Agriculture
மானாவாரி நில சாகுபடி முறை


நிலத்தினுள்
மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்கும் நுட்பங்கள்
சிறு நீர்பிடிப்புப் பகுதிகள்
செயல்பாடுகள்

dry land Dry land
  • மண்ணினுள் ஈரப்பதத்தை பாதுகாக்கவும், மண் இழப்பை குறைக்கவும் செய்கிறது.
  • நீர் உட்புகும் திறன் மற்றும் மழையளவைப் பொறுத்து சமமட்டப் பகுதிகளில் ஒரு மீட்டர் விட்டம் கொண்ட வட்டப்பாத்தி அமைக்க வேண்டும்.
  • மழையளவு மற்றும் சரிவான நிலங்களின் சரிவைப் பொறுத்து 5x5மீ அளவுடைய  ‘V’ வடிவப் பள்ளங்கள் தோண்டி, அதில் நடுவில் மரங்களை நடவேண்டும்.
  • சரிவிற்கு குறுக்கே 15 -20 செ.மீ உயரம் மற்றும் 2 மீ விட்டமுடைய கிண்ண வடிவ பாத்திகள் / அரைவட்ட வரப்புகளை அமைக்க வேண்டும்.

அகலப்பாத்தி மற்றும் சால்கள் அமைத்தல்

Dry land

  1. செயல்கள் : மழைக்காலங்களின் போது மண் அரிப்பைக் கட்டுப்படுத்தவும், மண் ஈரப்பதத்தை பாதுகாக்கவும் செய்கிறது.
  2. பொதுவானத் தகவல்கள் : வயல் எல்லைகளுக்குள்ளே அகலப்பாத்திகள் மற்றும் சால்கள் அமைக்க வேண்டும். நிலத்தைச் சமப்படுத்தி, மாடுகளைக் கொண்டோ, டிராக்டர் கொண்டோ பார்கள் அமைக்க வேண்டும்.
  3. விலை : பாத்திகள் மற்றும் சால்கள் ஒரு எக்டருக்கு அமைக்க ஆகும் செலவு ரூ.1000/-
  4. சிறப்பியல்புகள் : புன்செய் நிலத்தில் மண் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது.

மண்அரிப்பைக் கட்டுப்படுத்துகிறது
பலத்த மழை பொழியும் நாட்களில் வடிகால்களாக செயல்படுகிறது.
சம உயர உரப்பு

Dry land   contour band

  1. செயல்கள் : சரிவிற்கு குறுக்கே வரப்பு அமைப்பதால் வழிந்தோடும் நீரைத் தடுக்கலாம்
  2. பொதுவான தகவல்கள் : நீர் வழிந்தோடும் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வரப்புகள் திறந்தவெளி (அ) மூடியவாறு இருக்கலாம்.

தேவைப்படும்போது அதிகப்படியான அமைப்புகளும் அமைக்கலாம்.

  1. விலை : சம உயர வரப்பு அமைக்க ஆகும் செலவு ரூ.1500/எக்டர்
  2. சிறப்பியல்புகள் : இளகிய மற்றும் நடுத்தர நயமுடைய மண்களில் அமைக்கப்படுகிறது.

6% சரிவு வரை உள்ள நிலங்களில் அமைக்கப்படுகிறத.
நிலத்தில் மண் ஈரத்தை வைத்திருக்கவும் உதவுகிறது.

குறுக்கு வெட்டாக உள்ள வரப்புகளுக்கான அளவீடுகள் :

மண்ணின் ஆழம் (மீ) அடி அகலம் (மீ) மேல் அகலம் (மீ) உயரம் (மீ) பக்கச் சரிவு (மீ) குறுக்கு வெட்டுப் பகுதி (.மீ)
ஆழம் குறைவான மண்கள் (7.5 – 22.5 செ.மீ) 2.67 0.38 0.75 1.5:1 1.14
நடுத்தர மண் (22.5 – 45 செ.மீ) 3.12 0.60 0.85 1.5:1 1.56
நடுத்தர ஆழமுள்ள மண்கள் 4.25 0.60 0.90 2:1 2.18

பலதரப்பட்ட வரப்புகளுக்கு தேவைப்படும் நிலைமைகள்

வரப்புகள்  மண்வகை மழையளவு (மி.மீ) சரிவு (%)
சம உயர வரப்பு இளகிய மண் < 600 > 1.5
சீர் வரப்பு அனைத்து மண்கள் > 600 1.5
இருக்கை அடுக்குத் தளம் ஆழமான மண் > 1000 6.0
சீர் வரப்பு வரிசை ஆழமான செம்மண் மற்றும் அதுசார்ந்த மண்கள் >800 > 1.5

மண்ணினுள் ஈரப்பதத்தை பாதுகாக்கும் நுட்பங்கள்

மண் வகை மழையளவு மண்ணினுள் ஈரப்பத்தைப் பாதுகாக்கும் நுட்பங்கள்
செம்மண் குறைவான மழை 3-6 மீட்டர் இடைவெளியில் உள்ள வெற்றுச் சால்கள்
மிதமான மழை சமமட்ட படுக்கையில் விதைத்தல் மற்றும் பயிர்களை அமைத்து ஒரே மாதிரி சாகுபடி செய்தல்
பலத்த மழை  சீர் வரப்பு வரிசைகள்
கருமண் குறைவான மழை சம உயர வரப்பு
மிதமான மழை 3-6 மி. இடைவெளியில் வெற்றுச் சால்கள்
பலத்த மழை சரிவிற்கு குறுக்கே 10 மீ.இடைவெளியில் திறந்தவெளி சீர் சால்கள் (0.2 -0.3மீ3) அமைத்தல்

மண் ஈரப்பத சேமிப்பை மேம்படுத்துதல்
மண்ணில் ஈரப்பதத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் திறனை அதிகப்படுத்த மற்றும் நில நீர் கொள்ளளவுத் திறனை அதிகப்படுத்தவும், மண்ணில் வண்டல், களிமண், அங்ககப் பொருட்களை சேர்க்கலாம்.

 
 
Fodder Cholam