற்றம் ஆகும். இது எந்த நேரத்திலும் பகல் அல்லது இரவு என்று எந்த பொழுதிலும் ஏற்படும். பூகம்பம் ஏற்படும் முன் மிக சிறிய எச்சரிக்கை அடையாளச் செயல்கள் ஏற்படும். ஆனால் பூகம்பத்தின் பின் விளைவு மிகவும் கடுமையாக இருக்கும். ஒரு நொடியில், கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு அடிப்படை வசதிகள் எல்லாம் பூகம்பத்தால் நொறுங்கி அழிந்துவிடுகின்றன. இதனால் உயிரினங்கள் எல்லாம் பாதிக்கப்படுகின்றன. இந்த பூகம்பங்களினால் உயிரின வாழ்வு மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அரசு, பொருளாதாரம், மற்றும் நாட்டின் சமூக கட்டமைப்பு என அனைத்தும் ஸ்தமித்து விடுகின்றன.

பூகம்பங்கள்

புவியின் பாறை இடுக்குகளில் தங்கி இருக்கும் அதிக அடர்வு கொண்ட ஆற்றல் புவியின் மேற்பரப்பில் திடீர் என்று வெளிப்படும் போது பூகம்பங்கள் ஏற்படுகின்றன.

india

செய்ஸ்மாலஜி: (இந்த வார்ததை ‘செய்ஸ்மாஸ்’ என்ற கிரீக் வார்த்தையில் இருந்து உருவானது). இது பூகம்பங்கள் மற்றும் அது சம்பந்தமான படிப்பு ஆகும்.
செய்ஸ்மோகிராப் / செய்ஸ்மோகிராம்: செய்ஸ்மோ கிராப் என்பது புவியின் அதிர்வுகளை அளவிடும் ஒரு கருவி. செய்ஸ்மோகிராம் என்பது தொடர்ந்து செய்ஸ்மோகிராப் மூலம் புவி அதிர்வுகள் குறிப்பிட்ட ஒரு தொகுப்பு ஆகும்.

இந்திய செய்ஸ்மிக் மண்டல வரைபடம்:

செய்ஸ்மிக் / பூகம்ப மண்டல வரைபடம், எந்தெந்த பகுதிகளில் அதிக பூகம்பம் வரும் வாய்ப்பு பெற்றுள்ளன என்பதை வரைபடமாக விளக்குகிறது. இதன் அடிப்படையில் இந்திய 5 வகை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் V வது மண்டலம் மிகவும் அதிக பூகம்ப அபாயம் கொண்டதாக உள்ளது. இவை எல்லாம் புவியின் பல்வேறு கட்டமைப்புகளை பொறுத்து புவியியல் வல்லுனர்கள் பிரித்துள்ளனர். ஆனால் மனிதனால் உருவாக்கப்படட பூகம்பர வரலாற்று செய்திகள் மற்றும் பிற தொகுப்புகளின் மூலம் மட்டும் இந்த பூகம்ப எச்சரிக்கைகளை கணக்கிட முடியாது. ஏனென்றால் மண்டலம் 1ம் பகுதியில் வரும் வேட்டூரில் ஏற்பட்ட பூகம்பம் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

பூகம்பங்களின் காரணங்கள்:

புவியின் உட்பகுதி வெவ்வேறு அளவில் கடின பாறைகளை கொண்டுள்ளன. கடலிற்கு அடியில் 10 கிலோமீட்டர் அகல பாறைகளும், புவிநிலப்பரப்பிற்கு அடியில் 65 கிலோ மீட்டர் அகல பாறைகளும் கொண்டுள்ளன. புவியின் மேலோடு பகுதி ஒரே பாறையினால் ஆனது அல்ல, தனித்தனி புவி தட்டுகளினால் உருவாக்கப்பட்டது. இந்த தட்டுக்கள் பலநூறுலிருந்து பல்லாயிர கணக்கான கிலோ மீட்டர் நீலம் கொண்டவை ஆகும். புவியின் தோற்ற அமைப்பின் படி அனைத்து புவி தட்டுக்களும் ஒன்றொடொன்று இணைந்து காணப்படுகின்றன. இத்தட்டுகளுக்கு இடையே அதிக அழுத்தம் அதிக வெப்பமான சூழல் காணப்படும். இத்திட்டுகள் ஒன்றொடொன்று இருகும்போது அதிக அழுத்தம் ஏற்படுகிறது.
இந்த அழுத்த நிலை புவிதட்டுக்களின் இயக்கநிலையை பொறுத்து மூன்று வகைப்படும்.

