இயற்கை சீற்ற மேலாண்மை
|
|||||
காடுகளில் பொதுவாக பேரழிவு ஏற்படுத்தும் பிரச்சனை காட்டுத் தீயாகும். காட்டுத் தீ என்பது காலம் காலமாக இருந்து வருகிறது. இதனால் காட்டு வளத்திற்கு பேரழிவு ஏற்படுத்துவது மட்டுல்லாமல், விலங்குகள், தாவரங்களை அதிகளவில் அளிப்பதால், சுற்றுப்புற சூழலில் மாற்றம் ஏற்படுகிறது. கோடைக் காலங்களில், பல மாதங்களுக்கு மழை இல்லாத போது, காடுகள் முழுவதும் காய்ந்த இலைகள், பற்றி எரிந்து விடும். கோடைகாலத்தின் கடைசி சில மாதங்களில், இமாலய காடுகளில், குறிப்பாக கார்வால் இமாலயப் பகுதிகளில் காட்டுத் தீ எப்பொழுதும் ஏற்படுகிறது. காட்டுத்தீயின் விளைவுகள் காட்டுத் தீ இயற்கையாகவும், மனிதனாலும் ஏற்படுகிறது. இயற்கை விளைவுகள் மின்னலினால் காட்டிற்குள் இயற்கையாகவே பல காட்டுத் தீ ஏற்படுகிறது. இருந்தாலும், மழை பொழிந்தால், பெரியளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. அதிக வெப்பநிலை மற்றும் வறண்ட சூழ்நிலையும் நிலவும் போது தீ ஏற்படுகிறது. மனிதனால் ஏற்படும் விளைவுகள் திறந்த வெளியில் தீபற்ற வைத்தல், சிகரெட் (அ) பீடி, தீபற்ற வைக்கும் பெட்டி ஏதாவது ஒன்று காட்டில் உள்ள காய்ந்த இலைகளின் மீது படும் போது தீ ஏற்படுகிறது. சுற்றுப்புற சூழலினால் ஏற்படும் விளைவுகள் வெப்பநிலை, காற்றின் வேகம் மற்றும் திசை, மண் மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவு மற்றும் வறட்சி நிலவும் காலத்தைப் பொறுத்து காட்டுத் தீ ஏற்படுகிறது. அதிக காற்றின் வேகத்தினால் மூங்கில் மரங்கள் உராய்ந்து மற்றும் கற்கள் ஒன்றோடொன்று உருண்டு தீயை ஏற்படுத்துகின்றன. மனிதன் சார்ந்து ஏற்படும் விளைவுகள்
காட்டுத்தீயின் வகைப்பாடு
காட்டுத்தீயின் வகை இரண்டு வகைகள் உள்ளன. (1) மேற்பரப்பு தீ (2) உச்சியில் ஏற்படும் தீ மேற்பரப்புத் தீ காட்டுத் தீயானது பொதுவாக மேற்பரப்பில் பரவியிருக்கும் காய்ந்த குப்பபைகள், கிளைகள், புற்கள் போன்றவைகளால் ஏற்படுகிறது. உச்சியில் ஏற்படும் தீ ஊசியிலைக் காடுகளில் பிசின் பொருட்கள் மரத்திலிருந்து கட்டைகள் மீது விழும் போது தீப்பிடித்துக் கொள்கிறது. மலைச் சரிவுகளில், மலையின் அடிவாரங்களில் தீ ஆரம்பித்தால், அது விரைவாகப் பரவி அருகில் உள்ள சரிவிற்கும் பரவி தீ ஏற்படுகிறது. தீ மலையின் மேலிருந்து தோன்றினால், கீழ்நோக்கி பரவும்.
தீ மேலாண்மையின் முக்கியத்துவம்
ஆதாரம்:www.thehindu.com/2006/02/04/stories/2006020416080100.htm |
|||||
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015 |
|||||