ஆழிப்பேரலையில் தாக்கப்பட்ட பகுதிகளுக்கான வேளாண் தொழில்நுட்பங்கள்
- ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு கடலில் மிகப்பெரிய ஆழிப் பேரலைகள் உருவாகி கடல் மட்டத்தை உயரத்திற்கு கொண்டு செல்வதே ஆழிப்பேரலையாகும்.
- கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்படுதல், கடலடியில் எரிமலை வெடித்தல், கடலடியில் உள்ள பாறை படிவுகள் நகருதல், கடற்கரையோர நிலச்சரிவுகளின் தாக்கத்தால் ஆழிப்பேரலை ஏற்படுகிறது. இருந்தாலும், கடற்கரையோர நிலநடுக்கங்களால் ஆழிப்பேரலை ஏற்படாது.
- ஆழிப்பேரலை என்பது, கடலில் நீர் மட்டம் செங்குத்தாக நகருவதால், கடுமையான பாதிப்பு ஏற்பட்டு, அலைகள் தொடர்ச்சியாக மேல்நோக்கி வருவது ஆகும்.
- நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடித்தல், போன்றவைகளால் ஆழிப்பேரலை ஏற்படுகிறது.
- ஆழிப் பேரலையானது கடற்கரையோரப் பகுதிகளைத் தாக்குவதால், மக்களின் வாழ்வும், பெரிய அளவில் பொருட்சேதம் ஏற்படுகிறது.
|
ஆழிப்பேரலை என்றால் என்ன?
சுனாமி என்பது ஜப்பானிய வார்த்தையின் ஆங்கில மொழிபெயர்ப்பு. ‘சு’ என்றால் துறைமுகம் என்றும் ‘நாமி’ என்றால் அலை என்றும் அர்த்தம். முந்தைய காலங்களில், பொது மக்களால் சுனாமி என்பது பேரலை என்றும் அறிவியல் விஞ்ஞானிகள் ‘நிலநடுக்க கடல் அலைகள்’ என்றும் அழைத்தனர். ஆழிப்பேரலை அடிக்கும் நேரங்களில், அலைகளின் மட்டத்தைப் பொறுத்து, ஆழிப்பேரலைகளின் தாக்கம் இருக்கும். அலைகள், நிலா, சூரியன் மற்றும் கிரகங்களின் புவிஈர்ப்பு விசை, சமநிலை இல்லாதது போன்ற நிகழ்வுகளால் ஏற்படுகிறது. ‘நிலநடுக்க கடல் அலை’ என்பதும் தவறான ஒன்று. ‘செசிமிக்’ என்றால் நிலநடுக்கம் என்று பொருள். ஆனால் ஆழிப்பேரலை என்பது நில சம்பந்தம் இல்லாத ஒரு நிகழ்வு.
|
பேரழிவுகளின் போது நாம் மேற்கொள்ள வேண்டியவை
1.நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களும் மற்ற மாவட்டங்களுடன் ஒன்றுக் கொன்று தொடர்பு உள்ளவாறு பேரழிவு மேலாண்மை தகவல் மையம் அமைக்கப்பட வேண்டும். இது இணையத்தளம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் இருக்க வேண்டும். இந்த ஆதாரங்கள் எங்கெல்லாம் இருக்கின்றன, இதற்கான திறமை, தகவல்கள், எப்படி ஒருவர் இதை தன்னிச்சையாக (அ) குழுவாக இணைந்து பயன்படுத்துவார்கள் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும். பலதரப்பட்ட சேவைகள், தனியார், பொது மற்றும் தன்னலமற்ற நிறுவனங்களின் தகவல்களை சீராக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு கல்லூரியும் அந்தந்த சேவை சம்பந்தமான தகவல்களை சேகரிப்பதற்கும், புதுப்பிக்கவும் பொறுப்பு எடுத்து கொள்ள வேண்டும். இணையத்தளத்தில் தகவல்களை பதிவு செய்ய வானொலி இயக்குபவர்களை பயன்படுத்தி தவறாமல் செய்ய வேண்டும்
2. தேசிய சேவைத் திட்டத்தை போல், தேசிய பேரழிவு மேலாண்மையில் ஈடுபட்டுள்ள தன்னலமற்றவர்களுக்கு பயிற்சி அளித்து, ஒருங்கிணைந்து செயல்படும் அளவிற்கு, அவர்களை நினைக்க வைக்க வேண்டும். இதில் சமூகம் சார்ந்த அமைப்புகளுக்கு வேண்டிய சுய உதவிக்கு உதவி செய்ய தயங்கக் கூடாது. உச்சநீதி மன்றம் நீர் பேரழிவு மேலாண்மை பற்றிய படிப்புகளை பல கல்வி நிறுவனங்களில் ஆரம்பிப்பதற்கு தீர்ப்பையும், ஆலோசனையும் வழங்கியுள்ளது.