  1. தடைமட்டமாக உரசி ஒன்றொடொன்று இழுத்து வெளிப்படுதல்
  2. ஒன்றொடொன்று தள்ளுதல்
  3. ஒன்றொடொன்று தள்ளுதல்

இந்த எல்லாவகையான புவிமேலடுக்கு தட்டுகளின் இயக்கங்களும் பூகம்பம் / நிலநடுக்கத்தை ஏற்படுத்தும். இந்த வகையான அதிக அழுத்த ஆற்றல் வெளியீடு ‘பால்டஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. இவ்வாறு வெளிப்படும் போது அதிர்வு அலைகள் மேலடுக்கில் ஏற்படுகின்றன. இதுவே நிலநடுக்கத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த நிலநடுக்கம் செய்ஸ்மிக் என்று அழைக்கப்படுகிறது. (கிரேக்கில் ‘செய்ஸ்மோஸ்’ என்றால் அதிர்ச்சி அல்லது நிலநடுக்கம் என்று பொருள்) இவ்வாறு நிலநடுக்கம் / பூகம்பம் ஏற்படுகிறது.

மேக்னிட்டியூடு / பருமஅளவு:

நிலநடுக்கங்கள் அவை ஏற்படும் பரும அளவை கொண்டு கணக்கிடப்படுகின்றன. இவை கணக்கிடப்படும் இடத்தை பொறுத்து மாறுபடும்.

ரிக்டர் ஸ்கேல் / ரிக்டர் அளவுகோல்:

நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோல் கொண்டு அளவிடப்படுகின்றன. இதனை வுட் ஆன்ரசன் வடிவமைத்துள்ளார்.

நிலநடுக்கங்களின் வகைகள்
வகைகள் ரிக்டர் பரும அளவு
மெல்லிய நிலநடுக்கம் 4.9 வரை
மிதமான நிலநடுக்கம் 5.0 முதல் 6.9 வரை
அதிக நிலநடுக்கம் 7.0 முதல் 7.9 வரை
மிக அதிக நிலநடுக்கம் 8.0 மற்றும் அதற்கு மேல்

ஆதாரம்: www.ind.gov.in

இந்தியாவில் நடந்த மிக கடும் நிலநடுக்கங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிர் சேதங்கள்:

