காரணங்கள் |
விளைவுகள் |
அதிக அளவு அங்கக உயிர் பொருள் உற்பத்தி |
மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி தாவர பகுதிகளில் சேமித்து வைத்தல் களைகளின் வளர்ச்சியை குறைத்தல் |
ஆழமான வேர்களை கொண்டு காணப்படும் |
முதன்மை பயிர்களால் பெற முடியாத கீழ்மட்டத்திற்கு அடித்துச் செல்லப்பட்ட ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி சேமிக்கின்றன (தாவரப்பகுதிகளில்) |
ஆரம்ப காலகட்டத்தில் அதிக அளவு வளர்ச்சியுடன் காணப்படும் |
விரைவாக வளர்ந்து நிலமட்டம் முழுவதும் பரவி மண் பாதுகாப்பை ஏற்படுத்துகிறது. களை வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது |
கிளைப்பகுதிகளை காட்டிலும் அதிக அளவு இலைகளை கொண்டு காணப்படும் |
எளிதில் மட்கும் தன்மை கொண்ட அங்கக பொருட்கள் |
குறைவான கார்பன் நைட்ரஜன் வழுதம் |
பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எளிதாக கிடைக்கச் செய்கின்றன. மேலும் இவை மண்ணில் சிறியதாக எளிதில் வெட்டி போடுவதற்கு ஏற்றதாக உள்ளன |
(நைட்ரஜன்) தழைச்சத்து நிலை நிறுத்துதல் |
தழைச்சத்து அளவை மண்ணில் அதிகரிக்கிறது |
மைக்கோரைஸா உடன் சாதகமான இணக்கம் |
பயிர்களுக்கு பெருமளவு (பாஸ்பரஸ்) மணிச்சத்து கிடைக்கச் செய்கிறது |
சரியான அளவு நீர் பயன்பாடு |
|