3. ஊடகங்கள் புதிய பிரச்னைகள், அரசியல்வாதிகள் இடையே ஏற்படும் சண்டைகள் (அ) விளையாட்டு பற்றி ஆர்வம் காட்டும் போது பெரிய ஆபத்து தொடங்கும். ஆரம்ப பள்ளிக் கட்டிடங்கள், ஆரம்ப சுகாதார மைங்கள், கால்நடை மருத்துவமையங்கள், தென்னை மரம் ஏறும் தொழிலாளிகளுக்கு மரம் ஏறும் கருவி, மூலிகை மற்றும் இதர மருந்துகள், பால் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் சேதமடைந்த மரங்களிலிருந்து தயாரிக்கும் இயந்திரங்கள், இயற்கைக் கழிவுகள், பழைய மூங்கில் சிராய்ப்புகள், உண்ணும் மற்றும் உண்ணாத எண்ணெய் வித்துகளுக்கான பதப்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் பலவற்றிற்கான ஆதாரங்களை ஏற்படுத்தித் தரவேண்டும். பேரழிவினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்திலும் தகுந்த மறுவாழ்வு அரசு நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டி, அதை பொதுமக்களுக்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும். என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
4. மிக அதிகம் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு, நீண்டகால மறுவாழ்வு திட்டங்கள் தொடங்கப்பட வேண்டும்.
5. ஆழிப்பேரலையால் சேதம் ஏற்பட்ட அனுபவம் மற்றும் உள்ளூர் சமூகங்கள் மற்றும் நிர்வாகத்துடன் இணைந்து புனையும் திட்டங்களை பதிவு செய்து வைக்க வேண்டும்.
6. நிவாரணம் வழங்குவதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அந்த மக்களுக்கு என்ன உதவி தேவை, யாரிடமிருந்து தேவை என்பது தெரியாமல் இருக்கிறது. இதனால் நிறையப் பொருட்கள் வீணாகின்றன அல்லது வேறு யாருக்காவது தரப்படுகிறது. இதற்காக நம் இணையத் தளத்தில் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட கிராமத்திற்கும் என்னென்ன தேவைகள், பாதிக்கப்பட்ட நபரின் பெயர் மற்றும் முகவரி பற்றிய விபரங்கள் பதிந்து வெளியிட வேண்டும். நம்முடைய மாணவர்கள் மற்றும் துறைகளின் உதவியுடன் குஜராத் நிலநடுக்கத்திற்கு பிறகு ஒரு சரக்கு இருப்பு மேலாண்மை திட்டத்தை உருவாக்க வேண்டும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து பெறப்பட்ட நிவாரணப் பொருட்களை மாணவர்கள் தரம்பிரித்து, பதிவேற்றம் செய்து, நிவாரண ஆட்சியரிடம் தந்து விட வேண்டும். இந்த அமைப்பை நாம் புவித் தகவல் மையத்துடன் இணைத்தால், எங்கெல்லாம் நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டுமோ அந்த இடத்தை கண்டறிந்து தரும்பொழுது, வீணாவதைத் தடுக்கலாம்.
7. உளவியல் ரீதியான மறுவாழ்வும் முக்கியமான ஒன்றாகும். ஆழிப்பேரலை ஏற்படுத்திய அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஒரு இடத்தில் திரட்டி, தத்து எடுத்து அதற்கான நிவாரணங்களை செய்ய முனைய வேண்டும்.
8. பொது சுகாதார அமைப்புகள் ஆழிப்பேரலையால் இறந்தவர்களின் பதிவேட்டை பராமரிக்கத் தயங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இழப்பீட்டு நிதியிலிருந்து சிறிது தொகையை மாநில மற்றும் மத்திய அரசுகள் சேமிக்க வேண்டும். மறுவாழ்வு நிதி சென்றடைவது தாமதமானால், அனைத்தும் தாமதப்படும். இதற்கு மத்திய அரசு தலையிட்டு, இழப்பீட்டுத் தொகையை, அடுத்த 24 மணி நேரத்திற்குள் சமூக கட்டுப்பாட்டு அமைப்பின் மூலம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உடனடி உதவி தேவைப்படும்போது, நீண்ட கால மறுவாழ்வுத் திட்டத்தை உடனடி நிகழ்வாக நடக்குமாறு திட்டமிட வேண்டும்.
தமிழ்நாட்டில் ஆழிப்பேரவையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்
|
சென்னை |
திருவள்ளூர் |
கடலூர் |
விழுப்புரம் |
காஞ்சிபுரம் |
நாகப்பட்டினம் |
தஞ்சாவூர் |
புதுக்கோட்டை |
திருவாரூர் |
ராமநாதபுரம் |
தூத்துக்குடி |
திருநெல்வேலி |
கன்னியாகுமரி |
|
ஆதாரம் :http://www.tn.gov.in/tsunami/affected.html# |