நிலநடுக்கம் ஏற்பட்ட ஆண்டு இடம் அளவு வகை உயர்சேதம், மற்றவை
1618 பம்பாய் - - 2000 பேர் பழி
1720 டெல்லி 6.5 - சில உயிர் சேதம்
1737 பெங்கால் - - 30,000 உயிர்கள் பழி
1803 மதுரா 6.5 - நிலநடுக்கம் கல்கத்தா வரை உணரப்பட்டது
1803 குமான் 6.5 - 200-300 மக்கள் பழி
1819 கடச்சு 8.0 XI டீரா, காத்ரா, மோதலா போன்ற முக்கிய நகரங்கள் மண்ணிற்க்குள் புதைந்தன
1828 ‚நகர் 6.0 - 1000 மக்கள் பழி
1833 பீகார் 7.7 X நூற்றுகணக்கான மக்கள் பழி
1848 அடி மலை இராஜஸ்தான் 6.0 - சில மக்கள் பழி
1869 அஸ்ஸாம் 7.5 - 2,50,000 கிலோமீ பரப்பு பாதிக்கப்பட்டது
1885 ‚நகர் 7.0 - கமியரி பகுதி அழிக்கப்பட்டது
1897 சில்லாங் 8.7 XII சில்லாங் பகுதி முழுவதும் ஏற்பட்டது
1905 ஹிமாச்சல்பிரதேசம் 8.0 XI ஆயிரக்கணக்கான மக்கள் பழி
1906 ஹிமாச்சல்பிரதேசம் 7.0 - கடும் சேதம்
1916 நேபாளம் 7.5 - தார்சுலாவின் அனைத்து வீடுகளும் அழிந்தன
1918 அஸ்ஸாம் 7.6 - கடும் சேதம்
1930 தூபிரி, மேகாலயா 7.1 IX தூபிரியல் அதிக சேதம்
1934 பீகார், நேபாளம் 8.3 XI எல்லை புறமக்கள் அதிக அளவு பழி
1935 குய்ட்டா (பாக்கிஸ்தான்) 7.5 IX 25,000 மக்கள் பழி
1941 அந்தமான் 8.1 X அதிக அளவு சேதம்
1947 திபுகார்க் 7.8 - கடும் சேதம்
1950 அஸ்ஸாம் 8.6 XII அதிக அளவு உயிர் மற்றும் பொருட்சேதம்
1952 வடகிழக்கு இந்திய பகுதி 7.5 - அதிக கடும் சேதம்
1956 பூலந்சாகர், உத்திரபிரதேசம் 6.7 VIII பல உயிர் சேதம்
1956 அன்ஜர், குஜராத் 7.0 VIII நூற்றுக்கணக்கான மக்கள் பழி
1958 காப்பக்கோடு உத்திரபிரதேசம் 6.3 VIII பலமக்கள் பழி
1967 கோய்னா 6.1 VIII கொய்னா நகரம் முழுவதும் அழிவு
1969 பத்ராச்சலம் 6.5 I கடும் சேதம்
1986 தரம்ஸ்லா (ஹிமாச்சல்பிரதேசம்) 5.7 VIII அதிக சேதம்
1988 அஸ்ஸாம் 7.2 IX சில மக்கள் பழி
1988 பீகார் - நேபாளம் 6.5 VIII அதிக மக்கள் பழி
1991 உத்தர்காசி 6.6 VIII வாழ்விற்கும் பொருட்களுக்கும் அதிக அளவு சேதம்
1993 லட்ரே 6.4 VIII ஆயிரக்கணக்கான மக்கள் பழி
1997 ஜபால்பூர் 6.0 VIII அதிக அளவு சேதம், 39 பேர் பழி
1999 சமோலி 6.8 VIII அதிக அளவு சேதம்,நூற்றுக்கணக்கான மக்கள் பழி
2001 புஜி 6.9 X அதிக அளவு சேதம், சுமார் 14,000 மக்கள் உயிர் சேதம்.

இந்தியாவின் நிலநடுக்க அபாயங்கள்:

இந்திய வறலாற்றில் அதிக நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் சுமார் 65 சதவீத மொத்த பரப்பு நிலநடுக்க அபாயத்தை கொண்டு காணப்படுகிறது. அதிலும் ஹிமாச்சல் பிரதேசம், அதனை ஈற்றியுள்ள பகுதிகள் கட்ச்சு, மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் ஆகியவை அதிக நிலநடுக்கம் எழுவதற்கான வாய்ப்புள்ள பகுதிகளாக நிலநடுக்க வரைப்படம் கூறுகிறது. நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பை பொறுத்து நாட்டின் அனைத்து நகரப்பகுதிகளும் கீழ்கண்ட பிரிக்கப்பட்டுள்ளன.

  • காஷ்மீர் மற்றும் மேற்கு ஹிமாச்சல் பிரதேசம்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாபை சுற்றி உள்ள மலை பகுதிகள்.
  • ஹிமாச்சல் பகுதி: ஹிமாச்சல் மற்றும் அதனை ஈற்றியுள்ள உ.பி.மலை பகுதிகள் மற்றும் பஞ்சாப் மலை பகுதிகள்
  • வடகிழக்கு இந்திய பகுதி: வடக்கு வங்காளபகுதி முழுவதும்
  • கன்டோ கேஞ்சடிக் பேசின் மற்றும் இராஜஸ்தான்:
  • இராஜஸ்தான், பஞ்சாப், ஹிரியானா, உத்தர் பிரதேசம், மற்றும் மேற்கு வங்காலம் ஆகிய அனைத்து பகுதிகளும் அடங்கும்.
  • கட்ச்சு பகுதியின் காம்பே மற்றும் ரான் பகுதிகள்
  • இந்திய தீபகற்ப பகுதிகள்: இலட்சதீவுப் பகுதிகளும் இதில் அடங்கும்
  • அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள்

