| பசுந்தாள்  உரமிடுதல்   அங்கக  எருக்களான பசுந்தாள் உரமிடுதல் , மக்கிய உரமிடுதல்  போன்றவற்றின் பயன்பாட்டால் இந்தியாவானது உணவு பற்றாக்குறையிலிருந்து  மீண்டு உணவு சேமிப்பிற்கு மாற்றமடைந்துள்ளது. அங்கக உரங்களின் விலை அதிகமாக இருப்பது  மட்டுமல்லாமல் மண் வளத்தினையும் பாதிக்கிறது. இதற்குப் பதிலாக உருவாக்கப்பட்டது தான்  பசுந்தாள் உரமிடுதல். இந்த பசுந்தாள் உரமானது குறைந்த விலையில் இருப்பது மட்டுமல்லாமல்  உற்பத்திக்கு பாதுகாப்பும் அளிக்கிறது. பசுந்தாள்  உரப்பயிர்கள்             மண்ணில் அங்ககப் பொருட்களின் தன்மையை  அதிகரிப்பதற்காக பயிரிடப்படும் பயிர்கள் பசுந்தாள் உரப்பயிர்களாகும். 
         பசுந்தாள்  உரமிடுதல்
             பயிர்த்திட்டத்தில் பயன்படுத்தப்படும்  பசுந்தாள் உரப்பயிர்கள் பசுந்தாள் உரமிடுதலாகும். அதாவது பசுந்தாள் இட்டு உழுது விடுவதாகும்.  
 பசுந்தாள்  இலை உரப்பயிர்             அருகிலுள்ள பசுந்தாள் இலைகளைச் சேகரித்து  மண்ணில் சேர்ப்பதாகும்.  பசுந்தாள்  இலை உரப்பயிர் இட்ட நெற்பயிர் நிலம்
 பசுந்தாள்  உரமிடுதலின் குறிக்கோள்கள்             பயிர்களில் நைட்ரஜனை நிலை நிறுத்துவது  (அல்லது) மண்ணில் அங்ககப் பொருட்களை நிலை நிறுத்துவது. துணை நோக்கம் a. பற்றுப்பயிர்
 பயிர் நிற்கும் போது அறுவடைக்கு முன்னர் அல்லது அறுவடைக்கு பின்னர் நைட்ரேட்  அல்லது மீதமுள்ள ஈரத்தினை பயன்படுத்த பயறுவகை பயிர்களை விதைக்க வேண்டும்.
 b. நிழல் பயிர்கள்
 அதிக வெப்பத்தை தடுக்கவும், மண்ணிற்கு நிழல் தரும் வகையிலும் பழத்தோட்டங்களில்  நிழல் பயிர்களின் விதைகள் விதைக்கப்படுகின்றன. இல்லையெனில் பழப்பயிர்களின் இளம் வேர்கள்  அதிக மண்ணின் வெப்பநிலையால் பாதிக்கப்படும். தேயிலை மற்றும் காபி போன்ற மலைத் தோட்டப்பயிர்களில்  கிளைரிசீடியாவை முதலில் நிழல் பயிராக பயிரிட்டு பின்பு பசுந்தாள் உரப்பயிராக உழுது  விட வேண்டும்.
 c. மூடு பயிர்கள்d. தீவனப் பயிர்கள்
 மலைப் பகுதிகளில் பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிடுவதன் மூலம் அதன் தழை வழி  மண்ணினை போர்வை போல் மூடி மழைக் காலங்களில் மண் அரிப்பை மற்றும் நீர் வழிந்தோடுதலைத்  தடுக்கிறது.
 
 பயறு வகை பயிர்கள் ஆரம்ப நிலையில் கால்நடைகளுக்கு பசுந்தீவனமாகவும் பின்னர்  பசுந்தாள் உரப்பயிராகவும் பயன்படுகிறது. நரிப்பயறின் விதைகளை நெல் பயிரின் அறுவடைக்கு  முன்னரே விதைக்க வேண்டும். (அறுவடைக்கு 3- 5 நாட்களுக்கு முன்பு).
 பசுந்தாள்  உரப்பயிர்களின் வகைகள் 
  
