Agriculture
மானாவாரி நில தொழில் நுட்பங்கள்


நீர் ஆவியாதல் மற்றும் நிராவிப்போக்கு இழப்புகளை குறைப்பதற்கான உத்திகள்

நீராவிபோக்கு இழப்புகளை குறைத்தல: மண் ஈரப்பதம் என்பது, புன்செய் நில வேளாண்மையில் மிக முக்கியமான காரணி ஆகும். இவ்விரப்பதம், மண்மேற்பரப்பிலிருந்து நீராவியாதல் மூலமும், தாவரங்களிலிருந்து நீராவிபோக்கின் மூலமும் இழக்கப்படுகிறது. நீராவியாதலுக்கு, உற்பத்தித்திறனுடன் நேரடி தொடர்பு ஏதும் இல்லாததால், அதனை முழுமையாக கட்டுப்படுத்தலாம், ஆனால் நேரடி தொடர்பு உடைய நீராவிபோக்கினை, பயிர் உற்பத்திதினை பாதிக்காத அளவில், குறைவாகவே கட்டுப்படுத்த முடியும் நீராவியாதலால் ஏற்படும் இழப்பை கீழ்கண்ட முறைகளின் மூலம் குறைக்கலாம்.
1.நில போர்வை (மூடாக்கிடல்) ஈரப்பாதுகாப்பு மூடாக்குகள்
2.நீராவிபோக்கு தடுப்பான்கள்
3.காற்று தடுப்புகள்
4.களைக்கட்டுப்பாடு

நில
போர்வை
மழைபொழிவின் மூலம் பெறப்படும் நீரில் 60 முதல் 75 சதவீதம் நீராவியாதலின் மூலம் இழக்கப்படுகிறது. இந்நீராவியாதல் இழப்புகளை, நிலபோர்வை மூலம் குறைக்கலாம் எவ்வகை நிலபோர்வைகளை பயன்படுத்தினாலும், நீராவியாதல் குறைக்கப்பட்டு, மண் ஈரப்பதத்தினை அதிகரிக்கச் செய்கிறது.
இவ்வகை நில போர்வைகளினால் மண் பாதுகாப்பு, மண் வெப்ப நிலை குறைப்பு, மண் உப்பு தன்மை குறைப்பு, களைக் கட்டுப்பாடு மற்றும் மண் பதத்தினை கூட்டுதல் போன்ற சிறந்த நன்மைகளும் ஏற்படுகின்றன.

நில
போர்வைகளின் வகைகள்:
மண் போர்வை அல்லது புழுதி மூடாக்கு: மேற்பரப்பு மண்ணை உழவின் மூலம் தளர்த்தி இளகுவாக்கும்போது, அத்தளர்த்தப்பட்ட மண், நில போர்வையாக செயல்பட்டு நீராவியாதலை தடுக்கிறது. இவ்வகை தளர்த்தப்பட்ட மேற்பரப்பு மண், மண் போர்வை அல்லது புழுதி போர்வை போர்வை என்று அழைக்கப்படுகிறது. வளரும் பயிர்களுக்கு இடை உழவு மண்  போர்வையாக அமைகிறது.

தாள்போர்வை:
பயிர் தாள் கழிவுகளான கோதுமை தாள், நெற்பயிர் தாள் போன்றவைளை மண்மேற்பரப்பில் பரப்பி தாள் மூடாக்கு செய்யப்படுகிறது. இவ்வகை தாள் போர்வை மண் அரிப்பு மற்றும் நீராவியாதலை குறைப்பதன் மூலம் மண் வளத்தினை பாதுகாக்கிறது.
வைக்கோல் மூடாக்கு வைக்கோலை கொண்டு மண் மூடாக்கு அமைப்பதினால் இது வைக்கோல் மூடாக்கு என அழைக்கப்படுகிறது.

தாள்போர்வை


பிளாஸ்டிக்
மூடாக்கு: பாலித்தீன், பாலிவனைல் குளோரைடு போன்ற பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு மூடாக்கு போடப்படுவதினால் இது பிளாஸ்டிக் மூடாக்கு என்று அழைக்கப்படுகிறது.

Picture 036Picture 010



செங்குத்து
மூடாக்கு: மழைநீரை உட்கிரகித்து மற்றும் மண்ணில் தேக்கி வைப்பதற்கு இவ்வகை செங்குத்து மூடாக்கு உதவுகிறது. இவ்வகை மூடாக்கில் சரிவிற்கு குனுக்காக சிறிய குறுகிய கால்வாய்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தோண்டப்படுகின்றன. அக்கால் வாய்களில் தாள்கள் மற்றும் தாவரக் கழிவுகள் பரப்பப்படுகின்றன. கவாத்து செய்தல் மூலம் உண்டாகும் தாவரக்கழிவுகளும் இரண்டு வரிசைகளுக்கு இடையேயுள்ள குழியில் இடப்படுகிறது. அல்லது மரத்தை சுற்றி உள்ள வட்டக்குழியில் போடப்படுகிறது. இவ்வாறு ஒரு வருடத்திற்க்கு ஒரு வட்டமாக தாவரக் கழிவுகள் போடப்படுகின்றது.