நிலநடுக்கத்தினால் ஏற்படும் அபாயங்களை குறைப்பதற்கான வழிகள்:

நிலநடுக்க அபாயங்களை குறைப்பதற்கு நிலநடுக்கம் ஏற்படும் அனைத்து வழிகளும் முதலில் கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு வகைப் படுத்துவதால் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலநடுக்கத்தால் ஏற்படும் விளைவுகளை குறைக்கலாம். அதே போன்று நிலநடுக்கத்திற்கு பின்பு உடனடி மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் இது உதவும். மேலும் பாதிப்படைந்த பகுதிகளை மீண்டும் புதுபிக்க 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும். மேலும் இயற்கை சீற்றங்களின் பாதிப்புகளை பொறுத்து நீண்டகால திட்டங்கள் (5 முதல் 15 ஆண்டுகள்), (ஒன்று முதல் 5 ஆண்டுகள்) மற்றும் குறுகிய கால திட்டங்கள் (அதிக அபாயம் உள்ள பகுதியில் உடனடி நிவாரணம் செய்தல்) என வகைப்படுத்தி திட்டமிடப்படுகின்றன. மேலும் தேவையான காலங்களில் விரைவாக செயல்பட பழைய அனுபவங்களை அடிப்படையாக கொண்டு டீட்பு குழுக்களுக்கு பயிர்ச்சிகள் அளிக்கப்படுகின்றன. செய்யவேண்டிய திட்டச்செயல்பாடுகள் பின்வரும் பகுதிகளில் விளக்கப்பட்டுள்ளன.

நிலநடுக்கத்திற்கு முன் செய்யப்படும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்:

நீண்டகால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்:

  • அதிக அளவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் கட்டுவதற்கான திட்ட வரைப்படங்கள், குறிப்புகள், கால அட்டவணைகள் போன்றவற்றை தயாரித்தல்
  • அதிக அளவு நிலநடுக்க அபாயம் உள்ள பகுதிகளில் கட்டிடங்கள் அதற்கு தகுந்தார்போல் நல்ல தரத்துடன் கட்டப்படுகிறது
  • உட்புற கட்டமைப்பு வசதிகள், நிலநடுக்கத்தால் அதிக அளவு பாதிக்கப்படாத அளவிற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தல் (எ.கா) நிலநடுக்கத்தை தாங்கும் கட்டிடங்கள், மின் அமைப்புகள் ஏற்படுத்துதல்
  • நிலநடுக்கத்தை குறைப்பதற்கு வருமுன் அறிவதற்கு மற்றும் நிலநடுக்க அபாயங்களை திறம்பட எதிர்கொள்வதற்கு நிலநடுக்கம் பற்றி ஆராய்ச்சி மேம்பாடுகளை செய்தல்
  • நிலநடுக்கம், மற்றும் அவற்றின் அபாயங்கள் பற்றிய பாடங்களை கட்டடக்கலை கல்விகள் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் கொண்டு வருதல்

நடுநிலை / குறுகிய கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்:

  • அதிக நிலநடுக்க அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள வழுவிழந்த கட்டிடங்களை வழுப்படுத்துதல்
  • நிலநடுக்க அபாயங்கள் மற்றும் அதன் விளைவுகளை பற்றி உள்ளூர் மொழிகளில் புத்தகங்களை வெளிவிடுதல்
  • மக்களிடையே நிலநடுக்கத்தின் அபாயத்தை குறைப்பது பற்றிய கல்வி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தல்

நிலநடுக்க அபாயங்களின் புள்ளிவிபரங்கள்:
இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்கள்:

