| பயன்கள் 
        அதிக       உணவு உற்பத்தியின் மூலம் நாட்டின் மக்கள் தொகையின் தேவையை சமநிலைபடுத்தப் படுகிறது.மறுசுழற்சி       மற்றும் வேளாண் சார் அங்ககம் போன்றவற்றின் மூலம் பண்ணை வருவாயானது உயர்த்தப்படுகிறது.நீடித்த       மண் வளம் மற்றும் அங்கக கழிவுகளின் மறுசுழற்சி மூலம் உற்பத்தி.ஒருங்கிணைந்த       வேளாண் சார் நுட்பத்தின் மூலம் உணவுகளிலுள்ள புரதம், கார்போஹைட்டிரேட் , கொழுப்பு,       தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை செறிவூட்டுகிறது.பன்றி       வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மற்றும் புறா வளர்ப்பு போன்றவற்றிலிருந்து வரும் கழிவுகளை       மறுசுழற்சி செய்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்படைகிறது.முட்டை,       பால், காளாண், காய்கறிகள் தேன் மற்றும் பட்டுப்புழு போன்ற ஒருங்கிணைந்த பண்ணை       முறை மூலம் நிலையான வருவாய் கிடைக்கிறது.ஒருங்கிணைந்த       பண்ணை முறைகளான உயிர் வாயு மற்றும் வேளாண் வனவியல் போன்றவற்றின் மூலம் ஏற்படும்       ஆற்றல் இழப்பினைத் தவிர்க்கலாம்.சாகுபடியின்       போது தீவனப்பயிர்களை ஊடுபயிராக அல்லது எல்லைப்பயிராக பயிரிடுவதால் பசு, ஆடு,       பன்றி மற்றும் முயல் போன்ற கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவு       கிடைக்கிறது.வேளாண்       வனவியலின் மூலம் மண் அரிப்பானது தடுக்கப்படுகிறது.விவசாயிகள்       குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பானது அதிகரிக்கிறது.  |