Agriculture
மானாவாரி நில சாகுபடி முறை

மானாவாரி வேளாண்மை/புன்செய்நில வேளாண்மை

புன்செய் நில வேளாண்மை என்பது மானாவாரி சூழ்நிலையில் பயிர்கள் வளர்ப்பதே ஆகும். மழைப்பொழிவின் அடிப்படையில் மானாவாரி நில வேளாண்மையை, மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை.

புன்செய்ப்பண்ணையம்: ஒரு வருடத்தில் 750 மி.மீக்கு குறைவான மழைப்பொழிவு கொண்ட நிலப்பகுதியில் பயிர்கள் வளர்த்தல்

வறண்ட நிலப்பண்ணையம்: ஒரு வருடத்தில் 750 மி.மீக்கு அதிகமான மழைப்பொழிவு கொண்ட நிலப்பகுதியில் பயிர்களை வளர்த்தல்

மானாவாரிப்பண்ணைம்: ஒரு வருடத்தில் 1150 மி.மீக்கு அதிகமான மழைப்பொழிவு கொண்ட நிலப்பகுதியில் பயிர்கள் வளர்த்தல்

புன்செய்நில மண்ஈர இயக்குநிலை

மழைக்காலங்களில் பெறப்படும் மழைநீரின் ஒரு பகுதி வழிந்து ஒடிவிடும். எஞ்சிய மழைநீர் மண்ணில் ஊடுருவி செல்கிறது. பொதுவாக இந்நீரானது உட்கசிவின் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை அடைகிறது மற்றும் சில சமயம் இநநீர் பயிர்களின் வேர்பகுதிகளை தாண்டியும் சென்றுவிடுகிறது. மழை பொழிவிற்க்கு பின் நீர் ஆவியாதல், மற்றும் நீராவிபோக்கு போன்ற செயல்களின் மூலம் நீர்ஆவியாதலினால், மேல்மட்ட மண் காய துவங்குகிறது.

 
 
Fodder Cholam