நீராவிப்போக்கு
இழப்பை குறைத்தல்:

நீராவிப்போக்கு தடுப்பான்கள்: தாவரங்களில் உட்கிரகிக்கப்படும் நீரில் சுமார் 99 சதவீதம் நீராவிப்போக்கின் மூலம் இழக்கப்படுகிறது. நீராவிப்போக்கை கட்டுபடுத்தினால், சாதகமான நீர் சமநிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நீராவிப்போக்கு தடுப்பான்கள் என்பது ஒரு பொருளை தாவர மேற்பரப்பில் தெளிக்கும்போது, அது தாவரத்தின் நீராவிபோக்கின் மூலம் ஏற்படும் நீர் இழப்பை கட்டுபடுத்துவது ஆகும்.

நீராவிபோக்கு
தடுப்பான்கள் நான்கு வகைப்படும் அவை

  1. இலைத்துளையை மூட செய்வது
  2. மெல்லிய படலம் அமைத்தல்
  3. பிரதிபலித்தல்
  4. வளர்ச்சி தடுப்பான்கள் வளர்ச்சிக் குறைப்பான்கள்

இலைத்துளையை மூட செய்யும் முறை: பெரும்பாலான நீராவிப்போக்கு இலையின் மேற்பரப்பில் உள்ள இலைத்துளைகளின் வழியாக நடைபெறுகிறது.
பூஞ்சான கொல்லியான வினைல் மெர்குரிக் அசிடேட் மற்றும் களைக்கொல்லின அட்ரசின் குறைந்த அடர்த்தியில் இலைத்துளையை மூடச்செய்து, நீராவிப்போக்கு தடுப்பான்களாக செயல்படுகின்றன. பினைல் மெர்குரிக் அசிடேட் பெரும்பாலான செடிகளில் ஒளிச்சேர்க்கை கட்படுத்துவதைக் காட்டிலும் நீராவிப்போக்கை கட்டுபடுத்துகிறது.

மெல்லிய படலம் அமைக்கும் முறை: இம்முறையில் பிளாஸ்டிக் மற்றும் மெலுகு பொருள்களினால் இலைமேற்பரப்பில் மெல்லிய படலம் அமைத்தல் மூலம் நீர் வெளியேறுவதை தடுக்கலாம். மொபில்ப் ஹெக்ஸாக்கோனல், சிலிக்கான் போன்றவை மெல்லிய படலம் அமைக்கும் நீராவிப்போக்கு, தடுப்பான்கள் ஆகும். இவ்வகை இரசாயனப் பொருள்களினால் ஏற்படும் வெற்றி மிக குறைந்த அளவே இருக்கும். ஏனென்றால் இவ்வகை இரசாயன பொருட்கள் ஒளிச்சேர்க்கையையம் சேர்த்து குறைக்கிறது.

நீராவிப்போக்கு
தடுப்பான்களின் தனித்தன்மைகள்
நீராவிப்போக்கு தடுப்பான்கள் மிக மெல்லிய படலத்தை அமைக்க வேண்டும்
அவ்வகை படலம் கரியமில வாயுவை தடுப்பதைக் காட்டிலும் நீர் மூலக்கூறுகள் வெளியேறுவதை தடுக்கும் வண்ணம் இருக்க வேண்டும் மற்றும் படலம் தொடர்ந்து இடைவெளியற்று இருக்க வேண்டும்

பிரதிபலிக்கும் முறை: இம்முறையில் வெண்மை பொருள்கள் தாவர இலைகளின் மீது வெண்மை படலங்களை ஏற்படுத்தி, இலைகளின் பிரதிபலிப்பை அதிகப்படுத்துகின்றன. இவ்வகையில் கதிர்விச்சை பிரதிபலிப்பதினால், இலை வெப்பநிலை மற்றும் வளிமண்டலத்திற்கும் இலைக்கும் இடையேயுள்ள நீராவி அழுத்தம் ஆகியவை குறைகின்றன. இதனால் நீராவிப்போக்கும் குறைகிறது.
5 சதவீதம் கயோலின் கரைச்சலை திரவத்தை தெளிப்பதன் மூலம், நீராவிப்போக்கின் இழப்பை குறைக்கலாம்.
சிலைட் என்ற மண் வகை, பயிரின் மேற்கவிகையில் சூரிய கதிர்வீச்சு பிரதிபலிப்பதை அதிகரிக்கச் செய்கிறது.