வகைப்பாடு அளவு வருடாந்திர சராசரி எண்ணிக்கை
மிக அதிக 8 மற்றும் 8 ற்கு அதிக அளவு 11
அதிக 7-7.9 172
பலமான 6-6.9 1342
மிதமான 5-5.9 13192
லேசான 4-4.9 13,000 (கணக்கிடப்பட்டது)
குறைவான 3-3.9 130,000(கணக்கிடப்பட்டது)
மிககுறைவான 2-2.9 1,300,000(கணக்கிடப்பட்டது)
1 1900 ல் இருந்து எடுக்கப்பட்ட கணக்கின் படி
2 1900 ல் இருந்து எடுக்கப்பட்ட கணக்கின் படி

ஆண்டு வாரியான நிலநடுக்க விபரங்கள்:

2000-2005 ல் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் (அமேரிக்க நிலநடுக்க ஆய்வு மற்றும் தகவல்தொடர்பு மையம்)
நிலநடுக்க அளவு 2000 2001 2002 2003 2004 2005
8.0-9.9 1 1 0 1 2 1
7.0-7.9 14 15 13 14 14 9
6.0-6.9 158 126 130 140 140 116
5.0-5.9 1345 1243 1218 1203 1509 1307
4.0-4.9 8045 8084 8584 8462 10894 10264
3.0-3.9 4784 6151 7005 7624 7937 5782
2.0-2.9 3758 4162 6419 7727 6317 3249
1.0-01.9 1026 944 1137 2506 1344 20
0.1-0.9 5 1 10 134 103 0
அளவு இல்லை 3120 2938 2937 3608 2939 642
மொத்தம் 22256 23534 27454 31419 *31199 *21390
உயிரிழப்புகள் 231 21357 1685 33819 284010 1957

இந்தியாவில் ஏற்பட்ட சில குறிப்பிடத்தக்க நிலநடுக்கங்கள்:

நாள் எபிசென்டர் இடம் அளவு
1819 ஜீன் 16 23.6 68.6 கட்ச், குஜராத் 8.0
1869 ஜனவரி 10 25 93 காசர் அருகில் அஸ்ஸாம் 7.5
1885 மே 30 34.1 74.6 சோபூர், ஜம்மு காஷ்மீர் 7.0
1897 ஜீன் 12 26 91 சில்லாங் 8.7
1905 ஏப்ரல் 04 32.3 76.3 காங்கரா, ஹிமாச்சல் 8.0
1918 ஜீலை 08 24.5 91.0 மாங்கல், அஸ்ஸாம் 7.6
1930 ஜீலை 02 25.8 90.2 தூமிரி, அஸ்ஸாம் 7.1
1934 ஜனவரி 15 26.6 86.8 பிகார் - நேபாளம் 8.3
1941 ஜீன் 26 12.4 92.5 அந்தமான் தீவு 8.1
1943 அக்டோபர் 28 26.8 94.0 அஸ்ஸாம் 7.2
1950 ஆகஸ்ட் 15 28.5 96.7 அருணாச்சல் பிரதேசம், சைனா எல்லைப்பகுதி 8.5
1956 ஜீலை 21 23.3 7.0 அன்ஜர், குஜராத் 7.0
1967 டிசம்பர் 10 17.37 73.75 கோய்னா, மகாராஷ்டிரா 6.5
1975 ஜனவரி 19 32.38 78.49 கின்னூர், ஹிமாச்சல் 6.2
1988 ஆகஸ்ட் 06 25.13 95.15 மணிப்பூர் - மியான்மார் பார்டர் 6.6
1988 ஆகஸ்ட் 21 26.72 86.63 பீகார் - நேபாள்  எல்லை 6.4
1991 அக்டோபர் 20 30.75 78.86 உத்தர்காசி, உ.பி.மலைபகுதி 6.6
1993 செப்படம்பர் 30 18.07 76.62 லட்டூர் - மகாராஷ்டிரா 6.3
1997 மே 22 23.08 80.66 ஜபல்பூர், ம.டீ 6.0
1999 மார்ச் 29 30.41 79.42 சம்போலி, உ.பி 6.8
2001 ஜனவரி 26 23.40 70.28 பூஜ், குஜராத் 6.9
 
Fodder Cholam