Agriculture
ஒருங்கிணைந்த பண்ணை முறை

ஆராய்ச்சி முடிவுகள்

  1976 –ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பண்ணை முறை பற்றி ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டன. ஏற்காடு மற்றும் பையூர் (தர்மபுரி மாவட்டம்) போன்ற இடங்களில் 2 மையங்களிலும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு முன் பண்ணை வைத்திருப்பவர்களின் அளவு, எண்ணிக்கை, பயிர் திட்டம், பயிர் சாகுபடி முறைகள் போன்ற பண்ணை சார்ந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வைப் பொறுத்து, 5 சோதனைகள் – பயிர் + கறவை மாடு வளா்ப்பு (3 கறவை மாடுகள்), பயிர் + கோழி வளர்ப்பு (6 முட்டைக் கோழிகள்), கறவை மற்றும் கோழி வளர்ப்பு (3 கறவை மாடுகள் + 6 முட்டைக் கோழிகள்), மூலம் பயிர் மட்டும் தனித்து சாகுபடி செய்தும், பயிர் மற்றும் பண்ணைச் சார்ந்தவற்றை வளர்த்தும் வேறுபாடுகளைக் கண்டறிந்தனர். மேற்சொன்ன அனைத்து சோதனைகளிலும், பையூரில் உள்ள 2 ஏக்கர் பண்ணையில் கறவை மாடு வளர்ப்பினால் ஒரு வருடத்தில் அதிகபட்ச வருமானத்தையும் (ரூ.12,180 /எக்டர்/வருடம்) வேலைவாய்ப்பையும் (518 மனித நாட்கள்) தருகிறது. ஏற்காட்டில் கறவை மாடு மற்றும் கோழி வளர்ப்பினால் அதிகபட்ச வருமானமாக (ரூ.13822/எக்டர்/வருடம்) மற்றும் வேலைவாய்ப்பையும் (556 மனித நாட்கள்) தருகிறது.

  1980 –களில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூன்று பரிமாணங்களான கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கத்திலிருந்து பண்ணை முறையை மேம்படுத்துவது பற்றி புதிய அணுகுமுறையை மேற்கொண்டது. பண்ணை மேலாண்மை முறை பற்றிய முதுகலை பட்டப்படிப்பும் தொடங்கப்பட்டது. இந்த பட்டபடிப்பில், ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி, நிலையத்தில் மாணவர்களை நெல் சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணை முறையில் கறவைமாடு, ஆடு, கோழி வளர்ப்புடன் மீன் வளர்ப்பிலும், மானாவாரி நிலங்களில் கீழ் அருப்புக்கோட்டையில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்திலும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஆய்விலிருந்து கண்ட முடிவுகளை பின்வருமாறு காணலாம்.

நஞ்சை நிலம்:
  ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில், சிறிய பண்ணை நிலைகளில் கோழி மற்றும் மீன் வளர்ப்பை கலந்து பயிர் சாகுபடி செய்வது பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு  2 எக்டர் நிலப்பரப்பில் செய்யப்பட்டது. ஒரு எக்டரில் உழவர்களால் பாரம்பரிய முறைப்படி பயிர் சாகுபடி செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த பண்ணை முறையில் 6.96 எக்டரில் பயிரும், 0.04 எக்டரில் கோழி மற்றும் மீன் வளர்ப்பும் மேற்கொள்ளப்பட்டது. இதிலிருந்து நிகர வருமானம் ரூ.20,188/எக்டர்  மற்றும் ரூ.11,730 / எக்டர் என்று ஒருங்கிணைந்த பண்ணை முறை மற்றும் பாரம்பரிய பயிர் சாகுபடியிலிருந்தும் பெறப்பட்டது. கூடுதலாக 150 நாட்களுக்கு வேலைவாய்ப்பும் ஒருங்கிணைந்த பண்ணை முறையில் பெறப்பட்டது.

   ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கலப்பு பண்ணை முறையில் வாத்து + மீன் வளர்ப்பும் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் 2 ஆய்விற்கும் ஒவ்வொரு எக்டர் நிலப்பரப்பு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒரு எக்டரில், உழவர்களால் பாரம்பரிய முறைப்படி பயிர் சாகுபடி செய்யப்பட்டது. அடுத்த ஒரு எக்டரில், 0.973 எக்டரில் பயிர் சாகுபடியும், 0.027 எக்டரில் வாத்து + மீன் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டது. பாரம்பரிய பயிர் சாகுபடியிலிருந்து (குறுவை – தாளடி நெல் – நெல் அடுத்து பயிறு வகைகள்) ரூ.13,740/-ம் , மாற்றியமைக்கப்பட்ட பயிர் சாகுபடியில் (நெல் – நெல் – பருத்தி / மக்காச்சோளம்) 22,676 ரூபாயும் கிடைத்தது. கூடுதலாக 8886 ரூபாயும் இந்த முறையிலிருந்து பெறப்பட்டது. வாத்து மற்றும் மீன் வளர்ப்பிலிருந்து 0.027 எக்டர் நிலப்பரப்பிலிருந்து, 1441 ரூபாய் நிகர லாபம் கிடைத்தது. கலப்பு பண்ணை முறையிலிருந்து கூடுதலாக 10,327 ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளது. பாரம்பரிய சாகுபடி முறையில் 252 மனித நாட்களுக்கு வேலை வாய்ப்பும், கலப்பு பண்ணை முறையில் 396 மனித நாட்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது. மற்றொரு ஒப்பு ஆய்வின் பாரம்பரிய சாகுபடி முறையில் நெல் – நெல் அடுத்து பயிறு வகை முறையும், ஒருங்கிணைந்த பண்ணை முறையில் நெல் – நெல்  - நெல் அடுத்து உளுந்து /நெல் அடுத்து பருத்தி மற்றும் தீவனப்புல்லுடன் 3 கறவை மாடுகளும் வளர்க்கப்பட்டது. பாரம்பரிய சாகுபடி முறையிலிருந்து நிகர வருமானம் 8422 ரூபாயும், ஒருங்கிணைந்த பண்ணை சாகுபடி முறையிலிருந்து 10,912 ரூபாயும் பெறப்பட்டுள்ளது. கறவை மாடுகளிலிருந்து 8,896 ரூபாய்  கிடைத்துள்ளது. கறவை மாடு கலந்த பண்ணை சாகுபடி முறையிலிருந்து கூடுதலாக 11,479 ரூபாயும் வருமானமாக கிடைத்துள்ளது. கூடுதலாக 396 மனித நாட்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

நஞ்சை நிலம்
  நஞ்சை நிலத்தில், பயிர் சாகுபடியுடன், கோழி, மீன், காளான் வளர்ப்பு ஒருங்கிணைந்து செய்யலாம். பயிர் சாகுபடி 0.36 எக்டரிலும், மீன் குட்டை 0.04 எக்டரிலம், கோழிக் கூடாரம் மீன்குட்டைக்கு மேல் அமைக்க வேண்டும். கோழிப் பிரிவில் 20 கோழிக்குப்பை, 300 மீன் குஞ்சுகளும் வைத்து வளர்க்கலாம். ஒருங்கிணைந்த பண்ணை முறையிலிருந்து மொத்த வருமானம் ஒரு எக்டருக்கு ஒரு வருடத்திற்கு 70,619 ரூபாயும், சோதனைப் பிரிவில் ரூ.33,446/எக்டர்/வருடம் கிடைக்கிறது. ஒருங்கிணைந்த பண்ணைமுறையில், பயிர் சாகுபடியிலிருந்து 59.3 சதவீதமும், கோழி வளர்ப்பிலிருந்து 8.7 சதவீதமும், மீன் வளாப்பில் 7.4 சதவீதமும், காளான் வளர்ப்பில் 24.6 சதவீதமும் வருமானம் கிடைத்துள்ளது. கூடுதலாக 18300 ரூபாய் ஒரு எக்டரு்ககு ஒரு வருடத்திற்கு கிடைக்கப் பெறுகிறது.

மீன் + கோழிப்பண்ணை  
   

புன்செய் நிலம்
  புன்செய் நிலங்களில், கறவைமாடு மற்றும் சாண எரிவாயு 1 எக்டர் பரப்பளவில் ஒருங்கிணைந்து செய்யலாம். கறவைமாட்டு பிரிவில், 3 தரமுடைய ஜெர்ஸி கலப்பின கறவை மாடுகள், 2 கன்றுக்குட்டிகளை கொண்டது. பண்ணை மற்றும் மாடுகளின் கழிவுகளை பயனுள்ள வகையில் மறுசுழற்சி செய்வதற்கு, 2 கன அடி கொள்ளளவு கொண்டு அமைக்கப்பட்டது. இதிலிருந்து ஒரு வருடத்திற்கு, ஒரு எக்டரிலிருந்து 20,202 ரூபாய் நிகர வரமானம் வரும் என்று ஆய்வில கண்டறியப்பட்டுள்ளது.

