Agriculture
பசுந்தாள் எருயிடுதல்

பசுந்தாள் உரபயிர்களிலுள்ள ஊட்டசத்துகள்

பல்வேறு வகையான பசுந்தாள் உரங்கள்:

  • தரிசு நிலத்தை மேம்படுத்துதல்: எ.கா பொதுவாக காணப்படும் தரிசு நில தாவரவளர்ச்சியை குறைத்து பசுந்தாள் பயிர்கள் நன்கு வளர்கின்றன
  • ஒடுக்கமான / நெருக்கமான பயிர்த்திட்டம்: விரைவாக வளரும் மரங்கள் செடிகள் (பொதுவாக பயறுவகை) அல்லது புல்வகைத் தாவரங்கள் வரிசைகளில் பயிரிடப்படுகின்றன. மேலும் அவை தொடர்ந்து நேர்த்தியாக வெட்டி பயன்படுத்தப்படுகின்றன
  • பழமையான வேளாண் முறைகளில் காணப்படுவது போல பயிர்களுடன் மர வகை பயிர்களும் ஒருங்கிணைந்து வளர்க்கப்படுகின்றன
  • உணவு பயிர்களுக்கு இடையே குத்து பயிறுவகைத் தாவரங்கள் தொடர் பயிராக விதைக்கப்படுகின்றன
  • தாவரப் போர்வை: முதன்மை உணவு பயிர்கள் குறைவாக வளர்ந்து காணப்படும் போது மண்மேற்பரப்பில் கைகளால் அல்லது களைக்கொல்லி மூலம் நீக்கப்படுகின்றன. இந்த முறையில் உழவு குறைக்கப்படுகிறது
  • நிழல் பசுந்தாள் பயிர்கள்:

இவ்வகை நிழல் பசுந்தாள் பயிர்கள், பழத்தோட்டங்கள் காஃபி தோட்டம், பல்லடுக்கு காய்கறிதோட்டம் போன்றவற்றில் பயன்படுகிறது. பசுந்தாள் பயிர்களின் தழைச்சத்து அளவு மற்றும் நிலைநிறுத்தப்படும் தழைச்சத்து அளவு:


உள்ளூர் பெயர்
நைட்ரஜன் % தழைச்சத்து தழைச்சத்து நிலைநிறுத்தப்படும் அளவு அங்கக உயிர் பொருள் அளவு
சித்தகத்தி 2.29-3.10 115-160 கிலோ / ஹெக்டேர் 20.2 டன்டஸ் / ஹெக்டேர்
டேஞ்சா 2.55-3.21 130-185 26.3
மணிலாஅகத்தி 3.20-3.37 170-220 24.9
சணப்பு 2.80-3.15 80-130 16.8
கொள்ளு 2.16-2.77 85-125 17.6
கொழுஞ்சி 2.90-3.22 70-115 16.8

வழக்கத்தில் இல்லாத பசுந்தாள் உரப்பயிர்களின் ஊட்டச்சத்துக்கள்:

பசுந்தாள் மொத்தம் (N %) C:N விகிதம் மொத்த P (%) மொத்த K (%)
மரங்கள் (இலைகள் அல்லது கிளைகள்)
வேம்பு 
டெலோனிக்ஸ் எலாடா
டெலோனிக்ஸ் ரீஜியா
பெல்டோபோரம் பெருஜீனம் 
கேசியா நைகிரிகன்ஸ்  
2.83
3.51
2.76
2.63
2.73
70:1
27:1
32:1
34:1
-
0.28
0.31
0.46
0.37
0.18
0.35
0.13
0.50
0.50
0.50
களைகள்
ஆட்தோடா வெசிகேசா
பார்தினியம் ஹிஸ்டிரோபோரஸ்
ஐகார்னியா கிரோசிபஸ்
டிரையெந்தியம் போர்டுலாகேஸ்ட்ரம்
ஐபோமியா கார்னியா

கலோட்ரொபிஸ் ஜிஜெண்டியா
கேசியா பிஸ்டுலா
1.32
2.68
3.01
2.64
2.01
2.06
1.60
60:1
30:1
29:1
32:1
43:1
64:1
120:1
0.38
0.68
0.90
0.43
0.33
0.54
0.24
0.15
1.45
0.15
1.30
0.40
0.31
1.20

பசுந்தாள் பயிர்கள் பயன்படுத்துவதில் உள்ள தடைகள்:

  • தொடர்ந்து பயிர் சாகுபடி செய்யும் பகுதியில் எந்த ஒரு வருவாயும் இல்லாமல் 6-8 வாரங்களுக்கு மேலாக பசுந்தாள் பயிர்களை வளர்க்க விவசாயிகள் விரும்புவது இல்லை
  • கோதுமையை தொடர்ந்து நெல் பயிரிடப்படும் போது கடின வெப்பம் நிலவும் மே மற்றும் ஜீன் மாதங்களில் பண்ணை உழவு செயல்பாடுகளை செய்வதில் விவசாயிகளுக்கு கடினமாக இருக்கும்
  • பசுந்தாள் பயிர்களின் விதைகள் அதிக விலை கொண்டு காணப்படுகின்றன. குறைவான விலையில் குறிப்பிட்ட தரமான பசுந்தாள் விதைகளை பெறுவது மிகவும் கடினமான மற்றும் முக்கிய பிரச்சனையாக உள்ளது
  • விவசாயிகள் பசுந்தாள் உரங்களின் நன்மைகளை அறிவது இல்லை. ஏனென்றால் விவசாயிகள் தழைச்சத்து பயனை கண்கூடாக உணர்வது இல்லை
  • ஊடுபயிராக வளர்க்கப்படும் பசுந்தாள் பயிர்கள் முதன்மை பயிர்களுடன் போட்டியாக வளர்ந்து அவற்றின் வளர்ச்சியை பாதிக்கும் நிலை ஏற்படும்.

Updated on : 13.12.2013

 
Fodder Cholam