Agriculture
ஒருங்கிணைந்த பண்ணை முறை

ஒருங்கிணைந்த பண்ணைய அங்கங்கள்

  • பயிர்கள், கால்நடைகள், பறவைகள் மற்றும் வனவியல் போன்றவை ஒருங்கிணைந்த பண்ணை முறையின் அங்கங்களாகும்.
  • தானியங்கள், பயறு வகைகள் , எண்ணெய் வித்துக்கள் , தீவனப்பயிர்கள் போன்றவற்றின் ஒற்றைப்பயிர், கலப்பு / ஊடுபயிர், பலப்பயிர் ஆகியவை பயிரின் பகுதிகளாகும்.
  • பசு, ஆடு, கோழி, தேனீக்கள் போன்றவை கால்நடைகளின் பகுதிகளாகும்.
  • தடிமரம், எரிவாயு , தீவனம் மற்றும் பழ மரங்கள் போன்றவை மரங்களின் பகுதிகளாகும்.

பரிசீலனை மிக்க காரணிகள்

மானாவாரி பகுதிகளில் ஒருங்கிணைந்த பண்ணை முறையை தேர்ந்தெடுக்க கீழ்கண்ட காரணிகள் பரிசீலனைப்படுகிறது.

மண்வகைகள், மழை மற்றும் அதன் விநியோகம் மற்றும் பயிரிடப்படும் காலநிலை போன்ற காரணிகள் , தகுதியான ஆண்டுப்பயிர்கள், மரங்கள் மற்றும் கால்நடை பகுதிகளை தேர்வு செய்வதற்கு உதவுகிறது. விவசாயிகளின் தேவை மற்றும் ஆதாரம் போன்றவையும் ஒருங்கிணைந்த பண்ணை அங்கங்களை தேர்வு செய்ய உதவுகிறது.

தகுதியான தானியப்பயிர்கள் (மண் வகையைப் பொருத்து)

கரிசல் மண்

தானியங்கள்   : மக்காச்சோளம்
சிறு தானியங்கள்   : சோளம், கம்பு
பயிறு வகைகள்  : பச்சைப் பயிறு, உளுந்து, துவரை, கொண்டைக் கடலை, சோயா மொச்சை
எண்ணெய் வித்துக்கள்     : சூரிய காந்தி , செந்துரகம்
நார்ப்பயிர்    : பருத்தி
பிற பயிர்கள்    :  மிளகாய், கொத்தமல்லி

செம்மண்

சிறு தானியங்கள்  : சோளம், கேழ்வரகு, தினை, சாமை, பனிவரகு, வரகு
பயிறு வகைகள்   : அவரை,  பச்சைப் பயிறு,  துவரை,  சோயா மொச்சை தட்டைப்பயிறு
எண்ணெய் வித்துக்கள் : கடலை, ஆமணக்கு, எள்

தகுந்த தீவன பயிர்கள்

கரிசல்மண்
தீவன சோளம், தீவன கம்பு, தீவன தட்டைப்பயிறு, வேலிமசால், ரோடஸ் புல், மயில்கொண்டைபுல், எலுசின் இனங்கள்., தாம்சன் புல்

செம்மண்          
தீவனசோளம், தீவன கம்பு, நீலகொழுக்கட்டைபுல் , தீவன கேழ்வரகு, சங்கு புஷ்பம், தீவன தட்டைப்பயிறு, முயல்மசால் , காட்டுமசால், மார்வல் புல், ஈட்டிபுல், வெட்டிவேர்

தகுந்த மரங்கள்

புளிய மரம்சைமரீபா,வாகை, அரப்பு, கொடைவேல்,  மான்காது வேல்வேம்பு, ஆச்சாமரம், இலந்தைநெல்லிசவுக்கு மரம், இலவம் பஞ்சு போன்ற மரங்கள் செம்மண் நிலங்களுக்கு உகந்தவை.

கருவேல், குடை வேல் மரம்,  வேம்பு, வாகை,  ஆயா மரம், மஞ்ச நெய்தி, செம்பருத்தி, குமல மரம், சவுக்கு மரம்பெருந்தகரை மற்றும் கதம்பு  போன்ற மரங்கள் கரிசல் மண்ணிற்கு உகந்தவை.

தகுந்த கால்நடைகள் மற்றும் பறவைகள்

வெள்ளாடு, செம்மறியாடு, பசு, எருமை, புறா, முயல், காடை மற்றும் கோழி.

ஒருங்கிணைந்த பண்ணையத்தின் நீடிப்பு மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்க தேவையான வேளாண் அணுகுமுறைகள் :

  • மழையளவு மற்றும் மண் ஈரப்பத்தின் தன்மையை பொறுத்து மேம்படுத்தப்பட்ட பயிர் முறையை மேற்கொள்ளுதல்
  • வருடம் முழுவதும் அல்லது தொடர்ந்து காய்கள்/இலைகள் தரக்கூடிய தகுந்த  தானிய பயிர் இரகங்கள், மரங்களை தேர்வு செய்தல்
  • மழை காலத்தில் உபரியாக உள்ள தீவனங்கள், பயிர் கழிவுகள் போன்றவற்றை கோடை கால பருவத்திற்கு பாதுகாத்து வைக்க வேண்டும்.

Updated on : 25.11.2013

 
Fodder Cholam