    | பசுந்தாள்    உரப்பயிர்கள் |  
    | பயறு    வகைகள் | பயறில்லாத    வகைகள் |  
    | பசுந்தாள் உரப்பயிர்கள் | பசுந்தழை உரப்பயிர்கள் | பசுந்தாள் உரப்பயிர்கள் | பசுந்தழை உரப்பயிர்கள் |  
    | எ.கா. தக்கைப் பூண்டு சணப்பை
 கொளுஞ்சி
 | எ.கா. கிளைரிசிடியா அவரை
 புங்கம்
 | எ.கா. சூரிய காந்தி பக் கோதுமை
 | எ.கா. எருக்கு ஆடா தொடை
 தீஸ்பீசியா
 |  பயறுவகை பசுந்தாள் உரப் பயிர்களின் இயல்புகள்:  
  பல்வகைப்       பயன்பாடுகுறுகிய       கால, வேகமாக வளரும், அதிக ஊட்டச்சத்தை சேமிக்கும் திறன் கொண்டது.நிழல்,       வெள்ளம், வறட்சி மற்றும் பாதகமான வெப்பத்தை தாங்கி வளரும்.பரந்த       சுற்றுச்சூழலுக்கு ஒத்துப்போகும் தன்மை கொண்டது.நீர்       பயன்பாட்டு திறன் கொண்டது.ஆரம்ப       காலத்திலே உயிரியியல் காலக நிலையாக்கம் கொண்டது. அதிக       தழைச்சத்து குவியும் விகிதம் கொண்டது.ஊட்டச்சத்துகளை       சரியான நேரத்தில் வெளியீடுதல்சூரிய       ஒளி உணர்வற்றது. அதிக       விதை உற்பத்திஅதிக       விதை முளைத்திறன்எளிதாக       உழுது விடலாம்.குறுக்கு       உட்செலுத்தும் திறன் அல்லது உட்புகுத்தலுக்கு ஏற்புதன்மை கொண்டது. பூச்சி       மற்றும் நோய் எதிர்ப்பு கொண்டது.நிலத்தடி       தாவர பகுதிகளில் அதிக தழைச்சத்து உறிஞ்சகம் கொண்டது.  தானியவகை பசுந்தாள்  உரப்பயிர்கள்  உள்ளூர் பெயர்கள்  
    அகத்திதக்கைப்பூண்ட
சணப்பை 
கொளுஞ்சி
நரிப்பயறு
தட்டைப்பயறு
கொத்தவரை
பச்சைப்பயறு
புரதப்புல
அவுரிச்செடி பசுந்தழை உரப்பயிர்களாக பயன்படுத்தப்படும் தாவரங்கள்  மற்றும் மரங்கள்  
  
    
      | புதர்செடிகள் | மரங்கள் | பசுந்தழை உரப் பயிர்கள் |  
      | கேசியா ஆரிகுலேட்டா டெரிஸ் இண்டிகா
 ஐப்போமியா கார்னியா
 காட்டாமணக்கு
 தெப்ரோசியா கேண்டிடா
 | தெஸ்பிசியா பாபுல்னியா வேம்பு
 கிளைரிசீடியா
 கேசியா டோரா
 விடெக்ஸ் நெகுண்டு
 | லுசியானா லுகோசெப்பாலா களோட்ராபிஸ் ஜைஜேண்டியா
 டெலோனிக்ஸ் ரிஜியா
 கேசியா ஆக்ஸிடெண்டல்
 ஹைபிஸ்கஸ் விஸ்கோசா
 |  வழக்கத்தில் இல்லாத பசுந்தாள் உரப்பயிர்கள்  
  பயறுவகை       மற்றும் பயறுவகை அல்லாத ஓராண்டு பயிர், புதர்செடிகள் மற்றும் மரங்கள் அதிக அங்கக       உயிர்ப் பொருள் மற்றும் கணிசமான அளவில் தாவர ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன. அதிக       கார்பன் – நைட்ரஜன் விகிதம் கொண்ட அங்கக எச்சங்களை உழுது விட்ட பின்னர் பயிரில்       ஆரம்ப தடை காணப்படும். அதிக       லிக்னின் எளிதாக சிதைவுபடுதலை தடுத்து சிதைவின் போது அதிக விகிதத்தில் கரிம அமிலங்களை       வெளியிடுகிறது. இதனால் இளம் நாற்றுகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க       கூடுதல் தழைச்சத்தினை இட வேண்டும் அல்லது தகுந்த நுண்ணுயிர் உட்புகுதலை பயன்படுத்த       வேண்டும்.  பசுந்தாள் உரப்பயிர்களின் வடிவங்கள்  
  மேம்படுத்தப்பட்ட       தரிசு, அதாவது தரிசில் பசுந்தாள் உரப்பயிர்கள் பயிரிடுதல். பக்கச்       சந்தில் பயிர் சாகுபடி: விரைவாக வளரும் மரங்கள், புதர்செடிகள் (பயறுவகை பயிர்கள்)       அல்லது; புற்களை வரிசையில் பயிரிட்டு, தொடர்ந்து வெட்டி விட வேண்டும்.பல       பாரம்பரிய பண்ணைய முறையில் மரங்களை பயிருடன் ஒருங்கிணைத்து பயிர் செய்கின்றனர். உணவுப்       பயிர்களுக்கு இடையில் பயறுவகை பயிர்களை தொடர் பயிர்வளர்ப்பு முறையில் பயிரிடலாம். நேரடி       மூடாக்கிடுதல்: அடர்த்தியான புற்கள் மற்றும் பயறுவகை பயிர்களை மூடு பயிர்களாக       பயிரிட்டு, அதனை களைக்கொல்லி கொண்டோ அல்லது கைகளால் அகற்றி விட்டு, உணவுப் பயிர்களை       பயிரிடுவதன் மூலம் மண் உழவு நடவடிக்கைகளை குறைக்கிறது. நிழல்       தரும் பசுந்தாள் உரப்பயிர்கள் (பழத் தோட்டங்கள், காபி பயிரிடும் பகுதிகள், பல       அடுக்கு சமையலறை தோட்டங்கள் Updated on : 06.12.2013 |