மானாவாரி நில சாகுபடி முறை
|
மானாவாரி பயிர் உற்பத்தியில் ஏற்படும் பிரச்சனைகள்
இந்திய பருவமழையில், நீண்ட கால மழை இடைவெளி என்பது எப்போதும் இருக்கும் ஒன்று. இவ்வகை நீண்ட வறண்ட நிலை பயிர் பருவகாலங்களில் நிலவும் போது, பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிக்கப்படுகிறது. சில சமயம் நீண்ட வறண்ட நிலை, பயிரை முற்றிலும் பாதிக்கும். செம்மண் மற்றும் மணற்பாங்கான மண் வகைகள், மிக குறைவான மண் ஈரப்பதத்தை தக்கவைக்கும் திறன் கொண்டவையாக காணப்படும். இவ்வகை மண்களில் வளரும் பயிர்கள், நீண்ட வறண்ட சூழ்நிலையில் பெரிதும் பாதிக்கப்படும். மேலும் சமச்சீரற்ற மற்றும் சரிவான நில அமைப்புகளினால் மழை நீரானது மண்ணில் உட்கரிக்கும் முடியாமல் நீரோட்டமாக ஓடிவிடும் மானவாரி நிலங்கள் வறண்டும் மண் வளம் குன்றி நிலையில் உள்ளன போதுமான அளவு மண் ஈரப்பதம் இல்லாததால், மண் வளத்தை மேம்படுத்த இரசாயன உரத்தை பயன்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்படும். |
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2021 |