வளர்ச்சி
தடுப்பான்கள்: இவ்வகை இரசாயனம், தாவரங்களில் தண்டு வளர்ச்சியை குறைக்கிறது அதே சமயம் வேர்பகுதி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. இதனால் தாவரங்கள் வறட்சியை தாங்கும் வண்ணம் உள்ளன. மேலும் இவ்வகை இரசாயனம் இலைதுளைகளை மூடச்செய்கின்றன.
சைக்கோசல் என்ற இரசாயனம் இவ்வகையில் செயல்பட்டு தாவரங்களில் நீர் அளவை சாதகமாக வைக்க உதவுகின்றன
பொதுவாக நீராவிப்போக்கு தடுப்பான்கள், ஒளிச்சேர்க்கையை குறைக்கின்றன. ஆகையால் இவை, நீர்நெருக்கடிக் காலங்களில், தாவரங்களை அழிவிலிருந்து காக்கின்றன. பின்பு சாதகமான மழை அளவு இருக்கும் காலங்களில், அத்தாவரங்கள் பிழைத்துக் கொள்கின்றன. மேலும் இவ்வகை நீராவிப்போக்கு தடுப்பான்கள், நாற்றின் நாற்று நடவின் பொழுது ஏற்படும் அதிர்ச்சியை போக்க உதவுகின்றன. தோட்டக்கலை பயிர்களிலும், நாற்றங்கால்களிலும் இவை சில செயல்முறைகளுக்கு பயன்படுகின்றன.

காற்றுத்
தடுப்புகள் மற்றும் தாவர காற்றுத்தடுப்புகள்

காற்றுத் தடுப்பான்கள் என்பது காற்று அடிக்கும் திசையில், காற்றின் வேகத்தை குறைப்பதற்காக அமைக்கப்படும் கட்டமைப்புகள் ஆகும். தாவரக் காற்றுத் தடுப்பான்கள் என்பது அடிக்கும் காற்றிற்க்கு எதிராக, வரிசையாக மரங்களை நடுவதன் மூலம் பாதுகாப்பை ஏற்படுத்துவதுஆகும்.
எத்திசையிலிருந்து காற்று வீசுகிறதோ, அது காற்றுவசம் திசை என்றும், எத்திசையை நோக்கி காற்று வீசுகிறதோ அத்திசை காற்று ஏகும் திசை என்றும் அழைக்கப்படுகிறது.
காற்று வீசும் திசைக்கு குறுக்காக அமைக்கப்படும் தாவரக்காற்று தடுப்பான்கள், காற்றினை முழுமையாக தடுப்பது இல்லை. தாவரக் கிளைகளின் அடர்த்தியை பொருத்து ஒரு பகுதி காற்று, அதனுள் ஊடுருவுகிறது. எஞ்சிய காற்றின் ஒரு பகுதி திருப்பி அனுப்பப்படுகிறது. மற்றொரு பகுதி காற்று தடுப்புகளை தாண்டி வீசுகிறது. இவ்வாறு காற்று கொந்தளிப்பின்றி, காற்றின் வேகத்தை காற்றுத் தடுப்புகள் குறைக்கின்றன. தாவரக் காற்றுத் தடுப்பான்களின் பாதுகாப்பான அவற்றின் நடுவரிசை மரங்களின் உயரத்தை பொருத்து இருக்கும் பொதுவாக தாவரக் காற்று தடுப்பான்கள், காற்று வீசும் திசையில் 5 முதல் 10 மடங்கு வரையும், காற்றும் ஏரும் திசையில் 30 மடங்கு வரையும் காற்றின் உலர்த்தும் தன்மையை குறைக்கிறது. காற்றின் வேகத்தை குறைப்பதினால் நீராவியாதலினால், ஏற்படும் இழப்பை குறைக்கிறது. மற்றும் தாவரங்களுக்கு அதிக கிடைக்கச்செய்கிறது. தாவரக் காற்றுத் தடுப்பான்கள், வறண்ட காலங்களில் மிகவும் உதவுகின்றன. இதனுடன், தாவரக் காற்று தடுப்பான்கள் காற்றினால் ஏற்படும் மண் அரிப்பையும் குறைக்கிறது.
படம்

களைக் கட்டுப்பாடு

போதிய அளவு களைக்கட்டுப்பாடுகளினால், குறைவான மண் ஈரப்பத சூழ்நிலையில், களைகளினால் ஏற்படும் பாதிப்பு குறைகிறது. களைகளில், பயிர்களை காட்டிலும் அதிக நீராவி போக்கு காணப்படும். புன்செய் நில வேளாண்மையில், சிறப்பான களைக்கட்டுப்பாடு, பயிர்களுக்கு அதிக அளவு மண் ஈரப்பதத்தை கிடைக்கச்செய்கிறது.
நீராவிபோக்கு இழப்பை குறைப்பதற்கு, இது மிகவும் முக்கியமான ஒன்று ஆகும்.


களைக் கட்டுப்பாடு

 
Fodder Cholam