மானாவாரி நிலம்
  தமிழ்நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளை கருத்தில் கொண்டு, ஒரு எக்டர் பரப்பளவில், ஆடுவளர்ப்பு பயிர் சாகுபடியுடன் ஒருங்கிணைந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆடு வளர்ப்பு பிரிவில் 20 டெல்லிச் சேரி வகையை சேர்ந்த பெண் ஆடுகளும், ஒரு ஆண் ஆடும் உள்ளடக்கியது. ஆய்வின் முடிவுகள் பாரம்பரிய பயிர் சாகுபடியுடன் ஒப்பீடு செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த பண்ணை முறையிலிருந்து மொத்த வருமனாம் 12,400 ரூபாயும், பாரம்பரிய பயிர் சாகுபடியிலிருந்து 3,697 ரூபாயும் கிடைத்தது. ஒருங்கிணைந்த பண்ணைமுறையின் ஆடு வளர்ப்பிலிருந்து 57.4 சதவீதமும் கிடைக்கப் பெறுகிறது. கூடுதலான நிகர வருமானம் 3400 ரூபாயாகும். 106 மனித நாட்களுக்கு வேலைவாய்ப்பும் இதிலிருந்து கிடைக்கிறது. கோயமுத்தூர் மாவட்டத்தில் பல இடங்களில் நேரடி பண்ணை ஆய்வு முறை மேற்கொள்ளப்பட்டது. பலதரப்பட்ட பண்ணை உள்ளவர்களிடம் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இதிலிருந்து, முன்னோடி பண்ணைகள் தோ்வு செய்யப்பட்டு பாசனம் மற்றும் மானாவாரி நிலைமைகளில் சோதனை செய்யப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் தொழில் நுட்ப உதவியுடன் இந்த பண்ணைகளில் இருக்கக் கூடிய ஆதாரங்களை, வைத்து, உழவர்களின் தேவைகள், பிரச்சனைகள் என்னவென்று கண்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து பண்ணைகளை மேற்பார்வையிட்டு, குறிப்பிட்ட பண்ணைகளில் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டது.


மானாவாரி பருத்தி மண்களுக்கான ஒருங்கிணைந்த பண்ணை முறை
   பாசன வேளாண்மை போல் இல்லாமல், மானாவாரி பண்ணை முறையில் உள்ள இடர்பாடுகளால் வருமானம் பெற வழியில்லாமல் போகிறது. திடீரென்று பெய்யும் மழை, அதிக மழைப்பொழிவு பயிர்களுக்கு தொடர்ச்சியான சேதம், நிலையில்லாத மகசூல் மற்றும் வருமானம், பயிர் தொழில்நுட்பங்களுக்கான கவனிப்பு மட்டும் உழவர்களுக்கான தீர்வைத் தருவதில்லை. இதற்கான தீர்வானது, பண்ணை முறையை ஒருங்கிணைந்த முறையாக மாற்றுவதேயாகும். இதை நினைவில் வைத்து, மானாவாரி பருத்தி உழவர்களுக்கான ஒருங்கிணைந்த பண்ணை முறை உருவாக்கப்பட்டுள்ளது.

  பயிர் சாகுபடி கால்நடை (ஆடு வளர்ப்பு) மற்றும் பழத்தோட்டம் பயிர்கள் ஒருங்கிணைந்து செய்வது லாபகரமான ஒன்றாகும். 4 ஏக்கர் பரப்பளவில், கால்நடையுடன் (1-5 டெல்லிச் சேரி ஆடுகள், இணைந்து 3 ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடியும், ஒரு ஏக்கரில் இலந்தை (அ) கொய்யா (அ) வறட்சியைத் தாங்கக் கூடிய பழமரம், ஆகியவை கொண்டது. பயிர் சாகுபடியிலிருந்து 3300 ரூபாய் கூடுதலாக வருமானம் கிடைக்கும். பண்ணை இருப்பைப் பொறுத்து, ஒருங்கிணைந்த பண்ணை முறையின் பிரிவுகளின் அளவுகள் மாற்றப்படும். இந்த முறையினால் அதிக வருமானம் கிடைக்கும். பண்ணை இரும்பைப் பொறுத்து, ஒருங்கிணைந்த பண்ணை முறையில் பிரிவுகளின் அளவுகள் மாற்றப்படும். இந்த முறையினால் அதிக வருமானம் கிடைக்காது. ஆனால் மழை குறைவாக பொழியும் வருடங்களில் வருமான இழப்பை ஈடுகட்ட உதவும்.

 
Fodder Cholam