Agriculture
நீர்த்தேக்க மேலாண்மை

வறட்சி வாய்ப்புள்ளப்பகுதி திட்டம்

வறட்சி நில மேம்பாட்டுத்திட்டம் (DPAP)

வறட்சி நில மேம்பாட்டுத் திட்டம் என்பது விளைநிலம் அல்லாத பகுதிகளில், வேளாண் காடு வளர்ப்பு, புல்வெளி வளர்ப்பு, தோட்டக்கலையை மேம்படுத்துவதன் மூலம் மண் மற்றும் ஈரப்பதத்தை பாதுகாத்தலும், நிலத்தை வேறு விதமாகப் பயன்படுத்துவதும் ஆகும். மேலும் இந்த திட்டம், சிறந்த பயிர் மேலாண்மை தொழில் நுட்பங்களின் மூலம் விளைச்சல் நிலத்தையும் பயனுள்ள முறையில் ஆக்குவதே ஆகும். சுற்றுப்புறசூழல்  பாதுகாப்பு, சுற்றுப்புற சூழலை சரிசமமாக வைத்தலே இந்த திட்டத்தின் நோக்கமாகும். சாதாரண தடுப்பணை முதல் பெரிய பாசனத் தொட்டிகளை அமைப்பது தழை வளர்ச்சி மூலம் தடுப்பு முதல் சம உயர வரப்பு வரை பலவிதமான வேலைகள் இதில் நடைபெறுகின்றன. திட்ட அமுல்படுத்தும் துறையை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள், ஆராய்ச்சி மையங்கள் விலை மலிவான உள்ளூர் தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான நீர்த்தேக்க மேம்பாட்டிற்கான பொருட்களை அமுல்படுத்துவதற்கான வழிமுறைகளும் இந்த திட்டத்தில் தரப்பட்டுள்ளன. மேம்பாட்டுத் திட்டங்களில் மக்களின் பங்களிப்பின் முக்கியத்துன்பத்தை இந்த திட்டம் வலியுறுத்துகிறது.

நோக்கங்கள்

  • வறட்சியினால் பயிர்கள் மற்றும் கால்நடைகளின் உற்பத்தி நிலம், நீர் மற்றும் மனித வளங்களின் உற்பத்தித் திறனைப் பாதிக்கக்கூடிய மோசமான விளைவுகளை குறைத்தல்.
  • நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நீர்த்தேக்கத்தை நம்பியுள்ள சமுகத்துக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல்
  • நீர்த்தேக்கத்தின் இயற்கை வளங்களின் நிலம், நீர், தாவர வளர்ச்சி, மனித மேம்பாடு மற்றும் இதர கிராம  பொருளாதார வளங்களை தேவையான அளவு பயன்படுத்துதல்
  • இதர வருமான தரக்கூடிய செயல்களை ஊக்குவித்தல் மற்றும் கிராமத்தின் சுற்றப்புரச் சூழலை சேதமடையாமல் வைத்துக் கொள்ள ஊக்குவித்தல்

வழிமுறைகள்

அனைத்து அபிவிருத்தி வளர்ச்சி திட்டங்களை அமுல்படுத்த ஒரே மாதிரியான வழிமுறைகள் இந்த திட்டத்தில் தரப்பட்டுள்ளது.

  • வளர்ச்சி திட்டங்கள் நீர்த்தேக்கத்தை பொறுத்து அமுல்படுத்தப்படும்
  • 500 ஹெக் அளவுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்த்தேக்கத்திற்கு இந்த திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. மற்றும் இந்த திட்டம் 4 முதல் 5 வருடங்களுக்கு செயல்படுத்தப்படும்.
  • நீர்த்தேக்க திட்டங்கள் அந்தந்த கிராம எல்லைக்கு உட்பட்டது
  • நீர்த்தேக்கப் பகுதிகளை திட்டமிடவும், உருவாக்கவும் பொதுமக்கள் நேரடியாக பங்கேற்றல் மற்றும் அதை திட்டத்திற்கு பிறகு பராமரித்தல்.
  • பஞ்சாயத்த ராஜ் அமைப்புக்ள மாவட்ட வட்ட கிராம மட்டங்களில் பார்வையிடவும், கண்காணிக்கவும் உரிமை உள்ளது
  • தன்னார்வ நிறுவனங்களுக்கு இந்தத் திட்டங்களை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக மக்களை ஊக்குவித்தல், சமுக அமைப்பு மற்றும் பயிற்சி கொடுத்தல்
 
Fodder Cholam